தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

கவிதை


என் கவிதைய நேசித்தவள்
என் காதலை நேசிக்கவில்லை

என் சுவாசமே நீ தான்
நீ சுவாசிக்க மறந்தால் நான் மரணித்து விடுவேன்

என் கவிதையே என்னவளிடம் போய் சொல்
நீ இல்லாமல் அவன் கவிதை கூட அழகில்லை என்று


கவிதைகள் உலகம் ..smd safa..

தகுதி


எனக்கு அழகு இல்லை
எனக்கு படிப்பிலை

எனக்கு வசதியும் இல்லை
சொல்லிக்கொளுமளவுக்கு
உறவுகளும் இல்லை

தெரிந்து தான் காதலித்தாய்
நம் இருமனம் சேர்ந்து
ஒரு மனம் என்னும்

திருமணத்தில் சேரும் முன்
சொல்கிறாய் உனக்கு தகுதி
இல்லை என்று

உன் காதல் என்ன வியாபாரமா
என்ன விலை சொல்லடி (தகுதி தான் )

உன் அன்பு என்ன வெற்று காகிதமா
உன்னால் எப்படி முடிந்தது

நம் காதலுக்கு (அன்புக்கு )
விலை கோர நீ என்ன விலை மதுவோ


கவிதைகள் உலகம் ..smd safa..

என் காதல்


என் காதல்
கருவறையில் என் தாயை
காதலித்தேன்
சிறு பருவத்தில் என் உடன்
பிறப்புகளை காதலித்தேன்
என் இளமை பருவத்தில்
என் நண்பர்களை காதலித்தேன்
என் கவிதை
கருவறையில் தொடங்கி
கண்ணீரில் நனைந்து
தண்ணிரில் முழ்கி
கல்லறையில் முடிய
போகிறது
அதுவும் பெண்ணாலே..

கவிதைகள் உலகம் ..smd safa..

நினைவுகள்


நான் தவற விடவில்லை உன்னை
நீ தான் தவற விட்டு விட்டாய் என்னை
நான் உயீர் வாழ்வதே உன்
நினைவுகள் உள்ளதால் தான்
உன் தாய் உன்னை பத்து மாதம்
கருவில் சுமந்தாள்
நான் உன்னை ஒரு
தலை முறை முழுவதுமாய்
சுமந்து கொண்டு இருக்கிறேன்
உன் நினைவுகள் என்னுள்
வெடித்து சிதறும் எரிமலையாக..

கவிதைகள் உலகம் ..smd safa..

என் காதல்


பூவை காதலித்தேன்
அது வாடிவிடும் என்று தெரியாமல்
மழலைய காதலித்தேன்
அது மறந்து விடும் என்று தெரியாமல்
தீயை காதலித்தேன்
அது அணைந்து விடும் என்று தெரியாமல்
பணியை காதலித்தேன்
அது உருகி விடும் என்று தெரியாமல்
என் வாழ்க்கைய காதலித்தேன்
அது முடிந்து விடும் என்று தெரியாமல்
உன்னையும் காதலித்தேன்
நீ என்னை உருக்கி விடுவாய் என்று தெரியாமல்..

கவிதைகள் உலகம் ..smd safa..

மரணம்


கண்ணும் கண்ணும்
சந்தித்து கொண்டது
பேராபத்து நிகழ்ந்தது
கரணம் தப்பினால்
மரணம்
சாலையில் மட்டும் அல்ல
காதலிலும் தான்.

கவிதைகள் உலகம் ..smd safa..

பிறந்த நாள் வாழ்த்து


தாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும்,
சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும்,
வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும்,
பாடி வரும் குயிலே, உன்னை இசை வாழ்த்தும்,
பூத்து வரும் புன்னைகையே,
உன்னை என் அன்பு வாழ்த்தும்,

என்னில் கலந்து இருந்த கவிதையே,
உன்னை என் வரிகள் வாழ்த்தும்,
இன்று போல் என்றும் மகிழ்ச்சி பொங்க உன்னை என் இதயம் வாழ்த்தும் ............இதய கனிந்த பிறந்த நாள்" நல் வாழ்த்துகள்..

கவிதைகள் உலகம் ..smd safa..

உன் கால் தடம்

நான் தான் நிழல் என்று
தெரியாமல் என்னை உதறுகிறாய்
கண்ணே எங்கு செல்கிறாய் !!
உன் நிழல் போல் தொடருகிறேன் !!
உன் கால் சுவடு பற்றி கொண்டு
சிறு குழந்தை போல் தவிக்கின்றேன் !!
என் வாழ்க்கைக்கு முற்று புள்ளி
வைத்து விட்டு போகிறாய்!!!!

கவிதைகள் உலகம் ..smd safa..

எனது ஐந்துன்பம்


விக்கலாயி வந்து நீ என்னை
தும்மலாயி நினைத்து விட்டு
இருமலாயி நெஞ்சில் வாழ்ந்து
கொட்டாவி கனவுகளை தந்து விட்டு
எப்பமாயி மறைந்தாயே !!

கவிதைகள் உலகம் ..smd safa..

தகுதி

நம் காதல்
உன் புன்னகையில் பூத்து
நம் புரியாமையில் முடிவடைந்தது!!
என் காதல்
உன்னை சேர தகுதி இல்லாமல்
தண்ணிரில் மிதக்கும் ஓர் ஓடம் போல்!!
உன் காதல்
புன்னகை விசி என்னை சிறை எடுத்து விட்டு
தகுதி கோரி தள்ளுபடி செய்தாய்!!!

கவிதைகள் உலகம் ..smd safa..

இதயம்


கடந்து போனது அந்த இதயம் -
 அதைக் கண்டு
கனத்துப் போனது
 இந்த இதயம் !!!!

கவிதைகள் உலகம் ..smd safa..

காதல்

கண்களில் தொடங்கி
கல்லறையில் முடிகிறது
உண்மை காதல்
புன்னகையில் தொடங்கி
நடை பிணமாக முடிகிறது
ஒரு தலை காதல்..

கவிதைகள் உலகம் ..smd safa..

உன் பெயர்


உன் பெயர் தான்
என் முதல் கவிதை ...
கண்ணே உன்
நினைவு ஒரு பொக்கிஷம்
அதை கவிதையாக வடிக்கிறேன்

கவிதைகள் உலகம் ..smd safa..

பெண்ணால்


கருவறையில் இருந்தே
தொடங்கி விட்டேன்
கண்ணீர் விட
அன்று தன்னால்
இன்று பெண்ணால்..

கவிதைகள் உலகம் ..smd safa..

சோகங்கள்


ஒரு மனிதனின்
ஒரு புன்னகைக்குள்
எத்தனை எத்தனை
சோகங்கள் மறைக்க
படுகின்றன !!

கவிதைகள் உலகம் ..smd safa..

உன்னுள்


ஒரு முறை நீ என்னை
வெறுத்து விட்டாய் !!
பல முறை தொலைந்து
விட்டேன் உன்னுள்


கவிதைகள் உலகம் ..smd safa..

மரணம்


அன்பே உன்னை காதலித்தால்

கிடைத்த பலன் எமாற்றம்

மட்டும் தான்

நீ ஏமாற்றியதால் தான்

என்னவோ உன்னை

நினைக்காமல் இருக்க முடியவில்லை

நீ தலையில் வைக்கும் பூவுக்கு

ஒரு நாள் தான் மரணம்

உன் நினைவை சுமக்கும்

எனக்கு தினம் தினம் மரணம்


கவிதைகள் உலகம் ..smd safa..


நினைவுகள்

கவிதைகள் உலகம் ..smd safa..

நம் நினைவுகள் தான் என் கவிதை 
என் மனச்சிறைய உடைத்து என்னுள் கலந்தவளே !!
என் உணர்வை அள்ளி சென்று தியினுள் சுட்டவளே !!
அன்பு கொண்டு  என்னை அபகரித்தவளே !!!
உன்னுடன் வாழ்ந்தது சில நிமிடங்கள் தான் 
என்றாலும் பல தலை முறைகள் வழ்ந்ததாயி உணர்கிறேன் !!
உன் பார்வை என்னை கொன்றாலும் 
உன் நினைவுகளும் நீ தந்த வலிகளும் 
என்னை உன் உணர்வோடு வழ சொல்லுதடி !!
 

கவிதை எழுத படித்தேன்


காதலிக்க கற்று கொல்லாத நான்
கவிதைகள் உலகத்துக்கு வந்து கவிதை எழுத
கற்று கொண்டேன் கவிதை பிடிக்கும்
அது அவள் வடிவாக இருந்தால்
காதல் பிடிக்கும் காதலிப்பது அவளாக இருந்தால்
எனக்கு கவிதை எழுதுவது
கடினமான விஷயம் இல்லை
அதை கவிதையாக நிருபிப்பது
தான் கடினமாக உள்ளது


கவிதைகள் உலகம் ..smd safa..

படிக்காதவன்

கவிதைகள் உலகம் ..smd safa..


எழுத படிக்க தெரியாதே என்னை
பேனா எடுக்க வைத்தவளே !!!!
என் காதலை வளர்த்தேன்
உன்னை வைத்து கவிதை படைத்தேன்
காவியம் படைத்தேன்
உன்னை வர்ணித்து வர்ணித்து
என் வலிகள் மறைந்து போனதடி !!
என் உயீர் உன்னுள் கலந்ததடி!!!
நீ எப்போது என் உயிரை கரைப்பாய் !!!
கரைத்து விடு கடலில்
அந்த கடலாவது ஆறுதல்
கொடுக்கட்டும் என் மரணத்திற்கு
 

நான்


என்னை போல்
என் கவிதையும்
தெருவில் கிடக்கிறது
குப்பையாக


கவிதைகள் உலகம் ..smd safa..

அனுபவம்


வாழ்க்கை அனுபவம் போதும்
கவிதை எழுதுவதற்கு
காதலிக்க வேண்டிய
அவசியம் இல்லை


கவிதைகள் உலகம் ..smd safa..


நீயின்றி இல்லை ஓர் உலகு


சுவரில்லமால் சித்திரம்
எழுத முடியாது !
ஆம் பெண்ணே நீயின்றி
ஓர் அணுவும் அசையாது
என்னுள்
சத்தம் இல்லமால் என்னுள்
வந்தாய் !
சலமின்றி என் இதையத்தை
இரண்டு ஆக்கினாய்!
அதில் ஒன்று
உனதாக்கி கொண்டாய் !!


கவிதைகள் உலகம் ..smd safa..

மூளை - இதயம்


'நினைவுகூர்தல் மூளை இல்லாதவர்களுக்கு எளிது'

ஆனால்

மறந்துவிடுதல் இதயம் உள்ளவர்களுக்கு கடுமையானது ..


கவிதைகள் உலகம் ..smd safa..

என்னவளின் அழகு

அன்பே!
அழகுக்கு இலக்கணம் தெரியவில்லை
உன்னை காணும் வரை..
கவிஞன் ஆனேன்
பூ வாடி விடும் அதன் வாசமும் வாடாது..
நாம் கொண்ட நேசமும் மாறாது..

கவிதைகள் உலகம் ..smd safa.

நீ இல்லாமல்


அருகில் இருக்கும் வரை
அவளது அன்பு எனக்கு தெரியவில்லை...
அவள் என்னை விட்டு விலகி சென்ற பிறகு
இந்த உலகமே எனக்கு தெரிய வில்லை...


கவிதைகள் உலகம் ..smd safa..

உன்னோடு வாழ

உன் விரல் கோத்து நடக்க ஆசை ..
உன் குரல் கேட்டு தூங்க ஆசை ..
மர நிழலோடு அமர்ந்து பேச ஆசை..
உன் பல நினைவோடு வாழ ஆசை ..
உன் சிரிப்பை சிறை பிடிக்க ஆசை ..
உன் சீற்றத்தை தீ பிடிக்க ஆசை ..
உன் மனதோடு மலர ஆசை...
உன் தலை முடியோடு உறங்க ஆசை ...
இவை ஒன்றும் நடக்க வில்லை என்றால்


மண்ணோடு மண்ணாக ஆசை..

கவிதைகள் உலகம்..  ..smdsafa.net..

தாய் அன்பு

என்னைவிட இளையவள் தான் நீ
என்கிறபோதும் எங்கிருந்து கற்றாயடி
என்னையே குழந்தையாய் நேசிக்கிற தாயன்பை??


கவிதைகள் உலகம் ..smd safa..

வாடும் ரோஜா

அந்த காலத்து நாம் நினைவுகளை நினைத்தேன் !
கடந்த காலங்களை நிகழ்வுகளை நினைத்து
பார்க்கையில் என்னுள் ஒருவித நெருடல்
நாம் கால் கடந்த தடங்களை தேடி சென்றேன்
அங்கு ஒரு அதிசயம் கண்டேன்
உன்னுருவம் பொறித்த சிலை ஒன்று கண்டேன்
என் வர்ணனையின் புன்னைகை
வாசம் அதில் விச கண்டேன்
காண்போரை வியக்க வைக்கும் உன்னழகு
கண்டு அதை வடிவமைத்தவனும்
மலைத்து போய் சிலையாக கண்டேன்
உன் நினைவு என்னும் தோட்டத்தில்
வாடும் இந்த பூவுக்கு வழி சொல் கண்ணே..


கவிதைகள் உலகம் ..smd safa..

ஆசை


உன் விரல் கோத்து நடக்க ஆசை ..
உன் குரல் கேட்டு தூங்க ஆசை ..
மர நிழலோடு அமர்ந்து பேச ஆசை..
உன் பல நினைவோடு வாழ ஆசை ..
உன் சிரிப்பை சிறை பிடிக்க ஆசை ..
உன் சீற்றத்தை தீ பிடிக்க ஆசை ..
உன் மனதோடு மலர ஆசை...
உன் தலை முடியோடு உறங்க ஆசை ...
இவை ஒன்றும் நடக்க வில்லை என்றால்
மண்ணோடு மண்ணாக ஆசை..


கவிதைகள் உலகம் ..smd safa..

என் காதல்


உன்னிடம் சொல்ல எனக்குதான் தகுதி இல்லை,
ஒவ்வொரு முறை துளிர்க்கும் போதும் கிள்ளி எரிகிறேன் ,
வேரை எடுக்க மனமில்லை ,
என்னுள் மட்டுமாவது வாழ்ந்து விட்டு போகட்டுமே ,
என் காதல்..


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் இதயத்தை கடனாக கொடு


என் அன்பை அடகு வைக்கிறேன்
உன் இதயத்தை கடனாக கொடு
நித்தமும் நினைவுகளை வட்டி கட்டுகிறேன்
களங்கமில்லா கனவுகளை காணிக்கையாக்கி
காதலை அசலாக்கி விடு.....


கவிதைகள் உலகம் ..smdsafa..

புரிந்த நட்பில் பிரிந்த தோழி


நட்பின் சாரலில்
நனையவைத்தாய்
எனக்குள் குளிர
உனக்குள் கொடுகினாய்...!

கோபத்தின் சுவாலையில்
கொதிக்கும்போதெல்லாம்
அன்பால் ஊதி
அணைய வைத்தாய் ...!

காதல் என்பது


காதல் என்பது
ஒரு காற்று மாதிரி
அதை அனைவரும்
சுவாசித்தே ஆக வேண்டும்
சிலர் திருமணதிற்கு பின்
பலர் திருமணத்திற்கு முன்


கவிதைகள் உலகம் ..smd safa..

நட்பும் காதலும்


நட்பும் காதலும் என் இரு கண்கள்;
காதல் என்ற முள் என் காதல்
கண்ணில் குத்தியது
நட்ப்பு கண் எனக்கு கண்ணீரை
தந்து ஆறுதல் கொடுத்தது
காதல் ஓர் ஜடம்
நட்பு ஓர் உயீர்


கவிதைகள் உலகம் ..smd safa..

இதுவா ஆணாதிக்கம்?


சிலநேரம் நீ மற்றவர் முன்பு,
மரியாதை குறைவாய் பேசினால்,
கொடுங்கோபம் நெஞ்சை ஆட்கொள்கிறது
அதேநேரம்,
உன் அருகே தனியே இருக்கும் சமயம்,
நீ மரியாதையாய் பேசினால்,
அங்கே ஆத்திரம் அலைமோதுகிறது,
அன்பே,
இதுவா ஆணாதிக்கம்?


கவிதைகள் உலகம் ..smd safa..

வெற்றிநிச்சயம்


தேனீக்கள் ஓய்வின்றி உழைத்தால்
தித்திக்கும் தேன் நிச்சயம்
உழவர்கள் ஓய்வின்றி உழைத்தால்
உயிர்வாழ உணவு நிச்சயம்
தோல்விகளையும் துன்பங்களையும்
கஷ்டங்களையும் நஷ்டங்களையும்
தாங்கிக்கொண்டு தன்னம்பிக்கையோடு
உழைத்தால் வெற்றிநிச்சயம்


கவிதைகள் உலகம் ..smd safa..

காதல் - காமம்

எல்லா காதலிலும் காமம் இருக்கும்.ஆனால்
எல்லா காமத்திலும் காதல் இருப்பதில்லை.


கவிதைகள் உலகம் ..smd safa..

என்றும் உன் நினைவில் வாழும்


காதல் வாழ்க்கையின் வெற்றிக்கு அஸ்திவாரம்
உங்கள் காதலின் வெற்றி
நீங்கள் படைக்கும்
அடுத்த தலை முறையினர்.

உங்கள் காதலியின் அழகையும் காதலியுங்கள்
அழகு இல்லாதவற்றையும் காதலியுங்கள்..

உடலை காதலியுங்கள் ...
மனதையும் சேர்த்து காதலியுங்கள்..

எதையும் எதிர் பாராது காதலியுங்கள்
நீங்கள் எதிர் பாரா காதல் உங்களிடம்...

ஆத்மாவை காதலியுங்கள்..
காதலில் முக்தி அடைய....


கவிதைகள் உலகம் ..smd safa..

தொலைத்து விடாதே
உன்னை தேடி வரும்
அன்பை விட்டு விடாதே பிறகு நீ
தேடி தேடி சென்றால்
கூட
அது கிடைக்காமல்
போய் விடலாம்..


கவிதைகள் உலகம் ..smd safa..

மண்ணை தழுவும் பூ ஒன்று


இதயம் திறந்து உள்ளம்
மகிழ்ந்து
உன்னை காதலித்தவன்
அவன். . !
ஒரு வேளை மரணம்
அவனை
தழுவினாலும்
உன்
பெயரையே சொல்லி
கல்லறை செல்லும் அவன்
உடல். . !
அன்பே நீ
சிந்தாதே கண்ணீர்
மண்ணை தழுவும்
பூ ஒன்று உன்
கை பட்டு அவனை
தழுவட்டும்
கல்லறையில். .


கவிதைகள் உலகம் ..smd safa..

கள்ளிச்செடியில் நம் பெயர்


நீ பிரிந்து சென்றபோதும்
உன்னையும்,
என்னையும்
பிளவு படுத்தாமல்
வைத்திருக்கிறது
இருவரும் சேர்ந்து
பெயர் எழுதிய கள்ளிச்
செடி.கவிதைகள் உலகம் ..smd safa..

கோடி வாழ்த்துக்கள்


உயிரானவனே....
அன்புடன் நீ பழகிய
நாட்கள்
என் நெஞ்சில்
ஊஞ்சலாட…
உன் பிறந்த
தினத்தினை இன்பமுடன்
இன்று நீ கொண்டாட……
உற்றார்கள்
முன்னிலையில்
ஊராரும்
உன்னை பாராட்ட……
பெற்றோர்கள்
அதை பார்த்து

மனதோடு மனம் நிறைந்த

உன் பார்வைபடும்

தொலைவில் தான்
உன் கைக்கெட்டும்
தூரத்திலே தான்
எப்போதும்
காத்திருக்கிறேன்
என்றும்
மாறா காதலோடு
உன்னை சுமக்கும்
மனதோடு
மனம் நிறைந்த
அன்போடு...!!


கவிதைகள் உலகம் ..smd safa..

அவளுக்கு நான் உயிர் தான்


பெண் என்றால்
அது அவள் தான்..
அழகு கண் என்றால்
அது அவள் விழிகள்
தான்..
கலர் என்றால்
அது அவளின்
கலையான
கருப்பு நிறம் தான்..
காதலன் என்றால்
அவளுக்கு நான் உயிர்
தான்..
கல்லறை என்றால் அதில்
நாங்கள்
உரங்கும் இரு இதயங்கள்
தான்..


கவிதைகள் உலகம் ..smd safa..

நான் யார்?


கண்ட...கண்ட...
இடங்களில் மலரும்
காட்டு மலர் அல்ல
காதல் ...!!
உணர்வுபூர்வமான
உள்ளங்களில்
மலர்வதுதான்
உண்மையான காதல்...!!
நேசிக்க தெரியாத
யோசிக்க தெரியாத-
உனக்கு
உண்மையான காதல்
நீ
தொடமுடியா தூரம்தான்...!
நீ என்றும் என் காதலனாக
இருப்பாய்
ஆனால்
உன்னை பொருத்த
வரையில்
உனக்கு நான்
யாரோ தான்... !கவிதைகள் உலகம் ..smd safa..

நல்ல நண்பன் போது


ஒரு நல்ல நண்பன் போதும்
நம் வாழ்க்கை
முழுவதற்கும்!!!

ஆனால்...

ஒரு வாழ்க்கை போதாது
நம் நண்பர்களுடன்
வாழ்வதற்கு..!!!


கவிதைகள் உலகம் ..smd safa..

வாடிய ரோஜாவாய்

ஊரே என்னைத் தூக்கி
எறிந்த போதும்
கண்ணீரோடு காயப்போதும்
உனக்காய் நான்
இருப்பதாய்
சொல்லி என் இதயத்தைத்
திருடியவளே இன்று எங்கே?
சென்றாய்
உன் வருகைக்காய்
பூத்துக்
குலுங்குதடி நீ
செல்லும் பாதையில்
வாடிய ரோஜாவாய்
நான்.........!!!


கவிதைகள் உலகம் ..smd safa..

உன் நினைவலைகள்!

ஒவ்வொரு இடங்களிலும்
உன் முகம் தெரியுதடி!
மறக்க நினைத்தாலும்,
மரணமே தொடர்ந்தாலும்
நெஞ்சோடு சுட்டெறிக்கிறது
உன் நினைவலைகள்!


கவிதைகள் உலகம் ..smd safa..

என் சிந்தனையில் நீ

உறவுகள் பலர்
இருந்தாலும்
உணர்வுகள்
உன்னிடத்தில் தான்
நினைவுகள் பல
இருந்தாலும்
நினைப்பதும்
உன்னை மட்டும் தான்

கவிதைகள் உலகம் ..smd safa..

புன்னகை

உன் முகத்தில் அந்த ஒரு
புன்னக்கை போதுமடி
நான்
மண்ணுக்குள்
புதைவதற்கு........

கவிதைகள் உலகம் ..smd safa..

கடிகாரம் தந்தாள்


அன்பே......
காலம் முழுதும்
உன்னை
என் நெஞ்சில்
சுமப்பதற்காகவா
காலத்தை காட்டும்
கடிகாரத்தை
எனக்கு பரிசளித்தாய்....


கவிதைகள் உலகம் ..smd safa..

என் கவிதைகளில்


எந்தக் கவிதையும்
உன்னை நினைத்துக்
கொண்டு
எழுதுவதில்லை .
எழுதுகிற எந்தக்
கவிதையிலும் நீ
இல்லாமல் இல்லை


கவிதைகள் உலகம் ..smd safa..

காதலை சொல்ல


வானின்
நிலவை வளைத்தேன்
வானவில்லை நாளாய்
மடித்தேன்
காட்டை கைசிரையில்
வைத்தேன்
என்ன செய்தும்
கவிதையில் காதலை
சொல்ல
முடியவில்லை ஒரு வரியில்..


கவிதைகள் உலகம் ..smd safa..

அம்மாவிற்காக ஓர் கடிதம்


என் உள்ளம் துடிக்குதம்மா.,
உன் வரவை எதிர்பார்த்து
நலம் அறிய ஆவல்தான்

நலமின்றி கண்ணீர்
வடிக்கிறேன் என்
பிரிவின் வலியால்
எப்படி இருந்திருப்பாய்?


சின்னச்சிறு நான் செய்யும்
குறும்புகளை ரசித்து சிரித்து ஊரார்களிடம் என் மகன்

விளையாட்டை பாறேன்று சொல்லி மகிழ்வாயே!

பிறந்தநாள் பரிசு வாழ்த்து கவிதை


பிறந்தநாள் பரிசு ..
பெண்ணாய் பிறந்தாய்
பெண்மை அடைந்தாய்
இவ் பதினைந்து வயதில்
பல புதுமை கண்டாய் ..
உன் கல்விக்குதான்
பாலம் இடும் வயது
காதலுக்கோ கெட்ட
காலம் இது ..
பதினாறு வயது இனி பருவங்கள்
மாறலாம்

மழைத் துளிகள்


அன்பே !!
உன் மீது விழாத வருத்தத்தில்
நீ விரித்த குடையோடு
போரிட்டுக் கொண்டிருந்தன
மழைத் துளிகள்...

அன்பே !!

உன் மீது விழாத

வருத்தத்தில்

நீ விரித்த குடையோடு

போரிட்டுக் கொண்டிருந்தன

மழைத் துளிகள்...

நான் மட்டுமே

உரிமையுள்ளவன்..


கவிதைகள் உலகம் ..smd safa..

யார் தருவார்?


பெற்றவள் இங்கு
நீண்ட தூரம் சென்றதனால்
நித்தமும் நடங்குதிங்கே
முடிவற்ற பாச போராட்டம்

நிலையற்ற இவ் உலகில்
நிம்மதியின்றி துடிக்கின்றேன்-உண்மை
அன்பு என்ற ஒன்றுக்காய்...!

உறவுகள் என்னை சுற்றி
உறவு கொண்டாடினாலும்
அன்பு என்னும் போலி வேலி போட்டு
வேசம் தனை பாசமாய் காட்டுதிங்கே..

என் சொந்த வாழ்க்கையில்
சேர்ந்திட்ட சோகமிதை
சொந்த பந்தம் சூழ்ந்திருந்து
சீர் செய்யத் தான் முடிந்திடுமா?

அம்மாவின் பிரிவு


அம்மா ....

பிறந்தவுடன் சொன்னதும்..

உயிரை வலியோடு முடிக்கும்

போது சொல்வதும்,       அம்மா....

.
'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...!'

உன் அன்பின் கதகதப்பும்,
                                  வலிக்காத தண்டனைகளும்..,

என் கவிதை கூட


உன்னை நேசித்து நான் கவிதை
எழுதுகிறேன்....
ஆனால்,
என் கவிதை கூட என்னை
நேசிக்காமல், உன்னை நேசிக்கிறது
என்னை போலவே


கவிதைகள் உலகம் ..smd safa..

பட்டப் பெயர்


திருத்தி திருத்தி உன்னைப் பற்றி
எழுதிக் கொண்டிருக்கிறேன்.........
எப்படி எழுதனாலும்
உனக்கென்று ஒரு உவமை
என்னிடம் இல்லை
எத்தனை அர்த்தங்கள் கொண்டு
நீ என்னை அழைத்தாலும்
பதிலுக்கு நான் ஒரு "பட்டப் பெயர்" வைக்க
எனக்கொரு அழகான பெயர் இல்லை
உன் உண்மையான பெயர் போல..கவிதைகள் உலகம் ..smd safa..

ஒரு உண்மை காதல்


அவள் ஒரு பேதை
நான் ஒரு போதை
அவளுக்கு திருமணமெனும்
ஆகி இருந்தால்
என் மூச்சு நின்று
போய் இருக்கும்
நீயோ முதிர் கன்னியாய்
நானோ முற்றும் துறந்த
துறவியாய்கவிதைகள் உலகம் ..smd safa..

காதல்


ஏய் அழகிய அருவியே,
இது என்ன தண்ணீரின்
தற்கொலை முயற்சியா??

உனக்கும்
காதல் தோல்வியா??


கவிதைகள் உலகம் ..smd safa..

தண்ணீர் இல்லை கண்ணீர்


காதலன்களை ஒன்று கூட்டுங்கள்.
காவிரியில் தண்ணீர் இல்லையாம்
கண்ணீராவது ஓடட்டும்!


கவிதைகள் உலகம் ..smd safa..

காதல்


பழகிவந்த இனியசுகம்
பாதியிலே கலைந்து
போனாலும் ,,

எழுதிவைத்த ஓவியம்போல்
என் நெஞ்சின் உள்ளே
இருக்கின்றாயே ...!!


கவிதைகள் உலகம் ..smd safa..

ஆசைகைளை துறந்து

அன்று

கண்ணீர் திர்நததால் கண்கள்
இரத்தம் தர துடிகின்றதா ?
அன்பினை தொலைத்து விட்டு
நெஞ்சம் கோபத்தை கொப்பளிக்கும்
நித்திரையில் தொலைத்து விட்ட
நினைவுகளை தேடுகின்றேன்
இன்று
ஆசைகைளை துறந்து விட்டு
ஆண்டி என்றே மாறிவிட்டேன்..


கவிதைகள் உலகம் ..smd safa..

கண் தானம் (காதலில்)


உனது கண்களை
ஒரு சின்னஞ்சிறு
பெண்ணுக்கே
தானமாக
வழங்க வேண்டும் என்று
பதிவு செய்
அந்தக்கண்கள்
அடுத்த தலைமுறையில்
என்னை மாதிரி
இன்னும் ஒரு காதலன்
உருவாகட்டும்..!


கவிதைகள் உலகம் ..smd safa..

உன்னைக் காதலிக்கவே


உன்னை விட்டுவிட்டு
வேறு யாரையேனும் காதலிக்கத்துவங்கிவிடுவேனோ
என்கிற பயமெல்லாம் உனக்கு வேண்டாம்!
உன்னைக் காதலிக்கவே இந்த ஆயுள் போதாது
என்று நினைக்கிறவன் நான்!


கவிதைகள் உலகம் ..smd safa..

தோழியாய் வரபோகும் மனைவி


நெஞ்சுக்குள் சின்ன சின்னதாய் ஒரு ஆசை உண்டு...........
இது கவிதை அல்ல........
நான் கனவுகளால் கோர்த்த மாலை,
...என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா
...கொட்டும் மழையில் ஒரே குடையில் உன் தோள்
உரசி நடக்கஆசை............
உன் சுட்டு விரல் பிடித்து.........
உன் பாதம் தொடர ஆசை
உன் கால்நகம் வெட்டி விட
கையில் மருதானி வைத்து விட ஆசை...........
உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி அதை நீ வாசிக்க
நான் கேக்க ஆசை...........
உன் கைகுட்டை திருட ஆசை அதை என் கைபைல்
எப்போதும் வைத்திருக்க ஆசை....... உனக்காக காத்ருக்க ஆசை.......
கால தாமதமாய் வரும். நீ என் மன்னிப்புக்கு கை கட்டி நீக்க ஆசை.

வெட்கம்


நீ வெட்கம் மறக்கிற
சிலபொழுதுகளை நினைத்து
பிறகு வெட்கப்படுவாயே!
வார்த்தைகளுக்குள் வசப்படாத
அழகிய கவிதை அது!


கவிதைகள் உலகம் ..smd safa..

காதல் காயங்கள்


காதல் காயங்கள்
உங்கள் உயிர்
உங்களை விட்டு பிரிவதை
நீங்கள் நேரில்
பார்த்திருக்கிறீர்களா ?
காதலித்து பிரிந்து பாருங்கள்
தெரியும்,
அந்த அனுபவம்
உங்களுக்கு வேண்டாம்,
அது மிகவும் கொடுமையானது.


கவிதைகள் உலகம் ..smd safa..

தலைவலி


உன் ''தைல விரல்களுக்காக''
என் தலைவலி தவிக்கின்றது...


கவிதைகள் உலகம் ..smd safa..

கோலப்பொடி


அதிகாலையில் தண்ணீர்
தெளித்து துப்புறபடுத்தி விட்டு
என்னை வைத்து
புள்ளிகள் இட்டாய்!
புள்ளிகள் அனைத்தும்
இணைத்து விட்டாய் !
வித விதமாய் கோலங்கள் போட்டு
மலர்கள் வரி துவினாய் !'
சூரியன் மறையும் தருணத்தில்
என்னை துடைப்பத்தால்
துடைத்து விட்டாயே..


கவிதைகள் உலகம் ..smd safa..

உன் கல் நெஞ்சை நினைத்து


காயம் பட்ட என் இதயமோ இன்று
கலங்குவதேனோ, உன் காதலை நினைத்தல்ல‌
கருணை இழந்த உன் கல் நெஞ்சை நினைத்து.


கவிதைகள் உலகம் ..smdsafa..

கைரேகை அவள்


அழிக்க முயன்றேன்
அவள் நினைவுகளை
கண்ணீர் விட்டு அழிக்க முயன்றேன்,
பின் தான் அறிந்தேன்...
கண்ணீர் விட்டு அழிக்க
அவள் நினைவுகள் கையில் தீட்டிய
ஓவியம் இல்லை..
என் கைகளில் ஓடும் ரேகை என்று..
என் காலம் வரை என்னுள்..


கவிதைகள் உலகம் ..smd safa..

என் உறவே நீ எங்கே????


பாவை உன்னை பார்த்த பின்னே பார்வையையே நான் இழந்தேன்!
பாவமென தெரிந்த பின்னும் பாவி உன்னை நினைத்து விட்டேன்!!
பாதையிலே போகயிலே பாதி உயிர் நான் இழந்தேன்!!!
மீதி உயிர் போகும் முன்னே மீண்டும் நீ வந்துவிடு!!!


கவிதைகள் உலகம் ..smd safa..

கோலம


கலைக்கபடும் எனத் தெரிந்தும்
கவனமாக போடப்படுகிறது
                ..கோலம்..


கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் வருகைக்காக


பாலை வனமாய் இருந்த
என் வாழ்வை
சோலை வனமாக்க
மழை பெய்தது போல்
விழுந்த மழைத்துளிகள்
என் நண்பர்கள் நண்பிகள்
என்றும் இந்த சோலை
உங்கள் வரவிற்காய்
எதிர் பார்த்து காத்திருக்கும்


கவிதைகள் உலகம் ..smd safa..

சண்டே கவிதை


நாளை மதியம்
என்னை இம்சிக்கும்
இன்று மதியம்
உன்னைக் கட்டிபிடித்து
உறங்கியது ..

நாளை மதியம்
என்னை இம்சிக்கும்
இன்று உன் முந்தானையில்

கடல்


வரை முறையன்றி
எங்கும் வியாப்பித்து
விரிந்து நிற்கும்
கடல்

இதன்
அகலத்தையும் ஆழத்தையும்
இன்னும் அறிந்தவர் யாருமில்லை

மெழுகென உருகுது என் காதல்


மெழுகென உருகுது
என் காதல் நெஞ்சம்
அதில் திரியேனே எரிவது
என் நினைவே
அதில் ஒளியேனே தெரிவது
உன் நினைவோ !!!
என்னை கரைப்பது
உன் காதல் தான்
முடிவென்ன மரணமா ????


கவிதைகள் உலகம் ..smd safa..

தலை எழுத்து


காதல் என்பது...
ஒவ்வொரு மனிதனின்
தலை எழுத்தில் இருக்கும் எழுத்து பிழை...!
விலகவும் முடியாது
விளக்கவும் முடியாது..கவிதைகள் உலகம் ..smd safa..

காதலின் ஆழம்


வார்த்தையில் காட்டிய கோபத்தின்
ஆழம் தெரிந்த உனக்கு. .

உன் மனதிற்குள் இருக்கும் என்
காதலின் ஆழம் தெரியவில்லையே..


கவிதைகள் உலகம் ..smd safa..

சொந்தங்களே....


சொந்தங்களிடம்
சொல்லிக்கொள்ள
முடியாமல்..... சொந்தம்
ஒன்றை
தேடிக்கொண்டேன்.....!

நாள் எல்லாம்
உன் நினைவுதான்
அது அவள் பேச்சு.....
என் காதில்
பலபொழுது விழுந்துச்சு......!

காற்றில் எழுதுகிறேன்


உனக்காய்
எழுதும் கவிதைகளை
இரக்கமின்றி -நீ
கிழிப்பதினால்
இப்போதெல்லாம்...
காற்றில் எழுதுகிறேன்
கண்டிப்பாய் நீ
சுவாசிப்பாய் எனும்
நப்பாசையில்


கவிதைகள் உலகம் ..smd safa..

செருப்பு


வீட்டுக்குள் சேர்க்கும் உறவுகளை விட
வாசலோடு வைத்திருக்கும் செருப்பு
கிழியும் வரை நமக்காக உழைக்கிறது


கவிதைகள் உலகம் ..smd safa..

உன்னோடு வருகிறேன்


குழந்தைகளோடு விளையாடுவதன்றால்
கொள்ளை பிரியம் உனக்கு!...
உங்கள் விளையாட்டில் என்னையும்
சேர்த்துக்கொள்ளச் சொன்னால்
முறைக்கிறாய் நீ!


கவிதைகள் உலகம் ..smd safa..

என் கவிதை


என் கவிதைக்கு வலி அதிகம்
என் வார்த்தைக்கு வலி அதிகம்
என் கவிதை காகிதத்தில் ஓர் ஓடம்
என் கவிதை ஓர் இளம் விதவையின் குமுறல்
என் கவிதை ஓர் முடவனின் வேண்டுதல்
என் கவிதை ஓர் குழந்தையின் அழுகை
இரவினில் கண் விளித்து காத்து கொண்டிருக்கிறேன்
நீ கவிதையாக வருவாய் என்று..


கவிதைகள் உலகம் ..smd safa..

நீ - நான்


உனக்குள் என் நினைவும்
எனக்குள் உன் நினைவும்
இருக்கும் வரை...


சத்தியமா சொல்றேன்.,

நீயும் உருப்பட மாட்ட
         - நானும் உருப்பட மாட்டேன்கவிதைகள் உலகம் ..smd safa..

மனித வாழ்க்கை


தோல்வியை கண்டு துவளாதே வாழ்க்கையில்
சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது.....
தோல்வி காண்பதே வாழ்க்கை அல்ல
அதையும் வெற்றியாக்குவதுதான் வாழ்க்கை.....
இளமை என்பது இலைசருகுபோல
இளமை போனால் திரும்ப வராது.....

காலை கவிதை


நடப்பை பற்றி எழுதுவதா !!
இல்லை காதலை பற்றி எழுதுவதா!!
என்னுள் ஒரு போராட்டம் !!
காதல்
என் கற்பனையில்
கலந்து கவிதையானது !!
என் ஐம்புலன்களையும் அடக்கி
ஜடமக்கியது !!
நட்ப்பு
என் குருதியில் கலந்து
எனக்கு உயீர் உட்டியது..


கவிதைகள் உலகம் ..smd safa..

அம்மா


அன்னையின் கண்ணீரைத்துடைக்கும் மழலை.....!
அம்மா.....!

கையில்லாத உனக்காக
கைகளோடு நான் பிறந்தேன்..!

நிலா சோறு எனக்கூட்ட
நீ ஏங்கி வருந்தாதே....!
உனக்காக சோறு ஊட்டவே - நான்
வரம் வாங்கிப் பிறந்தேனே...!

விஷம்


பாம்பில் விஷம்
நாய்ப் பல்லில் விஷம்
தேள் கொடுக்கில் விஷம்
பூச்சிக் கொல்லி மருந்தில் விஷம்
நீர் கொடுக்கும் அணையிலுமா விஷம் ???
பகைமை மற !!! பகிர்ந்தளி !!! பண்பாளியாகு !!!


கவிதைகள் உலகம் ..smd safa..

அன்பு - காதல்

எனக்கும் சேர்த்து
அழகாய் இருக்கிறாய் நீ!

உனக்கும் சேர்த்து
அன்பாய் இருக்கிறேன் நான்!

கவிதைகள் உலகம் ..smd safa..

உடற்பயிற்சி


தினம் பயிற்சி..
       எடு முயற்சி..

விடு அயர்ச்சி..
       தவிர் முதிர்ச்சி..


கவிதைகள் உலகம் ..smd safa..

கடவுள் - மனிதன்

கடவுளுக்காக மொட்டை
அடித்து கொள்கிறான் மனிதன்..

ஆனால்

மனிதனுக்காக ஒரு மயிரையும்
இழக்க தயாராக இல்லை கடவுள்..


கவிதைகள் உலகம் ..smd safa..

சில்லறை வணிகம்

விடுதலைக்கு முன்னால்
              வெள்ளையனே வெளியேறு என்ற கோஷம்..

விடுதலைக்கு பின்
              வெள்ளையனே ஆதரிக்கும் நம் தேசம்..

கவிதைகள் உலகம் ..smd safa..

காதல் விண்ணப்பம் ஒன்று


நீ ஒரு அழகான பெண்
என்பது உண்மையானால்

நீ ஒரு சிறகு இல்லாத தேவதை
என்பது உண்மையானால்

நீ ஒரு சித்திரை மாசத்து நிலவு
என்பது உண்மையானால்

சாலையில் உன் புன்னகை


காலையில் பயணம்
சாலை ஓரத்தில் நான்...

எதையோ எண்ணி நான் நடக்க
பொன்நகை இல்லாமல் புன்னகைவுடன் வந்தாள்...

என் கவனத்தை திருப்பியவள்....


கவிதைகள் உலகம் ..smd safa..

இளைப்பாற


தேடி தேடி
இழைப்பானேன்
இளைப்பாற கூட
இடம் இல்லையா
உன் இதயத்தில்....!கவிதைகள் உலகம் ..smd safa..

தூசியாக


எனது கண்களில் அவளது காதல்
தூசியாக வந்து விழுந்தது..

இன்னும் வெளியேறவில்லை ,
இப்போதும் உறுத்திக்கொண்டே
     தான் இருக்கிறது அவளது காதல் ....


கவிதைகள் உலகம் ..smd safa..

விதியா? சாதியா?


காதலிப்பது ஆண்களின் விதியா?
இல்லை.....?
பெண்கள் செய்யும் சாதியா?


கவிதைகள் உலகம் ..smd safa..

பொய்யான காதலால்


அன்று
தற்கொலை செய்த போதே
நான் இறந்திருக்கலாம்.........
இன்று
அவள் பொய்யான காதலால்
துடிதுடித்து சாகிறேன்


கவிதைகள் உலகம் ..smd safa..

தெரியாமல்

கல் மீது அதிக பாசம் வைத்துவிட்டேன்,
 அது மண்ணாகும் என தெரியாமல்..

மண் மீது அதிக பாசம் வைத்து விட்டேன்,
 நான் மண்ணுக்குள் செல்வேன் என தெரியாமல்..

அது போல உன் மீது அதிக பாசம் வைதது விட்டேன்,
 நீ என்னை விட்டு பிரிவாய் என தெரியாமல்..

கவிதைகள் உலகம் ..smd safa..

காத்திருப்பேன்


நான் உனக்காக காத்து இருப்பது
உனக்கு பிடிக்கும் என்றால்
உன்னை காணவே என்றும்
காத்து இருப்பேன் நான் கல்லறையில்
புதையும் வரை பெண்ணே..............!


கவிதைகள் உலகம் ..smd safa..

வாழு = வாழவிடு


நீ எங்கே எந்த தேசம்
போனாலும்.... நான்
உன்மீது வைத்துக்கொண்ட
கொண்ட நேசம்
மட்டும் எப்போதும்
அப்படியே இருக்கும்
என்பதை விட..... ஒருபடி
மேலேதான் இருக்கும்.....!

நீ வாழ்க......!
என்னையும் வாழவிடு.....!


கவிதைகள் உலகம் ..smd safa..

நீ வாழவேண்டும்

நான் உன்னை விட்டு விலகி செல்கிறேன்,
 நீயாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று..

 நான் கல்லறையில் இருந்தாலும் காதலி,
 உன் கண் எதிரில் தான் காந்திருப்பேன்..

 நீ மகிழ்ச்சியாக வாழ்வதை காண ''அன்பே''

கவிதைகள் உலகம் ..smd safa..

கல்லறை


அன்பே நீ நடந்து செல்லும்
சாலையோரத்தில்
உன் பின்னல் நான் உன் பாதசுவடு
மண் சேகரித்த வண்ணம்.....
ஏனென்றால்
நான் இறந்த பின் என் புதைகுழியை
உன் பாதசுவடு பதிந்த மண்களால்
என் புதைகுழியை மூடுவதற்கு.....


கவிதைகள் உலகம் ..smd safa..

கவிதையும் வெறுக்கிறது


கவிதையும் என்னை வெறுகிறது

"யாரிடம் சொல்ல என் காதல் வலிகளை"
-என்றபோது
கவிதைவுடன் பேச போனேன்

ஆனால்

கவிதையுடனும்

உயிரைக் கொல்வது பாவம்


ஒரு சாயங்காலப் பொழுதில்
உன் கண்கள் சிந்தும்
காதல் சாரலில் நனைந்தபடியே
உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன்!

அந்நேரம் உன் சின்னப்பாதம் நோக்கி
சிற்றேரும்பொன்று முன்னேற
நான் அதை கொன்றுவிட எத்தனிக்கிறேன்!

காதல்


நீ வேண்டும் என்கையில்
நீ எனக்கு வேண்டும் என்கையில்
நான் என்னை நேசிக்கிறேன்.
நீ என்னை தாண்டி செல்கையில்
உன் வாசம் சுவாசிக்கிறேன்.
உன் உதடுகள் கவிதை வரைகையில்

நீ- தந்த மின்சாரம்


என்னை கடிக்க வரும்

கொசுக்கள் எல்லாம்

மரணம் அடைகின்றன
...
ஏன் எனில்

தோல்விப் பாடம்


பாடம் படித்தால் மட்டுமே
தேர்வில் வெற்றி பெற முடியம்
பள்ளிப் பாடம் இது !!!
தோல்வி அடைந்தால் மட்டுமே
வாழ்வில் வெற்றி அடைய முடியும்
வாழ்க்கைப் பாடம் இது !!!


கவிதைகள் உலகம் ..smd safa..

நந்தவனத்திற்கு வந்த நிலா


பாவாடை சட்டையில்
பள்ளிக்கு வரும் பளிங்கு நிலா நீ!

உன்னால் வகுப்பறை ஒரு
நந்தவனமாய் இருந்தது நிஜம்!

என் வருகைப்பதிவு குறையாமல்
இருந்ததற்கு நீயும் ஒரு காரணம்!

வாழ்க்கை


வாழ்விற்கும் மரணத்திற்கும்
இடையில் உள்ள காற்றை தான்
சுவாசிக்கிறேன்..

இன்னும் எவ்வளவு
இடைவெளி என்பதினை
அறியாமல்!!


கவிதைகள் உலகம் ..smd safa..

உன் நினைப்பு


இந்த இரவும் ....... நாளை விடியும்....
வந்த கனவும்...... கனவாய் மடியும்.....
எப்போதாவது.....தூக்கம்....
எப்பொழுதும்...... ஏக்கம்......

இப்போது உன்நினைப்பே.....
இனி எப்போதும்  என் நினைப்பு
எனக்கேது
          உன்நினைவு .....  இன்றி.....!!கவிதைகள் உலகம் ..smd safa..

கனவும் நினைவும்


சிந்தனைகள் இங்கில்லை
சிறகடித்துப் பறக்கிறதே
சில நொடிகள் மறைந்திடுதே
...சில நினைவுகள் மறந்திடுதே

கரைந்திடுதே
கனவு கரைந்திடுதே
கருமேகக் கூட்டம் போல
அது மறந்திடுதே !!!


கவிதைகள் உலகம் ..smd safa..

உன் சிரிப்பில்


உன் ஒரு நிமிட சிரிப்பில் என் ஒரு வருட

ஆயுள் நீள்வதாய் உணர்ந்தேன்.....

என் ஒரு நிமிட சிரிப்பில் என் ஒரு வருட

ஆயுள் குறைவதை உணரவில்லை..

உயிர் நட்பு


பழகிய நாட்கள் கொஞ்சம் உன் மேல்
கொண்ட பாசத்தினால் நெகில்கிறதே என் நெஞ்சம் !!!!
ரத்த பந்த உறவல்ல உயிர்ரோடு கலந்ததால்
இதற்க்கு இல்லை இனி பிரிவு ஒருவருக்கொருவர்
துணையாக இருப்போம்!!!!!!!

என் நினைவில் நீ

கண்டேன் கனவு .,  அதில்
                     கற்பனையாய் நீ..
விழித்தேன் கண்,     அதில்
                     தேவதையாய் நீ .

தொழுதேன் கை.,     அதில்
                     கடவுளாய் நீ
தொட்டேன் பேனா  அதில்
                      கவிதையாய் நீ..

கவிதைகள் உலகம் ..smd safa..

தலைவன் : தொண்டன்

தொண்டன் கொடுத்த நிதியில் ஏசி காரில்
உலா வரும் தலைவனைக் காண
காலில் செருப்பு கூட இல்லாமல்
தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு
இருக்கும் உண்மைத் தொண்டன்!

கவிதைகள் உலகம் ..smd safa..

காதல் படங்கள்

தெரியாத மாணவன்

வீட்டில் பண கஷ்டம் தெரியாது
பேருந்தில் அமரும் இருக்கை தெரியாது..

கல்லூரியில் வகுப்பறை தெரியாது
தேர்வில் கேள்விக்கு பதில் தெரியாது..

தேர்ச்சியில் பதிவு எண் தெரியாது..
வாழ்க்கையில் வசந்தம் தெரியாது !!!

கவிதைகள் உலகம் ..smd safa..

உன் அன்புக்காக

நொடிக்கு நூறு முறை இறப்பேன்....
என் மரணம் அவள் (உன்) மடியில் என்றால்!!

இறந்த மறு நொடியில் பிறப்பேன்....
அவள் (உன்) அன்பு கிடைக்கும் என்றால்..!!

கவிதைகள் உலகம் ..smd safa..

கால்கொலுசாக

உன் கால்கொலுசாக பிறக்க ஆசை,
உன்னை தொட்டு முத்தமிட...
உன் பாதங்களில்  மரணம் வரை
நான் வாழ..
                           இடம் தருவாயா...

கவிதைகள் உலகம் ..smd safa..

கண்ணீர் துளி

      விழிகளிலே விரிசல்கள் ஏற்பட்டால்
            கண்ணீர் துளிகள் கடல் நீராய்
பெருகும் விடியலை நோக்கி நான் இருக்க
     கண்ணீர் துளிகளாய் நீ விடுகிறாய்..

கவிதைகள் உலகம் ..smd safa..

வாழ்க்கை


வாழும் ஒவ்வொரு நொடிகளையும்
சந்தோசமாய் அனுபவியுங்கள்...
யாருக்குத் தெரியும்
இந்நொடியே கடைசியாய் கூட
இருக்கலாம்...கவிதைகள் உலகம் ..smdsafa..

இதயம்

என் இதயம் காற்றால்
அடைக்கப்பட்டு இருந்தால்
                               வெடித்திருக்கும் !

என் இதயம் பஞ்சால்
அடைக்க பட்டு இருந்தால்

ரோஜா செடி

அதிகாலை ஏதோ ஒரு அழுகைக்குரல்..  
வெளியில் வந்து பார்த்தேன், வியந்தேன் !

இரவெல்லாம் ஒரே குளிர் மழை,
நீ மட்டும் கம்பளத்தில் ஒளிந்தபடி

"ஒற்றை முத்தம்"

நான் தூங்கிவிட்டதாய் நினைத்துக்கொண்டு,
என் நெற்றிப்பொட்டில் நீ தந்துவிட்டுப் போகும்
ஒற்றை முத்தத்தில் தெரிந்துகொண்டேன்..

        என் மீதான உன் காதலின் அளவை......

கவிதைகள் உலகம் ..smd safa..

உன் மடி வேண்டும்

உன் மேலான என் காதல் தோற்று போனாலும்
                     உன் மடியில் தூங்க வருவேன்..

ஒரு முறை இடம் கொடுப்பாயா?

சொர்க்கத்தில் தூங்கியபடியே
                                            நான் இறக்க வேண்டும்...

கவிதைகள் உலகம் ..smd safa..

தேடல்

நிழல் தேடி நாம் மரம்  ஒதுங்குவது போல்,

   உன் மனம் தேடி என் உயிர் ஒதுங்குமிடம்

                  நம் காதல்.....(உன் இதயம்).

கவிதைகள் உலகம் ..smd safa..

நினைவெல்லாம்


நினைவெல்லாம் நீ ஆனதால்
    வார்த்தைகளெல்லாம் கவிதைகள் ஆனது....

நானும் இன்று ஒரு காதல் காவியம் தான்,
    என் இதய பக்கங்கள்
                உன் விழிகளால் எழுதப்படுவதினால் ...


கவிதைகள் உலகம் ..smd safa..

உறவு (நண்பர்கள்)

இதயம் துடிக்கும் ஓசையை கூட கேட்க முடியும்,

ஆனால் மனது அழும் ஓசையை யாராலும் கேட்க முடியாது,

உண்மையான உறவுகளை (நண்பர்களை) தவிர.....

கவிதைகள் உலகம் ..smd safa..

இதயமாக வேண்டாம்

நீ என் உயிராக மட்டும் இரு.,
        இதயமாக இருக்க வேண்டாம்..

உன்னை துடிக்க விட்டு
        நான் உயிரே வாழ வேண்டாம்..

கவிதைகள் உலகம் ..smd safa..

அம்மாவின் தவிப்பு


இந்த இரண்டு வருடத்தில்
நான் அவனை பிரிந்ததே இல்லை .

இந்த இரண்டு நாளில்
அவன் பிரிவை நன்கு உணர்கிறேன் .

மூக்கு கண்ணாடி

மூக்கு கண்ணாடி அணிந்தால்
பலருக்கு அழகு கூடுமாம் .

ஆனால்

மூக்கு கண்ணாடியின் அழகு கூடியது.,
          அதனை என்னவன் அணிந்ததினால்!!

கவிதைகள் உலகம் ..smd safa..

அம்மாவின் ஆனந்தம்

இப்போதெல்லாம் இரவில் அவன் கண்கள்
                              என்னை தேடுவதில்லை .
அவன் கைகள் என்னை தீண்டுவதில்லை ,
                              எனை தீண்டவிடுவதுமில்லை .

ப்ரியமானவனே


ப்ரியமானவனே,.

உன்னில் இருந்து நான் விலகவும் இல்லை,
இனி விலகப்போவதும் இல்லை..

பிரியமான தோழனாக வந்த உன்னை- இன்று

உன்னை காண வேண்டும்

சொல்லி அழுது விட்டால்
துன்பம் எல்லாம் தீர்ந்து விடும்...

சொல்ல ஒரு தோழி இல்லை,
சொல்வதற்கு வார்த்தை இல்லை....

நீ கொண்ட அன்பு

அன்பிற்கு அன்னையாய்....
பாசத்துக்கு தந்தையாய். .
நேசத்துக்கு சகோதரனாய்..
நட்பிற்கு தோழியாய்...

உன் குரல் கேட்க

நீ இங்கு இல்லை என்று தெரிந்தும்
போகும் இடமெல்லாம் என் கண்கள்
உன் முகத்தை தேடுகின்றது..

என் மனமும் உன்னையே நினைத்து

அன்பு

எல்லோரிடமும் அன்பை காட்டி
                                 ♥ ♥ஏமாந்து விடாதே...♥ ♥

யாரிடமும் அன்பை காட்டி
                                 ♥ ♥ஏமாற்றி விடாதே..♥ ♥
♥ ♥கவிதைகள் உலகம் ♥ ♥..smdsafa..♥ ♥

அம்மா, காதல் படங்கள்

காதல் சோகம், அம்மா, நட்பு படங்கள்

காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..

அன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்

பெண், அம்மா, காதல், சோகம் படங்கள


காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..

பூக்கள் காதலி படங்கள்


காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..

சோகம் தத்துவம் படங்கள்காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..

காதல நட்பு அம்மா படங்கள்


காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..

கவிதை படங்கள்காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..

தமிழ் கவிதைகள் புகைப்படங்கள்


 காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..

ஊமையாய் காதல

திருட்டுதனமாய் பார்த்தோம் பயந்து
பயந்து நேசித்தோம் தயங்கி தயங்கி
நேரெதிர் சந்திக்கும் தருணத்திலே
நம் விழிகள் மோதிகொண்டதே..

விருந்தாளி

இன்பங்கள் என்று ஆடைகட்டி
               அலங்கரித்து ஆடித் திரிந்த
எல்லாம்  ஒவ்வொன்றாய்
               விலகிச் சென்றாலும்

அடை மழை

நிலா பெண்ணுடன் கொண்ட

          காதல் தோல்வி..

ஓயாமல் அழுகிறது மேகம்....

கவிதைகள் உலகம் ..smd safa..

ஹைக்கூ

இருப்பதையும் இல்லாமல் ஆக்கிவிடும்,
                  பதட்டமும் - பயமும்..

கவிதைகள் உலகம் ..smd safa..

தாங்கமுடியாதது


நி உன் இதயத்தில் இருந்து என்னை தள்ளியதும்!
மிக உயரத்திலிருந்து படுக்குழி நோக்கி விழுவதாய் உணர்கிறேன்!
அநேகமாக அது கல்லறை என்று தான் நினைக்கிறேன்!
எனெனில்

உன்னால் மட்டுமே

உன்னால் மட்டும் எப்படி முடிந்தது!!

இதயத்திற்கு
                      இதமான அன்பையும் கொடுத்து,
                      பிரிவு -எனும் வலியும் கொடுக்க..

கவிதைகள் உலகம் ..smd safa..

பிரிவு

நீ பிரிந்து சென்ற பின் உன்
                   நினைவுகளை எப்படி செலவழிக்க.??

காகிதங்களில் கவிதையாகவா?    - இல்லை

கண்களில் கண்ணீராகவா??

கவிதைகள் உலகம் ..smd safa..

இலட்சியம்

கவலையை நினைத்து
                             கண்ணீர் சிந்துவதை விட,

இலட்சியத்தை நினைத்து
                             இரத்தம் சிந்துவதே மேல்.

கவிதைகள் உலகம் ..smd safa..

புன்னகை

ஒரு புன்னகையில் என்னைக்
                     கவிழ்த்த   கர்வம் உனக்கு.!!.

அந்த புன்னகையில்
                     கவிழ்ந்த ஆச்சர்யம் எனக்கு.!!

கவிதைகள் உலகம் ..smd safa..

உன் நினைவுகளோடு

நினைவுகளாலே நிறைத்து விட்டாய் என் இதயத்தை.,
உனது பெயரை தட்டச்சு செய்கிறது என் விரல்கள், தானாகவே..

தனிமையில் உன் பெயரை முனு முனுக்கிறது என் இதழ்கள்..

தண்ணீர் தண்ணீர்

ஏறி, குளங்களில் இல்லை - தண்ணீர்..

பயிர் பாசனத்திற்கு இல்லை - தண்ணீர்..

தாய் தந்தை

தோள் கொடுக்க தோழனும்,
தோள் சாய தோழியும்        கிடைத்தால்
                அவர்கள் கூட  தாய் தந்தை தான் ...!

கவிதைகள் உலகம் ..smd safa..

மௌனம

பெண்ணே,   என்னை கொல்ல
                     எந்த ஒரு ஆயுதமும் வேண்டாம்..

உன் ஒரு நொடி "மௌனமே" போதும்..

கவிதைகள் உலகம் ..smd safa..

நண்பன்

உன் நினைவில் நான் வந்தால்,
                                    - நான் உன் நண்பன்...

உன் கனவில் நான் வந்தால்,
                                    - நான் உன் உயிர் நண்பன் ...

கவிதைகள் உலகம் ..smd safa..

தாஜ் மஹால்

என்னை கட்டிய்வனும் இல்லை,
கட்ட சொன்னவனும் இல்லை..

இருந்தும் வாழ்கிறேன், உண்மையான

உறவுகள்

எந்த உறவாக இருந்தாலும், அதில்
உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே
நீங்கள் விலகி சென்றாலும்  உங்களை விரும்பி வரும்...

கவிதைகள் உலகம் ..smd safa..

ரோஜாச்செடி

ரோஜாச்செடியில்,
                      முள்ளும் இருக்கும் -  மலரும் இருக்கும்..

முள்ளை பார்த்து பயந்து விடாதே...
மலரை பார்த்து மயங்கி விடாதே...!

கவிதைகள் உலகம் ..smd safa..

குழந்தையின் தவிப்பு

அவளை பார்க்கும் போது சொல்ல நினைக்கிறேன்..

அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கிறேன்...

அவள் முத்தமிடும் போது சொல்ல நினைக்கிறேன்....

தாய்மை

அம்மாவின் பிரசவ நேர "அம்மா ஆஆஆ" என்ற அலறல் சத்தம்...
அவள் ஈன்றெடுக்கும் உயிரின் "ம்மா ...ம்மா " முன் எப்படி மண்டியிடுகிறது....அது தான் தாய்மை. உதிரம் தந்தாள்,

உயிர் தந்தாள், உறவு தந்தாள், உலகம் தந்தாள்....

கோயில் வேண்டாம், சர்ச் வேண்டாம், மசூதி வேண்டாம் .....

அவரவர் "அம்மாவை" கொண்டாடுவோம் .....

அது (அம்மா) தான் நாம் எல்லோரும் தேடும் "கடவுள்"


கவிதைகள் உலகம் ..smd safa..

பெண்ணின் குணம்


கானல் நீரோ  பெண்ணின் குணம்...

கண்டதில்லை எவரும், அதன் உண்மை நிறம்...

நட்பென தொலைவில் நின்றால் உவகை நிறைந்தாள்...

விதி

‎"ஒளிந்துகொள்ள இடமா இல்லை இவ்வுலகில்!
இருந்தும் மனிதன் ஏன் காதல் வயபடுகிறான்.,
                     என்றெலாம் தத்துவம் பேசி திரிந்தேன்!!

 விதி யாரை விட்டது,                   இங்கு-இன்று

என் காதல்

என் கவிதைகள் புரியவில்லை என
                                       குற்றம் சொல்கிறாய்..

நான் எழுதுவதெல்லாம் உன் மீதான
என் காதலென்று - நீ   புரிந்துகொள்ளும் வரை

                என் கவிதைகள் புரியாதது தான்....

கவிதைகள் உலகம் ..smd safa..

ஞாபகங்கள்

காலத்தின் சுவடுகளை பார்த்தாலும் சரி,

உன் காலடி சுவடுகளை பார்த்தாலும் சரி,

என்னில் எச்சங்களாய் மிச்சம் இருப்பது

                    உன் ஞாபகங்கள் மட்டுமே..!!

கவிதைகள் உலகம் ..smd safa..

கானல் நீர்


அருகில் இருக்கும் போது அருமை தெரியவில்லை

தொலைவில் இருக்கும் தண்ணீரை கண்ட போது

என் மனம் பருக நினைத்தது..

தடயங்கள்

பெண்ணே :-   அன்று உன் விழியின் ஓர விழியை பார்த்த பின்
ஒவ்வொரு இரவும் கனவினிலே உன் நினைவுகளில் உன்னை
தேடித்தேடி அலைந்தேனே.. கிடைக்காத போதும்
தித்திப்பாய் இருந்ததடி என் தேடல்..

காந்தம்

என் இதயத்தை இரும்பாக
                     தான் வைத்திருந்தேன்..

யாருக்கு தெரியும்..   அவள்
                     காந்தமாக இருப்பாள் என்று..

கவிதைகள் உலகம் ..smd safa..

கருணை

     என் பயம் போக்க நீ என்னை

அணைத்து அரவணைக்கும் போது

கடவுளின் "கருணை" கூட தோற்று போகும்

உன்     பாசத்தின்...           "கருணை" கண்டு...

கவிதைகள் உலகம் ..smd safa..

காதல் தோல்வி

     காதலில் தோற்பவர்கள்..

             பிணமாகிறார்கள்..

                       அல்லது

       பிணமாக  வாழ்கிறார்கள்..

நினைவுகள் மட்டும் உயிரோடு !!

கவிதைகள் உலகம் ..smd safa..

காதலிக்கக் கற்று கொள்


இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என்
வாழ்க்கை   ஒற்றை நொடியில்
முடியும் முன்...

                           நீ காதலிக்கக் கற்று கொள் !


கவிதைகள் உலகம் ..smd safa..

பொய்யான பெண்கள்


       உண்மையான காதல் 
             தோன்றுகிறது, 

பொய்யான பெண்கள் மீது..


கவிதைகள் உலகம் ..smd safa..


உன்னை எப்படி அழைக்க

ஆசைகளை அடக்குபவனை
 ஞானி என்று  அழைப்பார்கள்!!

 அதுபோல்,

தமிழ் பெண்

நீளக் கைகள் உண்டு, நீண்ட கூந்தலும் உண்டு..

முத்தான பல் உண்டு, முன் கோபச் சொல்லும் உண்டு..

மயங்க வைக்கும் மொழி உண்டு,
                              கிறங்க வைக்கும் கண்ணும் உண்டு..

நாம் தமிழனடா


ஓட்டை ஜோப்பில் காலணா இல்லாவிட்டாலும்
கால்கள் தரையில் நிற்காது கனவில் திரிவோம்..

துண்டு பீடிக்கு பிச்சையெடுத்தாலும்
உரத்த குரலில் ஒபாமாவை திட்டுவோம்..

என்னுள் பாதி

நெஞ்சுக்குள் உன்னை வைத்தேன்,
துடிக்க வைக்க ஆசை இல்லை..

உன்னை விழிகளில் வைக்க ஆசை,
உறக்கமில்லாமல் வைக்க ஆசை இல்லை...

பெண்ணே உன்னால்


உன் ரெட்டைப் பின்னல்
பார்த்த பின்பு    
என் ஒற்றை மனது
தொலைந்ததடி

அலைபெசி உலகம்


கனவுகளோடு காத்திருக்கிறேன்.,..................
... ..................கனவிலும் காத்திருக்கிறேன்..

ஒரு வார்த்தையாவது பேசு.............................

அலைபேசியே உலகமென்று ஆனது,
 ................உன் அழைப்புக்காக காத்திருப்பதால்..

காதல் சுவடு

பலபேர் பாதம்பட்ட பேருந்து நிறுத்தத்தில்
பல வருடங்கள் கழிந்தபின்பும்
என்னவளின் பாதசுவடுகள் மட்டும்
அழியாமல் சுவடுகளாய் ...    என் மனதில்.!!.

கவிதைகள் உலகம் ..smd safa..

அழகில் இல்லை காதல்

நீ அழகியாக இருப்பதால் தான்

நான்  உன்னை காதலிக்கிறேன்

   என்று                கர்வம் கொள்ளாதே..!

 உன்னை அழகியாக்கியதே என் காதல் தான்.!!.

கவிதைகள் உலகம் ..smd safa..

நட்பு


நண்பர்களை ஒன்றாக இணைப்போம் ..
                                 நட்புடன் வாழ்ந்திடுவோம் :)

கற்பபை தாண்டி ஒரு சக உதிரமாய்
       சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுவோம் :)

        நட்பு பேச்சு இல்ல .. உயிர் மூச்சு :)


கவிதைகள் உலகம் ..smd safa..

பருவ காலம்

கோடையில் விழும் கடும் இடியில் வந்து
விழுந்தாய் என் மன மடியில்..

கார்காலத்தில் பெய்யும் மழைத் துளியில்
கண்காட்சியாய் நிறைந்தாய் என் கரு விழியில்..

காதல் உள்ளவரை உனக்காக

உனக்காகவே மண்ணில் வந்தேன்.,

உனக்காகவே கண்கள் திறந்தேன்.,

உன் சுவாசத்தில் நானே கலந்திருப்பேன்..

மலர் கொண்டுதான் உன்னை சுமப்பேன்.,

மலர் மாலையும் சுமைதான் என்பேன்.,

பெண்ணை புரிந்துகொள்ள முயற்ச்சி செய்யாதே

எந்த ஒரு பெண்ணையும் முழுவதுமாக

புரிந்துகொள்ள முயற்ச்சி செய்யாதே..!!..

முடிவில் அந்த பெண்ணை

காதலிக்க ஆரன்பித்து விடுவாய்.,

அல்லது நீ பைத்தியமாகி விடுவாய்..

(எனக்கு தெரிந்து இரண்டுமே ஓன்று தான்..)

கவிதைகள் உலகம் ..smd safa..

பாசத்தின் தவிப்பு

என் தனிமையின் ஒவ்வொரு நிமிடங்களும்,

உன்னுடன் பழகிய நட்பின் கனம நிறைந்த

ஓராயிரம் நினைவுகளை அள்ளிக் குவிக்கின்றன..

அத்தனையும் இங்கு முத்து, முத்தாக என்

 கன்னங்களை நிறைக்க உயிரும் கரைகிறது..

என்னவளே..,
         உன் பாசத்தின் பரிதவிப்பான  ஏக்கத்துடன்..!!

கவிதைகள் உலகம் ..smd safa..

என் கவிதைகள்

எதிலிருந்து எழுத துவங்கினாலும்,

மீண்டும், மீண்டும்

காதல் என்கிற புள்ளியிலேயே

வந்து முடிவடைகிறது,

   -  என் கவிதைகள் அனைத்தும்..

கவிதைகள் உலகம் ..smd safa..

என்னையும் கொன்று விடு

வலியின் உச்சத்தில் கருணைக்

- கொலை அனுமதிக்கப்படுகிறது..

பெண்ணே..,  என்னையும் கொன்று விடு.,

  - கருணை கொலை என்ற பெயரிலாவது..

கவிதைகள் உலகம் ..smd safa..

உண்மையான காதல்

வறட்டு கெளரவம்.,

வீண் பிடிவாதம்.,

சமுதாயத்தின் உளறல்கள்.,

சொந்தங்களின் போலி புன்னகை.,

பணம் என்னும் காகிதம்.,

இவை அனைத்தும் கொன்று விட்டது.,

    - "என் உண்மையான காதலை"..

காதலி பிரிந்தாலும், காதலர்கள் இறந்தாலும்

       ஒருபோதும் "காதல் அழிவதில்லை"..

கவிதைகள் உலகம் ..smd safa..

கடற்கரை - கல்லறை

கடற்கரை சிரிக்கின்றது.,

   -  காதலர்கள் வருகிறார்கள் என்று..

கல்லறை அழுகின்றது.,

   -  காதலன் மட்டும் தான் வருகிறான் என்று..

கவிதைகள் உலகம் ..smd safa..

எத்தனை காதல் வாழ்வினில்

தொட்டிலில் ஆடும் வயதில்
தாய்பால் மீது காதல்..

எட்டிப்பிடிக்க இயலாத வயதில்
தட்டான் மீது காதல் ..

நம்பிக்கை


உனக்காக வாழ்கிறேன்,


என்றாவது ஒருநாள்


உன்னோடு வாழ்வேன்


என்ற நம்பிக்கை யில்..

கவிதைகள் உலகம் ..smd safa..

காயங்கள் - வித்தியாசம்


எல்லோரின் இதயத்திலும்

காயங்கள் உண்டு..

அதை வெளிப்படுத்தும்

விதம் தான் வித்தியாசம்..

உரிமை உள்ளவர்களிடம்    கண்ணீராக..

மற்றவர்களிடம்                       புன்னகையாக..

கவிதைகள் உலகம் ..smd safa..

பிரிவு - நட்பு காதல்

பல தவறுகள்

பல மன்னிப்புகள்

பிரிய மாட்டர்கள்

நட்பில்..

சிறு தவறுகள், ஒரே தண்டனை

  -பிரிவு  காதலில்..

கவிதைகள் உலகம் ..smd safa..

காதல் தோல்விகளை குறைக்க, காதலில் வெற்றி பெற

காதல் தோல்விகளை குறைக்க சில வழிகள்;-1.ஒரு பொண்ண லப் பண்ண ஆரம்பிச்சா, அது அந்த பொண்ணுக்கு தெரியிறதுக்கு முன்னாடி அவகிட்ட propose பண்ணிடனும். அப்புடி இல்லாம நீங்க லவ்வ சொல்றதுக்கு முன்னால, அந்த பொண்ணு நீங்க அவள சைட் அடிக்கிறத கண்டுபுடிச்சிட்டா அவ்ளோதான்.அவகிட்ட உங்களோட value கம்மி ஆயிடும்... லவ் success rate உம் கம்மி ஆயிடும்.2. விக்ரமன் படங்கள பாத்துட்டு யாரும் அதுமாதிரி ட்ரை பண்ணீங்கண்ணா உங்களுக்கு கடைசில செருப்படி நிச்சயம்.. அதாவது அவளுக்காக அவளோட ஆபீஸ்ல காத்துருந்து

பூக்களின் பொறாமை

" இப்போதெல்லாம் என் தோட்டத்து ரோஜாக்கள்..........

" என் காதலியின் வரவுக்காக பூக்காமல் காத்திருக்கின்றன.........

" காரணம் அவளின் மலர் முகத்தை விட............

" தங்களின் மலர்வு அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதால்!

" பூக்களே பொறாமைப்படும் அழகி என் காதலி!!

கவிதைகள் உலகம் ..smd safa..

என்னவென்று சொல்வது

" எல்லோருக்கும் நேற்றைய புன்னகை.........

" இன்றைய கண்ணீர் என்பார்கள்!

" ஆனால் எனக்கோ நேற்றைய கண்ணீர்....

" இன்றைய புன்னகையாக மாறியது!

" காதலியை இழந்தவன் நான் தனிமையில்...

... " என் காதலியை கற்பனை செய்து...

" பேசி மகிழ்வதை என்னவென்று சொல்வது!

" நேற்றைய கண்ணீர் இன்றைய புன்னகை!

கவிதைகள் உலகம் ..smd safa..

தவிப்பு

சொல்ல வேண்டுமென்கிற

தவிப்பில்தான் வருகிறேன்.

ஒவ்வொரு முறையும்

சொல்லாமலேயே திரும்ப நேர்கிறது.

சிலவற்றைச்

... சொல்லாமலே

புரிந்துகொள்ள வேண்டுமென்பதை

யார் உனக்குச்

சொல்லித்தருவது?

கவிதைகள் உலகம் ..smd safa..

உன்னை மறக்க

என்னை எப்படி நீ மறந்தாய்..?

     சொல் "அன்பே"

 நானும்  உன்னை  மறக்க…

கவிதைகள் உலகம் ..smd safa..

நட்பு

ஆயிரம் கோடி நட்ச்சத்திரங்கள் விண்ணில்

இருந்தாலும்

இரவுக்கு அழகு நிலவு தான்

ஆயிரம் உறவுகள் மண்ணில் இருந்தாலும்

வாழ்க்கைக்கு அழகு நட்பு தான்!

கவிதைகள் உலகம் ..smd safa..

ரோஜா

அவள் வைத்துகொள்ளும் ரோஜா

அவளை விட

அழகில் குறைவு தான்

அதனால் தானோ

அவள் கூந்தலின்

பின்னால் ஒளிந்து கொள்கிறது !

கவிதைகள் உலகம் ..smd safa..

கருவறை

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்

கண்கள் இல்லாமல் ரசித்தேன்

காற்று இல்லாமல் சுவாசித்தேன்

கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்

என் தாயின்

“கருவறையில்”

கவிதைகள் உலகம் ..smd safa..

யாரும் இல்லை

எங்கு பார்த்தாலும் காதலர்கள்

என்னை தான் காதலிக்க

யாரும் இல்லை

என்று வீடு திரும்பினேன்

எனக்காக சாப்பிடாமல்

என் “அம்மா” !

கவிதைகள் உலகம் smdsafa.net

மறக்க நினைக்கிறேன்

மறக்க நினைக்கிறேன்

உன்னை அல்ல

உன்னிடம் பேசாமல்

தவறவிட்ட

அந்த நிமிடங்களை!

கவிதைகள் உலகம் smdsafa.net

பிரிவு

எனக்காக பூத்திருக்கும்

ரோஜாவை கூட

பறிக்க முடியவில்லை

காரணம்

பிரிவின் வலி

எனக்கு தெரியும்!

கவிதைகள் உலகம் smdsafa.net

தவம்

உன்னோடு வாழ்வதற்கும்

உன் நினைவோடு வாழ்வதற்கும்

சிறு வித்தியாசம் தான்

    உன்னோடு வாழ்ந்தால்

அது வரம்

   உன் நினைவோடு வாழ்ந்தால்

அது தவம்..

கவிதைகள் உலகம் smdsafa.net

பிடிவாதம்

 அனுமதி கேட்கவும் இல்லை

அனுமதி வழங்கவும் இல்லை

ஆனால் பிடிவாதமாக

ஒரு முத்தம்

என் கண்ணத்தில்

கொசு கடி

கவிதைகள் உலகம் smdsafa.net

நேசிக்கிறேன்

என் கண்ணை நேசிக்கிறேன்

அது உன்னை காட்டியதால்

என் இதயத்தை நேசிக்கிறேன்

அதில் நீ இருப்பதால்

என்னையே நான் நேசிக்கிறேன்

உன்னுடன் நான் அன்பு கொண்டதால்!

கவிதைகள் உலகம் smdsafa.net

நிலா

உன்னை எட்டி பார்த்தேன்

நீ அழகாய் தெரிந்தாய்

ஆனால்

தொட்டு பார்க்க ஆசைப்பட்டேன்

நீ தொலைந்து போனாய்

“தண்ணீரில் நிலா”

கவிதைகள் உலகம் smdsafa.net

நட்பு

உறவென்று சொல்லிக்க

யாரும் இல்லாவிட்டாலும்

உயிர் என்று சொல்லிக்கொள்ள

ஒரு நட்பு இருந்தால்

போதும் உன்னை போல்!

கவிதைகள் உலகம் smdsafa.net

உனக்கும் இதயம்

உனக்கும் இதயம் இருக்கிறது

என்று

உனக்கே உணர்த்த

உன்னிடம் வருவது தான்

காதல்...

கவிதைகள் உலகம் smdsafa.net

அவளுக்கு இதயமாக

நான்
மீண்டும்
பிறந்தால்
அவளின்
இதயமாக
பிறக்க வேண்டும்

அவளுக்காக
துடிப்பதற்காக
அல்ல
...
இந்த முறையாவது
அவளுக்கு
இதயம் இருக்கட்டும் என்று...!

உன்
நினைவு
இல்லாத நாள்...?

என்
நினைவு நாள்...!

கவிதைகள் உலகம் smdsafa.net

வெறுப்பு

அவள் விரும்பிய அனைத்தையும்

நானும் விரும்பினேன்

அவள் வெறுத்த அனைத்தையும்
...
நானும் வெறுத்தேன்

என்னையும் சேர்த்து!

கவிதைகள் உலகம் smdsafa.net

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

கவிதைகள் உலகம்

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;