தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

திருமண வாழ்த்து உயிர் எழுத்துக்களின் வரிசைப்படி


அன்பே என்று அழைத்திடுங்கள்!

ஆசைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்!

இதயங்களை ஈந்திடுங்கள்!

ஈரவிழிகளை துடைத்திடுங்கள்!

உறவுகளை நினைத்ததிடுங்கள்!

ஊடல்களை மறந்திடுங்கள்!

திருமண வாழ்த்து கவிதை 15


அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.

இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்


உண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும்
வாய்மை வெல்லுமென் றுணர்
ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்

திருமண [கல்யாண] நாள் வாழ்த்து கவிதை 14


பூவினால் காய்கள் தோன்றும்!
புலவனால் கவிதை தோன்றும்!
நாவினால் சொற்கள் தோன்றும்!
காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம்
இனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு

கல கல பேச்சு உண்டு!
களங்கமில்லா தோற்றமுண்டு! -தன்
பல கலைத் திறனினாலே -மணமக்கள்

நலிவடையா விளை நிலம் போலானார்!

கன்னத்தில் பொலிவு தோன்றும்
கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது
எண்ணங்களிலும் இனிமை தோன்றும்
வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர்
நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…


கவிதைகள் உலகம் ..smd safa..

திருமண {கல்யாண} வாழ்த்துக்கள் 13


இதுநாள்காறும்
பூமியாய் நின்று
நிலவை ரசித்திருந்தவன்;
நாளைமுதல் நிலவின் கைப்பிடித்து
இராட்டிணம் சுற்றப் போகிறான்
திருமண வானில்!


கவிதைகள் உலகம் ..smd safa..

திருமண {கல்யாண} வாழ்த்து கவிதைகள் 12


அன்பின் நண்பர்களே,

இதயத்தால் இணைந்திட்ட

இவர்களின்

இல்லறப் பாதையெங்கும்

உங்களின் வாழ்த்துக்களால்

தோரணம் கட்டிட

விரும்பி அழைக்கிறோம்!கவிதைகள் உலகம் ..smd safa..

திருமண {கல்யாண} வாழ்த்து கவிதைகள் 11


திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயிக்கப்படுகின்றனவாம்......

இவர்களின்


நிச்சயிக்கப்பட்டுவிட்ட

சொர்க்கத்திற்கு,

திருமணநாள் நல்வாழ்த்துகள்...கவிதைகள் உலகம் ..smd safa..

திருமண {கல்யாண} வாழ்த்து கவிதைகள் 10


கண்களாலே காதல் பேசி

வார்த்தையாலே வர்ணம் பூசி

பாசம் என்னும் கவிதையெழுதி......

நேசத்தோடு வாழனும் நண்பா .....


வாழ்க வாழ்கவே வாழ்க என்றும்

வானம் உள்ளவரை வாழ்க என்றும்

வாழ்க வாழ்கவே வானம்

திருமண {கல்யாண} வாழ்த்து கவிதைகள் 9


சொர்க்கம் மண்ணில் கொண்டு
சொந்தங்களே நீவீர் வாழ்க!

பெற்றோர் உற்றோர் சுற்றம்
போற்றும் வண்ணம் வாழ்க!
இங்கிருந்து கொண்டே
வாழ்த்துகின்றேன் வாழ்க!

மணமகளும் மணமகனும் என்றும்..
இணைந்தே வாழ்க! இல்லறத்தை
இ(ணைந்)னிதே வெல்க!!!கவிதைகள் உலகம் ..smd safa..

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை 8


கையோடு கை சேர்த்து
இதயங்கள் இரண்டும் இணைந்து
மண விழா கண்டு
மனதை மணத்தால் அரவணைத்து
நூறாவது நாள் காணும் நீங்கள்
நூறாண்டு காலம் வாழ்வை நோக்கி
ஊரார் வாழ்த்துகளோடு
உலகமுள்ளவரை வாழ்த்திட வாழ்த்துகிறேன்கவிதைகள் உலகம் ..smd safa..

திருமண வாழ்த்து கவிதைகள் 7

வாழ்ந்திட வாழ்ந்திடவே.!
விண்மீன்கள் புன்னகையால்
புது கவிதைகள் பாடிடுமே.
பூங்காற்றும் தென்றலும் சேர
இசை சாரல் தூவிடுமே.
மஞ்சள் வேர் தனிலே
பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே.
குங்குமமும் கன்னங்களில்
அழகாஇ சிவந்திடுமே.
சூரியனும்,சந்திரனும்
தன் ஒளிகளால் வாழ்த்திடுமே.
கெட்டி மெளத்துடன்.. நாதமும்
சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.
நீங்கள் வாழ்ந்திட வாழ்ந்திடவே.!


கவிதைகள் உலகம் ..smd safa..

திருமண வாழ்த்து கவிதை 6

நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க
நற்றமிழாலும் அற்றமிழாலும்
நல்லோர்கள் வாழ்த்த.....

பட்டாடை சரசரக்க
புது மெட்டி ஒலிக்க
நறுமலர்களால் கோர்க்கப்பட்ட
மாலையை தோளில் ஏந்தி....

சந்தனக்களபமும் திலகமும் சூடி
விழிகளில் விரவியஅழகிய

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை 5

மலர்களில்
மாலை கட்டும் வித்தையை
உன்
கண்களுக்குச் சொல்லி
வைத்த மணமகள் – எங்கள்மணமகனின் எண்ணங்களை
மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று
வாழையடி வாழையாய்
பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில்
புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர்
வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும்
மாந்தர்களும் வாழ்த்துவர்கவிதைகள் உலகம் ..smd safa..

நண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்

எப்போது ஒன்று சேர்வோம்?
எப்படி ஒன்று சேர்வோம்?
இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள்
இனிமேல் உமக்கு இல்லை!

உணர்வுகளால் நேற்றுவரை
உரையாடிய காதல்ஜோடி
இன்றிலிருந்து என்றென்றும்
உடலாலும் இணைகிறது!

உள்ளத்தில் நீர் சுமந்த
உண்மையான அன்பிற்காய்
திருவிழா செய்கின்றோம்!
திருமணமாம் உமக்கின்று!

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை 4

ஆன்றோர் வாழ்த்துரைக்க
ஆயிரமாய் பூச்சொரிய
மங்கை திருமகளாய்
மணவறையில் காத்திருக்க

நாதசுர மேளங்கள்
நல்லதொரு வாழ்த்திசைக்க
நங்கை திருக்கழுத்தில்
நம்பி அவன் நாண்பூட்ட

கட்டியவன் கட்டழகை
கடைக்கண்கள் அளவெடுக்க

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை 3

வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் தேடி
வாசல்வரை வந்துநின்றேன்!
நீங்கள்
காதல் பேசி
கவிகள் பேசி
வார்த்தைகள் யாவற்றையும்
வசமாக்கி விட்டீரோ?

வார்த்தைப்
பஞ்சத்திலே நான்!
நீவீரோ மஞ்சத்திலே!
வாழ்த்துக்கள் உங்களுக்கு!
வாழ்க பல்லாண்டு!

நிலாவின் கைப்பற்றி

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை 2

உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!

அகர வரிசையில், குறள் வடிவில் திருமண வாழ்த்து மடல்

அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.

இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை

வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!

உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

திருமண வாழ்த்து மடல் 2


விதைகள் விருச்சமாவது இயற்கை!
விவாகமென்பது இருமனங்களின் சேர்க்கை!!

வாழ்கை என்னும் மரத்திற்கு
விதையாய் இன்று ஓர்தொடக்கம்

கோடையும் குளிரும் கலந்து
வருவது இயற்கை!
ஊடலும் கூடலும் பிணைந்து
வருவது வாழ்க்கை!!

திருமண வாழ்த்த்துக்கள் மடல்


ன்பே என்று அழைத்திடுங்கள்!

சைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்!

தயங்களை ஈந்திடுங்கள்!

ரவிழிகளை துடைத்திடுங்கள்!

றவுகளை நினைத்ததிடுங்கள்!

டல்களை மறந்திடுங்கள்!

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;