என் கறுப்பு வெள்ளை
கண்களிடம்
யார் சொன்னது ....?
உன்னைப் பார்த்தவுடன்
வண்ணமயமாய்
விழித்திரையில் பதிவுசெய்ய
வேண்டுமென்று..
இயல்பாய் துடிக்கும் என் இதயத்திடம்
யார் சொன்னது?
உன்னைப் பார்த்தவுடன்
வேகமாக துடிக்க
வேண்டுமென்று...
இனிதாய் பேசும்
என் நாக்கிடம்
யார் சொன்னது ....?
உன் பேரை
உச்சரிக்கும்போது
இசையோடு உச்சரிக்க
வேண்டுமென்று ....
நீ நீயாக இருக்க
மாற்றம் மட்டும் என்னிலா !!!
கவிதைகள் உலகம் ..smdsafa..




- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA