தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

என் ஆசை smd safa mohamed

தவமாய் தவம்

இருந்தேன்   நீ

என்னை   காதலிக்க

வேண்டும் என்பதற்காக அல்ல,

என்னை   ஒரு   முறையாவது

பார்க்க வேண்டும்   என்பதற்காக..


வீடு smd safa smohamed

நிரந்தர வீட்டை இழந்தவர்கள் நாம்...
நிரந்தர முகவரியை பிரிந்தவர்கள் நாம்...
ஓலை- குடில்களில் கூட வாழ்ந்தவர்கள் நாம்...
மர நிழல்களில் கூட உறங்கியவர்கள் நாம்...
சிறு தறப்பாளை கூட வீடாக்கியவர்கள் நாம்...
மண் குழியினில் கூட உண்டுறங்கியவர்கள் நாம்...
உறவுகளை இழந்தவர்கள் நாம்...
உணர்வுகளும் செத்தவர்களா நாம்...?
இத்தனை தூரம் வந்தவர்கள் நாம்...
அத்தனையையும் மறந்தவர்களா நாம்...?
எங்காவது ஒண்டிப்போய் கையேந்த யாசகர்களா நாம்...?
பாய் கண்ட இடத்தில் படுத்துறங்க பைத்தியங்களா நாம்?
தண்ணி கண்ட இடத்தில் விழுந்துகிடக்க எருமைகளா நாம்...?
கூடபிறந்தவன் எப்படியிருப்பினும் எப்படி நடப்பினும்
உறவென்று வரும்போது துடிக்கிறதே எம் சதை,
அடுப்படி பிரச்சினைகளை அங்காலே வைத்திடுவோம்...
நாமும் உணர்வுகள் சாகாத மனிதரென்பதை நினைத்திடுவோம்...
அதனால் அமைத்திடுவோம் தற்காலிகமாகவேனும்
ஒதுங்குவதற்கு ஓரு வீட்டினை...

கடல் நீர் smd safa smohamed  

வானம் தரமறுத்த மழை துளிகளை எண்ணி விவசாயி வடிக்கும் கண்ணீர் துளி {கடல் நீர்},

அதனாலோ என்னவோ கடல் நீரும் கரிக்கின்றது விவசாயிஇன் கண்ணீரை போல................

என் தந்தை smd safa smohamed


புயலில் பூப் பறிக்க
கற்றுத் தந்தீர்

கோபத்தில் அழகாய்
பொறுமையைக்
கற்றுத் தந்தீர்

ஏழ்மையிலும்
உணம்யாய்
வாழக் கற்றுத் தந்தீர்

வறுமையிலும்
எளிமையாய்
வாழக் கற்றுத் தந்தீர்

இறுதியாய் தாங்கள்
மரணத்தால் அழவும்
கற்றுத் தந்தீர்

-------..மகனாக - எஸ்.முகமது..-------- 

      ........மேக்காமண்டபம்........

பெண் குழந்தை smd safa mohamed

பெண் குழந்தை தான்
பிறக்க வேண்டும் !
குடும்பத்துடன்
வேண்டுதல் !
பிரேசவா வழியில்
" பசு "

முகம் பார்க்கும் கண்ணாடி. smd safa smohamed


நம்மை புரிந்து கொண்ட உண்மையான உறவுகள்..
முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது..
அதில் நாம் நம்மையே பார்த்து கொள்ளலாம்..
அந்த உண்மையான உறவுகளை பாதுகாத்து கொள்ள..
வேண்டியது நம் கரங்களியே உள்ளது...
கைதவரி விழுந்து அது உடைந்து விட்டால் கூட..
அதில் மீண்டும் ஒரு முகம் காண்பது அறிது...

என்னவளின் மேனியை வருடிச் செல்ல ....... smd safa smohamed

காற்று

கண்ணுக்கு தெரியாமல்

கரைந்த

காரணம் புரிந்துவிட்டது.....

என்னவளின்

மேனியை

வருடிச் செல்ல தானே!!!

எனக்குள் ஒரு காதல் smd safa smohamed

 

திட்டி திட்டி தீர்த்தனர்
ஒரு பெண்ணை வேண்டாம் என்று சொன்னாய்
அவள் மனது புரியாமல் போன
கல் நெஞ்சக்காரன்
அவள் வாழ்க்கையை கெடுக்க நினைத்த பாவி
நம்பியவளை கெடுத்து மோசக்காரன்
எதைப்பற்றியும் கவலை கிடையாது எனக்கு
யார் திட்டினால் எனக்கென்ன
கோபமாய் சொல்லிவிட்டேன் அவள் எனக்கு வேண்டாம் என்று
இதனாலே திட்டி திட்டி தீர்த்தனர்
இவனுக்கெல்லாம் எங்கே காதல் வரப்போகுது
கல்யாணம் நடக்கப்போகுது
அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல்
எனது அறைக்கு சென்று விட்டேன்
இப்போது அழுகிறேன்
கதறி அழுகிறேன் சத்தம் வராமல்
நான் காதலித்தவள் என்னை காதலிக்கவில்லை
அவளை மணம் முடிக்க
ஏற்பாடு செய்தும் வேண்டாம் என்றேன்
அவளின் காதலுக்காக
அவள் காதல் வெல்ல என் காதலை புதைத்தேன்
யாருக்கு தெரியும் என் காதல்
அவளுக்கே தெரியாத புரியாத என் காதல்
இனி யாருக்கு தெரிய வேண்டும்
என் காதல் என்னோடு
எனக்குள்ளும் ஒரு காதல்
யாருக்கும் தெரியாத காதல்
அழுது புரளும் என் காதல்
அவள் நினைவிலேயே வாழும் என் காதல்
இது எனக்குள் ஒரு காதல்

ஜன்னலோர சாரல்கள்... smd safa smohamed


இமை கொட்டாமல்,
இறுகிய கம்பிகளின் வெளிப்பக்கத்தில்,
இப்படி தினமும் மூழ்கிப்போகிறாள்...

தெருவில் குட்டியோடு கொஞ்சிடும் நாயிடம்,
தெரியவந்தது- தாய்ப்பாசம்.

மர நிழலில் த்ள்ளுவண்டியோடு,
மகனின் சட்டை பொத்தானை
மணி நேரமாய் சரிசெய்த,
அப்பாவிடம் தெரிந்தது- அக்கறை.

இப்படி எவ்வளவோ இருந்தும்,
மனமார்ந்த பாராட்டை
மின்சார வாரியம் தட்டிச்சென்றது...

இரண்டு மணி நேரம் மூச்சடிக்கி,
இயற்க்கை சினிமாத்தனத்தை
இவளுக்காக ஜன்னல் திரையில் கொடுத்ததுக்காக...

ஐந்து மணி ஆகிய ஆத்திரத்தில்,
அவசரமாய்
அம்மாவின் அதேஅழைப்புமணி
அலுவலக தொலைபேசியில் இருந்து ,

"கரண்ட் வந்ததும்,
கேபிள் போட்டு,
கார்ட்டூன் பாத்துகோ"


உனக்காக துடிக்க smd safa smohamed

ஒரு நொடி கூட உன்னை

பிரிய முடியாது என்று உன் இதயமாகிறேன்

உனக்காக துடிக்க

என்னவளே smd safa smohamed

என்னவளே

இதயம் எதெற்கு எனக்கு தனியாக

நீ இருக்கையில்


வாழ்க்கை smd safa smohamed

நொறுங்கிய.....மிச்ச...சொச்சமும்....! smd safa smohamed
நீ.....,
விட்டுவைத்த.......(புட்டுவைத்த)
பாதி.....இதயமும்.......
இன்று......நொறுங்கியது........
உன், திருமண அழைப்பிதழைக்கண்டதும்.....!

கண்கள் இரண்டும் smd safa mohamed

"கண்ணே நீ என்னைப் பார்த்தால்,
என் கண் இமைகள் குட
இமைக்க மறக்கின்றது"

அன்பே உன் அனல் பார்வை smd safa smohamed

அனல் பறக்கும்
உன் பார்வை ,
அன்பே ,
அதை தணிக்க
தினம் தினம்
தேடுகிறேன்
தண்ணீர் !

இதயத்தை நனைத்தவள் smd safa smohamed

கண்ணீர் கொண்டு கண்ணீர் கொண்டு

என் காதலை அழித்து விட்டு

கானகம் செல்லும் பிணமாய்

என்னை மாற்றியது நீதானே

அம்மா smd safa smohamed

அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் தேடுபவர்களே
அறிந்தது கொள்வீர் அன்பென்றால் அம்மா தானே..........
இரைந்து மாதங்கள் இடுப்புவலி பொறுத்து
இவ்வுலகை பரிசளித்தாள் இனியவாழ்வை எமக்களித்தாள்........
அருகிருக்கையில் அலட்சியம் அம்மா உன்சொல்களுக்கு
தொலைவில் இருக்கையில் சொல்வதற்கு
யாருமின்றி துவளுதே என்மனமதுவே..........
சோகமதில் துவண்டால் தாய்மடியே சொர்க்கம்
என்வேதனைகள் போக்க உன் ஒரு துளி புன்னகையே மருந்து ....
நான் படும் துன்பங்கள் அனைத்தும்
தாயே உன் நினைவால் தவிடு பொடியாகிவிடும்
தாவிடும் மனது அடுத்த செயலுக்கு ......
உன் மனம் நோகவிட்டபோதும்
என் மனம் நோகவிட்டதில்லையே
தாய் அன்பால் இந்த தரணியை விலைபேசிடலாம் .........

இதயத்துடிப்பு smd safa smohamed

நீ என்னிடம்
இருந்து
எடுத்து சென்றது
என் இதயத்தை
அல்ல
என் இதயத்துடிப்பை.....


செல்போன் காதல் smd safa mohamed

அன்பே
நீ ஒரு
ஒரு செல்போன்
ஆமாம்
என் பாக்கெட்டில் balance
உள்ளவரை மட்டுமே
நீ என்னோடு பேசுவாய் !

என்றும் நட்புடன்... smd safa smohamed


கூடிவாழ்ந்தால் கோடி நன்மை - என்று
காட்டியதோர் நல்ல நட்பு...
நண்பனென்றால் நட்பு அல்ல - பெற்ற
தகப்பனைப்போல் தாயுள்ளம் உண்டு ..

எனக்கு வலிக்க அவனும் துடிப்பான்
என் தோல்வி கண்டு கரை ஏற்றிடுவான்,
இனிமையிலும் அருகில் இருந்திருப்பான் - என்
தனிமையினை என்றும் வென்றெடுப்பான்...

முயற்சிக்கு முதுகெலும்பாய் இருப்பான் - யாரும்
இகழ்ச்சி கொண்டால் எரிமலையாய் வெடிப்பான்
என் காதலுக்கு இவன் தூதும் செல்வான்
வேண்டாம் காதலென்று போதனையும் தருவான்..

நட்பு எனும் மந்திரம் என்றும் - அது
துடுப்பாய் வாழ்வில் வந்திடும்..
என்றும் வாழும் இனிய நட்பு -எதையும்
வென்று காட்டும் நமது நட்பு...


முத்துக்கள் smd safa smohamed

பொன்மொழிகள் 10 smd safa smohamed

1. அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.
2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.
3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.
4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.
5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.
6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.
7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.
8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.
9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.
10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.

வாழ்க்கை கணக்கு smd safa smohamed

தோல்வியை – கழியுங்கள்
முயற்சியை – கூட்டுங்கள்
வெற்றியை – பெருக்குங்கள்
பலனை – வகுத்துவிடுங்கள்
புரிந்ததை- விரிவுபடுத்துங்கள்
புரியாததை- சுருக்குங்கள்
சரித்திரங்களை- சூத்திரங்களாக்குங்கள்
உங்களை நீங்களே- மதிப்பிடுங்கள்

ஒரு வரி சிந்தனை smd safa smohamed

* எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை. * தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு.
* பொருளை தவிர வேறு செல்வங்கள் கிடைக்கப் பெறாதவனும் ஏழைதான்.
* இதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக்

வெட்கம் smd safa smohamed

பொம்மிம்மா! smd safa mohamed

என் அம்மா பசு  விடம்   கறந்து கொடுக்கும் பாலைச் சொம்பில் ஊற்றிக்கொண்டு வந்து, தினமும் உன் வீட்டு வாசல் முன் அதிகாலையில் நிற்பேன். அதை வாங்குவதற்கு உன் வீட்டில் எத்தனையோ வேலைக்காரிகள் இருந்தாலும் நீதான் வருவாய்!

என் அம்மா smds safa smohamed

mohamed fathima


உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;