தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

உலகம் அழிகிறது... smd safa smohamed


உலகம் அழிகிறது
இந்த உலக அழிவில்
எனக்கு பங்கு உண்டு
உனக்கும் தான்.......

பல அணுக்கல் சேர்ந்தது

ஏன் படைத்தாய் ? smd safa,


என்னைப் படைத்த இறைவனே
ஏன் துன்பத்தையும்
சேர்த்துப் படைத்தாய்

மனிதனுக்கு மட்டும் தான்
சிரிக்க முடியுமாம் ! தெறியுமாம் !
உன்மையா ?

காதல் இல்லயே சாதல்...... smd safa,


மரணம் !
அது எல்லோருக்கும் உண்டு

ஆனால்

உன்னைப் பிறிந்தால்
எனக்கு கொஞ்சம் சீக்கிறம்
வந்து விடும்......

உயிரைப் பிறிந்து
உடல் எப்படி வாழும் ?
நீ இன்றி - நான்
எப்படி வாழ்வேன் ?


கவிதைகள் உலகம் smdsafa.net

பூவுக்குள் தேவதை.. smd safa smohamed

பூவுக்குள் கருவாகி
நிலவைப்போல் முகம் வாங்கி
சிற்பிக்குல் முத்தைப்போல்

நிலவுக்குப் போட்டியாக
இம்மண்னில்ப் பிறந்தவளோ
என் அழகு தேவதை ............


கவிதைகள் உலகம் smdsafa.net

மனதுக்குள் சாறல்....... smd safa,

வீட்டின் வெழியே மழை
என் மனதின் உள்ளே -சாரல்
இரவின் இனிமை புரியவில்லை
தனிமை என்னை தாக்கியது

என் உள்ளம் காயம் பட்டது
எங்கே என்......

வாழ்க்கை வாழ்வதற்கே....... smd safa


வாழ்க்கை வாழ்வதற்கே
என்று தெறியும்- நாம்
வாழப் பிறந்தோம்
என்பதும் தெறியும்....

பிறப்பிற்கும் இற்ப்பிற்கும்
உல்ல இடைவெளியே வாழ்க்கை
என்பதும் புறிந்துவிட்டது

ஆனால்

நீ இல்லாமல்
வாழ்ந்து என்ன பயன்
என்பதுதான் தெரியவில்லை......


கவிதைகள் உலகம் smdsafa.net

ஒரேப் பார்வை....... smd safa smohamed


இரண்டு சூரியன்
ஒரே இடத்தில்
உன் கண்கள்........

என்னை சுட்டெரித்தன
நான் சாம்பலானேன்
பீனிக்ஸ் பறவையாய்

கவிதை நடை smd safa,


கவிதை நடை

அன்பே !
கவிதை நடை என்று
நான் கேள்விப்பட்டிருக்கிறேன்

ஆனால் !
இன்றுதான் பார்க்கிறேன்.......

நீ ! நடந்து வருகையில் !


கவிதைகள் உலகம் smdsafa.net

சுகமான சுமை smd safa,


 என் இதயம் கூடஒரு சுமை தாங்கி தானுன்
  நினைவை மட்டும் சுமப்பதால்
 அந்த சுமையும் சுகமே அதை நீ தந்ததால்.


 வெள்ளை சுடிதாரில் தேவதையாகிறாய்…
 பச்சை, நீல வண்ணங்களில் மயிலாகிறாய்…
 எப்பொழுது பெண்ணாவாய்?


 வாசனையுமுண்டு
 வாடுவதுமில்லை
 நீ பூத்தப் பூவா? ப்ளாஸ்டிக் பூவா?

 மழையில் நனைந்ததும்,
 மேகத்தைத் துவட்டிக்கொள்கிறாய்!

 மழையில் குடை…
 குடைக்குள் நாம்…
 நமக்குள் மழை!
                              கவிதைகள் உலகம் smdsafa.net

கனவுலகத்தில்அவள் smd safa smohamed

இந்த உலகத்தில் நான் இல்லை,


அவளுடன் மாலையில்


எனக்காக உருவாக்கிய 


கனவுலகத்தில் அவள் 


கை பிடித்து நடந்து செல்கிறேன்


தொலைந்து விடுவேன் என்று...

கவிதைகள் உலகம் smdsafa.net

***தாடி** smd safa smohamed


அவள் 

முத்தமிட்ட கன்னத்தை

தென்றல் கூட 

தீண்டிவிடக்கூடாது 

என்பதற்காக

நான் போட்ட 

வேலிதான் 

  
         ....தாடி....கவிதைகள் உலகம் smdsafa.net

உயிரில் ஊருவதுதான் காதல் ! smd safa smohamedகாதல் மனதில் முளைப்பதில்லை
மனதின் முடிவில்தான்
காதல் தொடங்குகிறது !

மனம் ஆசைகளை உருவாக்கும்
கருவி மட்டுமே
அதையும் தாண்டி
உயிரில் ஊருவதுதான் காதல் !


கவிதைகள் உலகம் smdsafa.net

ஏன் பெண்ணே முறைக்கிறாய் ? smd safa smohamed


ஏன் பெண்ணே முறைக்கிறாய் ?
நீ ! தங்கமான பெண் என்றார்கள்
அது உண்மையா , என்று
 தானே
உரசிப் பார்த்தேன் !


கவிதைகள் உலகம் smdsafa.net

நிலவின் தங்கையோ நீ ?


பனி இறங்கும் வேளை
குளிரும் இரவு
கருத்த வானம்
மேகத்தின் நடுவில் - ஒரு
வட்ட பௌர்னமி நிலா!

வெளிச்சம் அள்ளி வீசுவதை - காண
ஆவலுடன் காத்திருந்தேன் !

அந்த ஆசை
ஒரு கணத்தில் மறைந்தது
உன் முகத்தைப் பார்த்ததும் !

உன் முகத்தில் நிலவை காண்கிறேன்
நிலவில் உன் முகத்தை காண்கிறேன்
உங்களுக்குள் என்ன ஒற்றுமை ?

நிலவின் தங்கையோ நீ ?


கவிதைகள் உலகம் smdsafa.net

என் ஆத்மா!


பெண்ணே !
எனக்காக கண்ணீர் சிந்தாதே !
நீ அழுதால்
என்னால் தாங்க இயலாது

சேர்த்துவை ! உன் கண்ணீரை

என்றோ ஒரு நாள்

உரசல் smd safa smohamed


காற்றும் மரமும் உரசாதா ?
மேகம் வானை உரசாதா ?
மழை பூமியை உரசாதா ?

நான் உன்னை உரசினால் மட்டும்
ஏன் எரிமலயாய் வெடிக்கிறாய் ?


கவிதைகள் உலகம் smdsafa.net

3011 எ லவ் STORY smdsafa smohamed

3011 எ லவ் STORY  
என் இடப்பக்கம் இருந்த 
பொத்தானை அழுத்தினேன் 
அந்த கால மோகன் பாடல்களாம் 
நன்றாக தான் இருந்தன... 
என்னை அறியாமல் 
என் சில்வர் கன்னங்கள் 
எனக்கு கண்ணீர் வந்ததை 
உணர்தின... 
மனதுக்குள் சாபமிட்டேன் 
மனித பயல்களை..... 
எங்களுக்கு உணர்சிகளை ப்ரோக்ராம் செய்து 
வன்மம் இரக்கம் இத்துடன் 
காதலையும் தந்ததற்கு .........

கவிதைகள் உலகம் smdsafa.net

நண்பா உனக்காக smd safa smohamed


நண்பா உனக்காக..நட்பே உனக்காக..  
இதுவரை கண்டதில்லை 
இதுபோல் நட்பை - என் 
இமைகளின் கண்ணீர் சொல்லும் - நான் 
ரசித்த அன்பை.. 


காதலினால் வலித்த நெஞ்சம் 
காயம் பட்டு கிடக்கையிலே 
மருத்துவனும் நீ அல்ல 
மருந்தாய் நீ வந்தாய்.. 


சிதறிப்போன நெஞ்சமதை 
சரி செய்ய நீ துடித்தாய்.. 
நான் துடித்திருந்த நேரத்திலே 
எனை அணைத்து நீ அழுதாய்.. 


என் உயிரை மீட்டவனே 
உணகென்னவென்று நான் செய்வேன் 
எங்கிருந்தோ நீ வந்தாய் 
என் மூச்சு காற்றில் கலந்துவிட்டாய்.. 


உன்னை போல் நண்பன் இங்கு யாருக்குண்டு.. இதுபோல் கர்வம் என் நட்புக்குண்டு.. 


நன்றி என்று சொல்லிவிட நமக்குள் என்ன நட்பா! அப்பப்பா..இது 
அதினும் பெரிதப்பா..                    கவிதைகள் உலகம் smdsafa.net

அந்தி மாலை smd safa smohamed..


அவள் நான் அந்தி மாலை   


அவள் 
நான் 
அந்தி மாலை 
பிரிக்க முடியாத 
கூட்டணி 
இது அரசியல் 
இல்லை 
காதல் காதல் காதல் 


இது முக்கோணம் இல்லை 
பார்வையின் 
ஒரே கோணம் 
ஒரே வானம் ஒரே மனம்...       கவிதைகள் உலகம் smdsafa.net

தொலைந்து போனது என் கவிதைகள்... smdsafa smohamed


எங்கே தொலைந்து போயின என் கவிதைகள்...  
நான் 
தேடித்திரிந்து... 
தூரம் அலைந்து.. 
மூழ்கிப்பிறக்கவில்லை, 
என் கவிதைகள். 
உன் 
ஒற்றைப் பார்வையிலேயே 
தானாகப் பிறந்துபோயின 
கவிதைகள். 


அறியாமல் பிறந்தாலும் 
எனக்குள் ஊறி 
என் நினைவாய் மாறி... 
உன் நினைவாய் 
எழுதிய வரிகள் 
எங்கு தொலைந்து போயின இன்று. 
உன்னை போலவே 
விலகிப் போய்விட்டனவோ... 
உன்னை காணாது 
காய்ந்து போய்...ஈரமான 
என் கண்களின் கண்ணீரோடு 
அதுவும் கரைந்து 
தொலைந்து போனதோ... 


இல்லை உன் வழிதடம் தேடி 
கடந்து போனதோ.... 


எங்கே தொலைந்து போயின 
என் கவிதைகள். 
இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் தேடிப்பார்த்துவிட்டேன்.... 


வரிகள் தொலைந்தது என்றால்.. வார்த்தைகள் எங்கு போயின... 


உவமையாய் இருந்த, பூக்களும் தென்றலும் வானவில் மழையும், 
நிலவும் கூட மறுத்துவிட்டன.   வரிகளுக்கு வரிகள் நான் வர்ணித்த 
வண்ணத்துபூச்சிகள் கூட சொல்ல மறுக்கின்றன. 


நான் அமர்ந்து இரசித்த 
வாய்கால் ஓடைகளும், கரை ஓர சின்ன மீன்களிடம் 
கூட கேட்டுப்பார்த்துவிட்டேன். எங்கே தொலைந்து போயின 
என் கவிதைகள். 


விடைகிடைக்காமலே திரிகிறேன்.... 


எங்கே தொலைந்து போயின என் கவிதைகள். தயவு செய்து நீயாவது சொல்லிவிடு.

கவிதைகள் உலகம் smdsafa.net

அவள் அழகு.. smdsafa smohamed..


சிற்பிக்குள் அடுக்கி வைக்கப்பட்ட முத்துக்கள் 


அவளது பல் வரிசை ...

 
ஆலமரக் கொழுந்தின் மென்மை போன்ற 
மிருதுவான அவளின் கன்னங்கள் ....

 
அவளை மறக்க நினைத்தாலும் நினைக்க தூண்டும் 


காற்றில் அசையும் கூந்தால்...

 
ஐயோ முடியவில்லையே!!!! கவிதைகள் உலகம் smdsafa.net

காத்திருந்து! smdsafa smohamed..காத்திருந்து! 
காத்திருந்து! 
கவிதைகள் பூதிருசி! பூதிருசி! 
அவள பத்தி! 

என் காதல சொல்ல தான் அவ இல்ல 
என் கிட்ட! 
சேந்திருசி சேந்திருசி! 
கோடி கோடி யா அவள 
பத்தி நான் எழுதுற கவிதை 
மட்டும்! 

எதுக்கு புள்ள வந்த 
என்ன கிருகணாகி போன! 

கவிதை மட்டும் வருது 
உன்ன பத்தி வேற யாரோடவும் 
பேசகூட முடியல! 

பத்தி பேரு சொல்லுறன் 
காதல் கழகம்னு! 
வந்து ஒரு பதில் சொல்லி போடி 
என்ன கொஞ்சம என்கிட்டே தந்துட்டு போடி! 


கவிதைகள் உலகம் smdsafa.net

காத்திருக்கிறேன்.. smdsafa smohamed..


 

நொடி பொழுதில் என்னை தாக்கிய மின்னல்! 
அவள் வந்து போன தடம் பார்த்து காத்திருக்கிறேன் 
கவிதை வரிகள் பூக்க! 

மறந்தேன் கேட்க மறந்தேன் அவள் பெயரை! 
தேனோ இல்லை மீனோ! 
இல்லை நான் அவளுக்கா காத்திருப்பது வீணோ? 

ஏனோ நான் மட்டும் தானோ அவளை பார்க்க 
துடிக்கிறேன்! 
காதல் வரம் கேட்க துடிக்கிறேன்! 


கவிதைகள் உலகம் smdsafa.net

உலகம் சுற்றும் வாலிபன்.. smdsafa smohamed


ஆசை  

உலகம் போற்றும் வாலிபனாக தான் ஆசை. 
உன்னை காணும் முன்பு வரை.. 

உன்னை கண்ட பிறகோ, 
உலகம் சுற்றும் வாலிபனாகி விட்டேன்.. 
* நீயே என் உலகம் ஆகி விட்டதால் * கவிதைகள் உலகம் smdsafa.net

பணம் ! smdsafa smohamed..உலோகம், காகிதம் என்றாலும் - இந்த 


உலகை இயக்கும் இன்னொரு இறைவன் ! 

மனிதன் படைப்பில் 

மாபெரும் சக்தி ! 

இது இருந்தால் உன்னை 

உனக்கே தெரியாது 

இது இல்லைஎன்றால் 

உன்னை யாருக்கும் தெரியாது ?
கவிதைகள் உலகம் smdsafa.net

உன் காதலால்.. smdsafa smohamedநோக்கம் மாற்றப்பட்டது உன் காதலால். 

முன்பு நான் என் தோட்டத்தில் 
வளர்த்த பூக்கள் என் 
கல்லறையில் வைப்பதற்காக , 
ஆனால் இன்று அவற்றின் 
நோக்கம் மாற்றப்பட்டது 
உன் காதலால். 
அன்பே நான் உன்னை காதலிக்கிறேன்கவிதைகள் உலகம் smdsafa.net

அஸ்திவாரங்கள் smdsafa smohamedமேலோட்டமான மேல் பூச்சுகள் 
மெச்சப்படுகின்றன...! 

ஆனால், 

ஆழமான அஸ்திவாரங்கள்........? 

( மதிக்கபடுவதில்லை, மிதிக்கப்படுகின்றன ) 

- சொல்லப்பட்ட அனுபவம்...கவிதைகள் உலகம் smdsafa.net

லஞ்சம்... smdsafa smohamedஎன் 


காதலை தெரிவிக்க 


தொலைபேசி 


சில்லரையாக கேட்டது


லஞ்சம்..
கவிதைகள் உலகம் smdsafa.net

ஒரு நாள் எனக்காய் வாராயோ.... smdsafa smohamedஇரவு எனும் காட்டிற்குள் ............ 
தனிமைச் சிறை தந்து போனாயே. 
கார்மேகம் கவிந்த நாளிலெல்லாம்......... 
காத்திருந்த பாலையதின் கனவாகி 
காற்று வந்து கலைத்திடுமே........... 
வானமழையும் வாராது, வையகமும் குளிராது..-நீ 
வரும் நாளேண்ணி நித்தம் ஒரு நினைவு கொண்டேன் 
உனையே எண்ணி...... 
எனையே மறந்தேன்.... 
என் காதல் என்றும் உன்னோடு 
எனக்காய் வாராயோ ஒரு நாள் 
வெண்ணிலாவே...


கவிதைகள் உலகம் smdsafa.net

என்னவளின் விழிகள் smdsafa smohamedஅது ஒரு பொன் மாலை நேரம், 

காதலை அவளிடம் சொல்லிய மறுநாள், 

எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன் என்னவளின் வருகைக்காக, 


வந்தாள்.....!!!! 


எப்போதும் என்னை ஓரக்கண்னால் பார்த்து பேசி சிரிக்கும் அவளது விழிகள் இன்று ஏனோ கற்களின் மீது காதல் கொண்டு இருந்தது...!!!!!!! 


எப்போதும் என்னை ஏமாற்றும் அவளின் பூவிதழ்களோடு இன்று அவளின் பால்விழிகளும் 
சேர்ந்துகொண்டன...!!! 

விழி ஏதும் பேசாமல், இதழ் ஏதும் பேசாமல் அவள் என்னை கடந்து போய் விட்டாள்....!!! 

அவள் ஸ்பரிசம் பட்ட தென்றல் என்னை பார்த்து ஏளனமாய் நகைத்து கொண்டு இருந்தது.....!!1


கவிதைகள் உலகம் smdsafa.net

என் உயிர் தோழர்கள் smdsafa smohamed


சூ ரி ய ன்:

காலை வேளை கொஞ்சலாய்சிணுங்கி !

மத்தியில் கருணை காட்ட கெஞ்சவைப்பவன்

என் தோழன் ! மாலையில் இதமாய்

ஆரத் தழுபுவனும் அவனே !!

நி ல வு:

தினமொரு சேதி தருபவன்

பழக இனியவன் ! தேய்விலும்

எனை மகிழ்விப்பவன் ! என் தோழன்

பிரிய மனமில்லா ஈர்ப்பவனும் அவனே !!


கா ற் று:


எந்நேரமும் ஆறுதலாய் ஸ்பரிசமுமாய்...

அந்தரங்க அறை முதல் இடபிங்கலை சுற்றி

சுழுமுனை தட்டி என் சுயத்தை உணர்ந்தவன்

என் தோழன் ! சுவாசம் மூச்சு எல்லாம்

அவனே...!!

கவிதைகள் உலகம் smdsafa.net

காதல் படங்கள் Love images sms pictures smdsafa smohamed
கவிதைகள் உலகம் smdsafa.net

Love images smdsafa smohamed
கவிதைகள் உலகம் smdsafa.net

smdsafa birth day

கவிதைகள் உலகம் smdsafa.net

Birth day Pictures...Smd safa smohamed


கவிதைகள் உலகம் smdsafa.net

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;