தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

நண்பனின் பிரிவு ரெஜின் REGIN




வாழ தெரிந்த மனிதன்
கற்றுக் கொள்ளும் பாடம்
நட்பு...!!

உயிர்த் தோழனின் நட்பு
உருக வைக்கும் ஆனந்தம்
சுக துக்கங்களை பரிமாறும்
ஓர் ஆனந்த திருவிழா...!!

உண்மையான நட்பு
ஒருவனை மனிதனாக்கும்
வாழ்வை தொலைத்தவன் கூட
நட்பை தொலைக்க மாட்டான்

ஆனால்...
என் நண்பனை தொலைத்தேன்...
நட்பை தொலைக்கவில்லை...

கவிதைகள் உலகம்..  ..smdsafa..

நண்பனின் பிரிவு கவிதை ரெஜின் REGIN



நண்பனின் பிரிவு !
கண்ணீரை சந்திக்கிறேன்
என் நண்பன் இல்லாதபோது
தனிமையில்தான் வாழ்கிறேன் -நீ
இல்லாத ஊரில் ...

மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள
நண்பனே நீ இல்லை அதனால்
மகிழ்ச்சியை நான் உணர்வதே இல்லை !

நீ கற்றுக்
கொடுக்கவில்லையடா
உன்னை பிரிந்து வாழ ...

குடியரசு தின வாழ்த்துகள்



அடக்குமுறைசெய்த அன்னிய
ஆங்கிலேயர்களிடமிருந்து
அகிம்சை என்னும்
அறவழியில் வெற்றிவாகை
சூடிய தினம்
உப்புசத்தியாகிரகங்களால்
தன்
உடல்களை வருத்தி
தாயகத்திற்க்கு
பெருமைத்தேடித்தந்த தினம்
தன் குருதிகளையும்
தன் தேகங்களையும்

நான் வாழ்த்துச் சொல்லும் நாள்



அழுது அழுது
வீங்கிய கண்களோடு
மீண்டும் மீண்டும்
அழுத தோழிகளோடு
பள்ளியிலிருந்து வெளியில்
வந்தாள் என் மகள் !

வறுமை பிடித்து தின்ன
வாழ்க்கைக்கான தொழிலாய்
கையிலிருந்த தையல்
தொழிலும் நசிய
கட்டிய கணவனோ
டாஸ்மார்க்கில் குடியிருக்க
வயிற்றைக் கழுவ
வாங்கிய கடனோ
வட்டிக்கு மேல் வட்டியாய்
குட்டி போட

குடியரசு தின வாழ்த்துக்கள்



காரு வண்டி நிக்கும்
கார வீட்டுக்குள்ள
யாருமில்ல ?

ஏறு உழுத
ஏழைக்கெல்லாம் குடிக்க
கூழுமில்ல...

வெரலால ஓட்டு போட்டோமையா...
வெவரமில்லா கூட்டமையா...

அவள் தந்த முதல் முத்தம்


இருளில் இருந்த என்னை ஒளி
காண செய்தவள் அவள் ;

என்னை முதல் முதலில் காதல்
செய்த வளும் அவளே ;

இன்று வரை என்மேல் அக்கறை
கொண்டு நடப்பவள் அவள் ;

பல நாட்கள் என்னை தன்னுள்
முழ்க செய்தவள் அவள் ;

அவளுடன் இருந்த நான் தனிஉடல்
என்று ஆன பின்பு ,

அவமானம்



வாழ்க்கை எனும் மலையிலே

வெற்றி எனும் சிகரந்தொட

சமுதாயம் எனும் சிற்பியால்

செதுக்கப்படும் படிகளே

                                         -அவமானம்


கவிதைகள் உலகம் ..smdsafa..

அனாதையின் தீபாவளி


ஐப்பசி வைகறைல்-
பெய்த சிறுமழையில்-
வீதியில் படுத்துறங்கும் -
 அனாதை சிறுவனவன் -
குளிர்ந்த மழைநீரில் -
உடல் குளித்து .

வீதி வழியெல்லாம் -
தேகம் நடுநடுங்க -
நடந்து செல்கையிலே -
அங்கொரு வீட்டருகில் -
முள்ளு கம்பியிலே -
ஓரு சட்டைகண்டு-
குளிருக்கு இதமாக -
கிழிந்த சட்டையதை -
புத்தாடையாய் உடுத்தி .

பசி கண்ட -

நம்பிக்கை




நம்பிக்கை
முயற்சி மட்டுமே
என் மூலதனம்
இழப்பதற்கு ஏதுமில்லை
வெற்றியும் தோல்வியும்
வெறும் நிகழ்வுகளே



கவிதைகள் உலகம் ..smdsafa..

திருவிழா



ஊரெல்லாம் திருவிழா
வீதியில் வண்ணவிளக்குகள்
இருளை திண்றுக்கொண்டிருக்க
யாரும் கவனிக்கவில்லை
பவுர்ணமி நிலாவின்
பரிசத்தை


கவிதைகள் உலகம் ..smdsafa..

நினைப்பு


நீ எங்கிருந்தாலும் எனக்காக இருக்கிறாய் !
என்ற எண்ணம் !
நீ தள்ளியே வைத்திருந்தாலும்,
தடவிக்கொண்டேயிருக்கிறது நெஞ்சை !!
அந்த நம்பிக்கையில் உனைப்பற்றி,
எந்த விவரமும் தெரியாமல் உழல்கிறேன் !
நிறைய அர்த்தமில்லாத அர்த்தங்களுடன் !!
தெரியும் நம்புகிறேன் !
நீ நினைத்துக்கொண்டுதானிருக்கிறாய் என்னை !!

கவிதைகள் உலகம் ..smdsafa..

காதலை சொல்ல தமிழ் மட்டுமே


காதலை சொல்ல தமிழ் மொழி மட்டுமே சிறப்பானது..

கவிதைகள் படங்கள்






கவிதைகள் உலகம் ..smdsafa..

மயிலிறகு


நீ உதிர்த்துப்போன ஒரு இறகு,
பத்திரமாய் என் மகளின் புத்தகத்திற்குள் !
வளர்கிறதா என்று தினமும் சோதிக்கிறாள் !
என்னிடம் என்னிடம் புருவமுயர்த்தி வினவுகிறாள்,
அப்பா !!
மயில் ஏன் குட்டி போடவில்லை? என்று,
நான் சொல்கிறேன் !
மயிலைப் பார்த்தே கேட்டுவிடலாமென்று !
உடனே எப்போது என்கிறாள் !!
சொல் மயிலே !!
எங்கு வரட்டும் பதிலுக்கு என் சின்ன மயிலுடன் ?


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல் கண் என்றால்


காதல் கண் என்றால்
இமை தான் நட்பு

நட்பு ஓர் உயீர்
காதல் ஓர் சுவாசம்

நட்பு பகைமை பாராட்டும்
காதல் மனிதத்தை உருவாக்கும்

இரண்டுமே இரு கண்கள் தான்
இதில் ஒன்று இல்லை என்றாலும்
நான் குருடன் தான்.


கவிதைகள் உலகம் ..smdsafa..

வாழ்க்கை



மனம் உனமாக உள்ள மனிதர்கள்
மத்தியில் மனிதனாக வாழ்வதை விட

ஐம்புலன்களையும் அடக்கி முடவனாக
வாழ்வதே மேல்


கவிதைகள் உலகம் ..smdsafa..

இதய தோட்டத்தில்





என் இதய தோட்டத்தில் பூத்த
முதல் பூ நீ தான்


என்னை மலர வைத்ததும் நீ தான்

என்னை உதிர வைத்ததும் நீ தான்..


கவிதைகள் உலகம் ..smdsafa..

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;