தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

உன் நினைவுகளால்
உன்னை நினைக்க எனக்கு கிடைத்த வரம் 
உன்னை மறக்க எனக்கு கிடைத்த சாபம் 
உன் நினைவில் வாழ்கிறேன் 
உன் நினைவால் சாகிறேன் 
வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் 
வாழ்ந்து கொண்டே சாகிறேன் 
செத்த பிறகும் வாழ்கிறேன் 
உன் நினைவுகளால்..கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ தந்த வலிஉன்னை 
என் மனதிற்குள் 
சிறைப்பிடித்து 
பூட்டி வைக்க 
தான் 
நினைத்தேன்.,


அனால் நீயோ.. 
என்னை 
புதைத்துவிட்டு 
புறம்
சென்றுவிட்டாயே..


கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் அறிவேன் அன்பேநீ என்னை வெறுக்கும் போதெல்லாம் 
நானுன்னை நேசிக்கின்றேன் 
நானுன்னை வெறுத்துவிட்டால் 
நீ சுவாசிப்பதைக் கூட 
நிருத்திருவாய் 
என்பதை நான் 
அறிவேன் அன்பே


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ என்னை மறக்க நினைக்கையில்உன்னை நினைக்கும் போது 

மனதில் உள்ள வலி கூட 

சுகமாகிறது................. 

நீ என்னை மறக்க நினைக்கும் போது 

அந்த சுகம் கூட 

மரணமாக தெரிகிறது.............


கவிதைகள் உலகம் ..smdsafa..

சுனாமியில் தப்பி பிழைத்தவன்..!!!!திடீரென இதயம் நின்று விட்டது
யார் காரணமோ..??
இதயம் நின்ற காரணம் அறிந்தால்
காதல் என்ன செய்யுமோ..??

இந்த காதல் என்ன செய்தால் என்ன
நான் கண்டுகொள்ள மாட்டேன்,
எதற்கும் அஞ்சிவிட மாட்டேன்,
துணிந்தே நிற்பேன்,
துயரத்தை இழப்பேன்..!!!

காதல் ரேகை அழித்துவிட்டேன்,
இதய ஓசை தொலைத்துவிட்டேன்,
இருந்தும் என்ன செய்வேன் பெண்ணே
உன் மூச்சுக்காற்றில் என்னை
கொன்று விட்டாய்..!!
இந்த காதல் கழுத்து வரை
என்னை இறுக்கி உயிர் எடுக்கிறதே..!!

அடைத்து வைத்த கடிகாரம் உள்ளே
நேரம் இழந்து தவிப்பதை போல,
உன் விழி ஓரம் பார்த்தே
விண்வெளியில் தவித்தேன் நானே..!!

யார் யோசனையும் கேட்கவில்லை,
சுய பரிசோதனையும் செய்யவில்லை..!!
காதல் என்றால் காதலல்ல
கண்ணீர் தந்து உயிரை உறிஞ்சும்
புதுமுறை வஞ்சனை..!!
வாஞ்சையுடன் அருகே சென்றால்
நஞ்சு தெளிக்கும் விந்தை..!!

காதலின் நிலையை கண்டேன்,
என் நிலை சுயமாய் தெளிந்தேன்,
எவளுக்கோ என்னுயிர் கரைந்து
காதல் சுனாமியில் மூழ்கும் முன்
தப்பி பிழைத்து தடம் கண்டேன்..!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

* என் கண்ணீரில் அவள் புன்னகை *மின் அதிர்வை தாங்க முடிந்த என்னால் ஏனோ உன் விரல் என்னுள் தீண்டியதை தாங்க முடிய வில்லை...
சூரிய ஒளியை நேராக பார்த்த என்னால் ஏனோ உன் விழி அலையை பார்க்க முடிய வில்லை..
மலரின் இனிமை வாசத்தை அறிந்த என்னால் ஏனோ என்னால் உன் பெண்மை வாசத்தை நுகர முடிய வில்லை...
பயணங்கள் பல தொடர்ந்த என்னால் ஏனோ உன் பாத சுவடுகளை தொடர முடியவில்லை...
என்னவளே நீ என் நினைவில் வந்து உரையாடியதை விட , கனவில் வந்து உரையாடியது தான்அதிகம்...
அது தான் என் வாழ்வின் வசந்தம்...
காரணம்...

" தேவதைகள் நினைவில் வருவதை விட கனவில் தான் அதிகம் வருவார்கள் என்று என்னவளே முன்பு ஒரு நாள் நீ என்னிடத்தில் சொல்லி இருந்ததால் "...

* என் கண்ணீரில் அவள் புன்னகை *


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஹைக்கூ கவிதைகள்பார்க்காதே என்றாய்
கண்களை மூடினேன்
பேசாதே என்றாய் வாயை மூடினேன்
நினைக்காதே என்றாய்
மனதை மூடினேன்
உள்ளே நீ மாட்டிக்கொண்டாய்.

எப்பூடி???


கவிதைகள் உலகம் ..smdsafa..

கல்விச்சாலை
கண்ணிற்கு எட்டியும்
கனவாகவே..

வாழ்க்கை
பாடசாலையில்
தினந்தோறும்
மூன்றுவேளையும் தேர்வு
பசி..

ஒருவேளையாவது தேர்ச்சிபெற
உழைத்தபடி...


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;