தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

எனது ஐந்துன்பம்


விக்கலாயி வந்து நீ என்னை
தும்மலாயி நினைத்து விட்டு
இருமலாயி நெஞ்சில் வாழ்ந்து
கொட்டாவி கனவுகளை தந்து விட்டு
எப்பமாயி மறைந்தாயே !!

கவிதைகள் உலகம் ..smd safa..

தகுதி

நம் காதல்
உன் புன்னகையில் பூத்து
நம் புரியாமையில் முடிவடைந்தது!!
என் காதல்
உன்னை சேர தகுதி இல்லாமல்
தண்ணிரில் மிதக்கும் ஓர் ஓடம் போல்!!
உன் காதல்
புன்னகை விசி என்னை சிறை எடுத்து விட்டு
தகுதி கோரி தள்ளுபடி செய்தாய்!!!

கவிதைகள் உலகம் ..smd safa..

இதயம்


கடந்து போனது அந்த இதயம் -
 அதைக் கண்டு
கனத்துப் போனது
 இந்த இதயம் !!!!

கவிதைகள் உலகம் ..smd safa..

காதல்

கண்களில் தொடங்கி
கல்லறையில் முடிகிறது
உண்மை காதல்
புன்னகையில் தொடங்கி
நடை பிணமாக முடிகிறது
ஒரு தலை காதல்..

கவிதைகள் உலகம் ..smd safa..

உன் பெயர்


உன் பெயர் தான்
என் முதல் கவிதை ...
கண்ணே உன்
நினைவு ஒரு பொக்கிஷம்
அதை கவிதையாக வடிக்கிறேன்

கவிதைகள் உலகம் ..smd safa..

பெண்ணால்


கருவறையில் இருந்தே
தொடங்கி விட்டேன்
கண்ணீர் விட
அன்று தன்னால்
இன்று பெண்ணால்..

கவிதைகள் உலகம் ..smd safa..

சோகங்கள்


ஒரு மனிதனின்
ஒரு புன்னகைக்குள்
எத்தனை எத்தனை
சோகங்கள் மறைக்க
படுகின்றன !!

கவிதைகள் உலகம் ..smd safa..

உன்னுள்


ஒரு முறை நீ என்னை
வெறுத்து விட்டாய் !!
பல முறை தொலைந்து
விட்டேன் உன்னுள்


கவிதைகள் உலகம் ..smd safa..

மரணம்


அன்பே உன்னை காதலித்தால்

கிடைத்த பலன் எமாற்றம்

மட்டும் தான்

நீ ஏமாற்றியதால் தான்

என்னவோ உன்னை

நினைக்காமல் இருக்க முடியவில்லை

நீ தலையில் வைக்கும் பூவுக்கு

ஒரு நாள் தான் மரணம்

உன் நினைவை சுமக்கும்

எனக்கு தினம் தினம் மரணம்


கவிதைகள் உலகம் ..smd safa..


நினைவுகள்

கவிதைகள் உலகம் ..smd safa..

நம் நினைவுகள் தான் என் கவிதை 
என் மனச்சிறைய உடைத்து என்னுள் கலந்தவளே !!
என் உணர்வை அள்ளி சென்று தியினுள் சுட்டவளே !!
அன்பு கொண்டு  என்னை அபகரித்தவளே !!!
உன்னுடன் வாழ்ந்தது சில நிமிடங்கள் தான் 
என்றாலும் பல தலை முறைகள் வழ்ந்ததாயி உணர்கிறேன் !!
உன் பார்வை என்னை கொன்றாலும் 
உன் நினைவுகளும் நீ தந்த வலிகளும் 
என்னை உன் உணர்வோடு வழ சொல்லுதடி !!
 

கவிதை எழுத படித்தேன்


காதலிக்க கற்று கொல்லாத நான்
கவிதைகள் உலகத்துக்கு வந்து கவிதை எழுத
கற்று கொண்டேன் கவிதை பிடிக்கும்
அது அவள் வடிவாக இருந்தால்
காதல் பிடிக்கும் காதலிப்பது அவளாக இருந்தால்
எனக்கு கவிதை எழுதுவது
கடினமான விஷயம் இல்லை
அதை கவிதையாக நிருபிப்பது
தான் கடினமாக உள்ளது


கவிதைகள் உலகம் ..smd safa..

படிக்காதவன்

கவிதைகள் உலகம் ..smd safa..


எழுத படிக்க தெரியாதே என்னை
பேனா எடுக்க வைத்தவளே !!!!
என் காதலை வளர்த்தேன்
உன்னை வைத்து கவிதை படைத்தேன்
காவியம் படைத்தேன்
உன்னை வர்ணித்து வர்ணித்து
என் வலிகள் மறைந்து போனதடி !!
என் உயீர் உன்னுள் கலந்ததடி!!!
நீ எப்போது என் உயிரை கரைப்பாய் !!!
கரைத்து விடு கடலில்
அந்த கடலாவது ஆறுதல்
கொடுக்கட்டும் என் மரணத்திற்கு
 

நான்


என்னை போல்
என் கவிதையும்
தெருவில் கிடக்கிறது
குப்பையாக


கவிதைகள் உலகம் ..smd safa..

அனுபவம்


வாழ்க்கை அனுபவம் போதும்
கவிதை எழுதுவதற்கு
காதலிக்க வேண்டிய
அவசியம் இல்லை


கவிதைகள் உலகம் ..smd safa..


நீயின்றி இல்லை ஓர் உலகு


சுவரில்லமால் சித்திரம்
எழுத முடியாது !
ஆம் பெண்ணே நீயின்றி
ஓர் அணுவும் அசையாது
என்னுள்
சத்தம் இல்லமால் என்னுள்
வந்தாய் !
சலமின்றி என் இதையத்தை
இரண்டு ஆக்கினாய்!
அதில் ஒன்று
உனதாக்கி கொண்டாய் !!


கவிதைகள் உலகம் ..smd safa..

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;