தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

காதலிக்கும் போது குழந்தையாய் இரு

காதலிக்கும் போது குழந்தையாய் இரு.. அப்பொழுது தான் அவள் உன்னை ஏமாற்றும் போதும் சிரித்துக் கொண்டேயிருப்பாய்! கவிதைகள் உலகம் ..smdsafa..

காதலில் பொய் இருக்காலாம்;ஆனால்

காதலில் யார் (அதிகம்) பொய் சொல்கிறார்கள் என்பது அந்த காதலில் யார் (அதிகம்) நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து வேறுபடும். இதில் பால் பாகுபாடு எல்லாம் கிடையாது. முடிவாய் ஒரு கருத்து, காதலில் பொய் இருக்காலாம்;ஆனால் காதலே பொய்யாக இருக்கக் கூடாது. கவிதைகள் உலகம் ..smdsafa..

என் இதயத்தை மிதித்தபோது

அவளுடைய தொலைந்து போன தங்க கொலுசை தேடித் தேடி அலைகிறார்கள் அவளது தோழிகள் அது எங்கே போகப் போகிறது நேற்று "அவள்" என் இதயத்தை ஓங்கி மிதித்த போது அது அங்கே விழுந் திருக் கலாம் என்று , பாவம் அவர்களுக்கு எப்படி தெரியும் கவிதைகள் உலகம் ..smdsafa..

எண்ணம்

சுமைகளை முதுகிலேற்றிவிட்டு, சுகமாய் நடந்துவருகிறவன், சுமக்கவேண்டும் ஒருநாள், என் சுமைகளோடு என்னையும் சேர்த்து ! அன்றுதான் அடங்கும் என் ஆதங்கம் ! என்று பெருமூச்சுவிட்டு கனைக்கிறது ! பாரம் சுமக்கும் ஒரு வயதான கழுதை !! கவிதைகள் உலகம் ..smdsafa..

பொய்தானே

மறைமுகமாய் அறியப்பட்டது காதல் ! ஏதோ இனம்புரியா உணர்வலைகளால் ! அதனால்தான் தைரியமாய் வெளிப்படுத்தினேன் ! நீயோ மறுப்புச்சொல்லிவிட்டாய் ! அதிர்ந்து அமிழ்ந்தவன் நேரம்கடந்து யோசிக்கிறேன் ! என் கணிப்பு தவறாதே !! உண்மையை சொல் பெண்ணே ! பொய் சொன்னாயா நீ ? கவிதைகள் உலகம் ..smdsafa..

ஜன்னல்
காற்று வருவதற்கு மட்டுமா வீட்டில்

ஜன்னல் வைத்திருக்கிறார்கள் ? 

காதல் வளர்க்கவும் சேர்த்து

அல்லவா வைத்திருக்கிறார்கள் 

கவிதைகள் உலகம் ..smdsafa..

காதலர் தினம்
காளையரும் கன்னியரும் 

இளமையை இனிப்பாக்கும் 

காதலெனும் அமுதைக் கடைந்து 

சுவையை அனுபவித்துக் 

கொண்டாடும் காதல் நாள் இது !!! 

கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;