தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

அம்மாவிடம் பேசினால் கூட.. smd safa smohamed


முன்பெல்லாம் உன்னுடன்  எந்த பெண் பேசினாலும்
கவலை படாத நான்,


இப்பொழுதெல்லாம்
நீ உன் அம்மாவிடம்
பேசினால் கூட
பொறாமை படுகிறேன்..

காதல் வலிகள்.. smd safa smohamed


நீ வேண்டாம் என்று
தூக்கி எறியும் பொருள் எல்லாம்
என் பொக்கிசமாய் இருக்க
என் இதயம் அற்பமானதா உனக்கு

உன் கண்கள் என்னை கடக்க
காதல் என்னை தாக்க
நீ என்னை வெறுக்க ....
இத்தனை வலிகளை
தாங்க முடிய வில்லை
முள்செடி என்றாலும்
ரோஜா பூக்க வில்லையா
என் காதலை மட்டுமாவது ஏற்று கொள்
அது போதுமடி ennaku

நீ புரிந்துகொள்.. smd safa smohamedபுரிந்துகொள்
காத்திருப்பதும்
                                         கவிதை எழுதுவதும் மிகுந்த
                                             மதிப்புடுயவைதான்.,
       ஆனால்
                                                  காதல் செய்ய
                                                              நீ வராவிட்டால்
                                                                             அத்தனையும் வீண்
தான்.!!!..

நேசம்.. smd safa smohamed                                                   என்னை
                                        விட அழமாக
                                நேசிக்க
                         யாராலும் முடியாது
                                      நான்
                                                   நேசிக்க
                                     உன்னை தவிர
                               எனக்கு
                   யாரையும் தெரியாது !!!

தவிக்கும் மனம் .. smd safa smohamedஇருடா செல்லம் வருகிறேன்

என்று சொல்லி செல்கையில்

ஒரு இடத்தில் இருக்க

மனமின்றி தவிக்கும் மனம்

உன்னிழலாய் நான் நகராமல்

இருந்த இடத்தில் இருந்தே....

நானும் என் நிழலும் காத்திருக்கையில்.. smd safa smohamed

உனக்காக காத்திருக்கும் வேளையில்


அறிந்தேன், காத்திருக்கும்
  என்னையும் சேர்த்து

உனக்கென்று எத்தனை பேர்
சட்டேன திரும்பினேன்,

யாரும் இல்லை அருகில்
  நானும் என் நிழலும்

                                      "அனாதையாய்.."

பட்டினி வேண்டாம் எனதுயிர் உன்னிடத்தில் ! smd safa smohamed


சொந்தங்கள் இருந்தும் சோகத்துடன்... smd safa smohamedஉறவுகள் ஆயிரம் என்னை சுற்றி இருந்தாலும்,
அவள் பிரிவின் போது வாடியது என் இதயம் மட்டும் தானே.......


                                                                                                        சோகத்துடன்...

காதலர்களுக்காக.. smd safa smohamed


காதலிப்பவர்களெல்லாம் கவிதை எழுதுவதில்லை,
கவிதை எழுதுபவர்களெல்லாம் காதலிபதில்லை..
   காதல்,  கவிதை, இரண்டும் ஆண்டவன் நமக்கு கொடுத்த வரம்..

    இதில் நான் கவிதையை மட்டும் எடுத்து எழுதிக்கொண்டு இருக்கிறேன்,
                               வாழும் காதலர்களை வாழ்த்த..........


          ****************என்றும் அன்புடன் எஸ்.முகமது ******************

நன்றி smd safa smohamed

 

நன்றி ,
உதடு திறந்து என்னை
விரும்புகிறேன் என்று
சொல்லாவிட்டாலும் ,
என்னை வெறுக்கிறேன்
என்றாவது கூறியதற்கு...

என் கனவில் நீ வந்தால்..... smd safa smohamed


கனவுகள் கூட

நிஜம்தான்........

என் கனவில் நீ வந்தால்.....

மழை பெய்தது.. smd safa smohamed


     அன்று நான்
உன்னோடு  வருகையில் மழை பெய்தது..
     
     இன்று நான்
என்னோடு  வருகையில் மழை பெய்தது..

                            ''அன்று மேகத்தில்  இருந்து..
                                              இன்று என் கண்களில் இருந்து..''

முதல் முத்தம்......!!!!! smd safa smohamed

இரு உதடுகள் இடையேயான தென்றல்
வெற்றிடமாகும் நேரம்...!!

இளமை போரில் நான்கு இதழ்கள்
சண்டையிடும் நேரம்...!!

இதழ் வரிகள் கூட்டல் கணக்கு
பயிலும் நேரம்...!!

உலக இசை காலடியில் தஞ்சம்
அடைய முனுங்கள் இசை உதிக்கும்
நேரம்...!!
முத்தம்.....!!!

நட்பு அலைபோல் என்றும் ஓய்வதில்லை ரெஜின் Rejin smd safa smohamedநிலவே..
நீ ஓர் நாள் வந்து
பல நாள் தேய்கிறாய்..

மலரே..
நீ ஓர் நாள் மலர்ந்து
மறுநாள் உதிர்கிறாய்..

மழையே..
நீ ஓர் நாள் பொழிந்து
மறுநாள் ஓய்கிறாய்..

உறவே..
நீ ஓர் நாள் வந்து
மறுநாள் மறைகிறாய்..

'' நண்பனே..
நீ ஓர் நாள் வந்தாலும்
நம் நட்பு அலைபோல்

என்றும்  இருப்பாய் என நினைத்தேன்''..
காலம் பிரித்ததே நண்பா 
  உன்னை எங்களிடம் இருந்து.. 

ரெஜின், என்றும் மறவாத உன் நினைவில்   உன் நண்பர்கள்...

நெஞ்சை தொட்டு சொல் smd safa smohamed


அன்பே

கள்ளத்தனமாய் ஒரு முறை கூட

என்னை ரசிக்கவில்லை என்று

உனது
நெஞ்சை தொட்டு சொல்..

என் எல்லா கவிதைகளிலும்

உன்னை பற்றிதான் என்பது

உனக்கு தெரியாது என

உனது
நெஞ்சை தொட்டு சொல்...

நான் உன்னை பார்க்காத நேரம்

நீ என்னை ரசித்த நொடிகள்

இல்லை என்று உனது
நெஞ்சை தொட்டு சொல்...

கண்களால் ஆயிரம் காதல் கடிதங்கள்

தந்து வாசிக்கும் முன்

இமைகள் கொண்டு அடைத்தாயே
நெஞ்சை தொட்டு சொல் இல்லையென்று

எல்லாம் செய்து விட்டு காதல் எண்ணம்

உன்மேல் இல்லை என்கிறாய்

கண்ணாடி முன் நின்று

உன் நெஞ்சை தொட்டு கேட்டு பார்

ஜாக்கிரதை, ''உன் மனம் உன்னையே
 அறைந்துவிட போகிறது''...

சிக்கியது என் இதயம்.... smd safa smohamed


தூண்டில்

இல்லாத வலையில்

சிக்கியது என் இதயம்....

வலையாக

உன் கண்கள்....

காதல் சொல்வாயா ? smd safa smohamed

எட்டி உதைக்கும் உன் ஸ்கூட்டிக்காகவும்
ஏறி மிதிக்கும் உன் செருப்புக்ககவும்
காற்றில் பறக்கும் கேசத்திற்க்காகவும்
கையில் கிடக்கும் உன் வலையளுக்காகவும் அலையவில்லை ?
கழுத்தில் கொடுக்க ஒரு தாலிக்காக அலைகிறேன்.
எட்டி உதைக்காமல் ஏறி மிதிக்காமல்
காற்றில் பறக்கா ஆண்மையோடு உன்
கையை பிடித்து கொள்கிறேன் காதல் சொல்வாயா ?

இதயத் தோட்டம் smd safa smohamed

 

இதயத் தோட்டம்
ஓயாது பூக்கிறது
சோகம்!
எந்நேரமும்
தண்ணீர் பாய்ச்சுகின்றன
இருவிழிகள்..............!!!!!!!!

விட்டுப்போன பந்தம்... smd safa smohamed

விட்டுப்போன பந்தம்... - நண்பர்கள் கவிதை

விட்டுப்போன பந்தம்...

விடியலாய் வந்ததென்று
எட்டி நடை போட்டு வந்தால்...

எட்ட நின்று பார்க்கிறது
என் பக்கம் வரவில்லை...

உன் வீட்டு கண்ணாடி smd safa smohamedஉன் வீட்டு கண்ணாடி  - காதல் கவிதை

உன் வீட்டு கண்ணாடி  

நான் ஒன்றும்
அழகானவன் அல்ல ...

இருந்தும் நாள்தோறும்
நீ என்னை பார்க்க மறப்பதில்லை...

புத்தாடை வாங்கினாலும்
புது நகை வாங்கினாலும்
முதலில் என்னிடமே கட்டிக் கொள்கிறாய்...

காரணங்கள் தெரியாமலே
காத்திருக்கும்
உன் வீட்டு கண்ணாடி

என்னருகில் நீ வேண்டும் smd safa smohamed


                      என் உயிராய்   என்னருகில்  நீ  வேண்டும்,
                      என் உறவாய்  என்னருகில் நீ  வேண்டும்,
                      என் தாயாக  என்னருகில்    நீ  வேண்டும்,
                      என் தோழனாய்  என்னருகில் நீ  வேண்டும்,
                    என்றும்  என்னவனாய் என்னருகில் நீ வேண்டும்..  


==== என்றும்  காதலுடன் எஸ்.முஹமது =====

நட்பு smd safa smohamed


உறவுகள் கோடி இருந்தாலும் இந்த

உறவுக்கு கோடிகள் இல்லையடி....

அம்மா உன் குழந்தையாக smd safa smohamed

மறு ஜென்மம் என்பது உண்மையானால்

உன் குழந்தையாக வேண்டும்....

அங்கும் உன் மடி தேடியே.... 

நண்பன் smd safa smohamed

காதலர்களுக்கு மறுப்பு பலவகையில்
நட்புக்கு அப்படி உண்டோ
நண்பன் துணையுடன் இருந்தால்
அவன் நம்மை பார்த்துக்கொள்வான்
அதுவே,
நம் காதலி துணையுடன் இருந்தால்
அது அவளைத்தான் கவனிக்க தோன்றும்
ஒரு காவலனாக...

உன்னை அணைப்பதும், என்னை நானே சினப்பதும் ..... smd safa smohamed


 

வெண் குருதியாம் செங்குருதியாம்
கோடான கோடி துளிகளில் ஒரு துளி கூட என் துளி இல்லை ...

எல்லாம்
உனக்காகவே துடிக்கின்றன ,
உனக்காகவே சிந்துகின்றன

உன்னை அணைப்பதும், என்னை நானே சினப்பதும்
இதுவே வாடிக்கையாகி போய்விட்டது ..

தாஜ்மஹால் smd safa smohamed

பெண்ணே
என் உள்ளத்தில்
உனக்கா ஆலயம் கட்டி
அதில் தினமும் உன்னை
தரிக்க விரும்பின் ஆனால்
நியோ உன் உள்ளத்தில்
எனக்கா கல்லறை கட்டினாய்

அக்கல்லரையே நம் காதலுக்கு

தாஜ்மஹால்

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;