தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

பெண்ணை புரிந்துகொள்ள முயற்ச்சி செய்யாதே

எந்த ஒரு பெண்ணையும் முழுவதுமாக

புரிந்துகொள்ள முயற்ச்சி செய்யாதே..!!..

முடிவில் அந்த பெண்ணை

காதலிக்க ஆரன்பித்து விடுவாய்.,

அல்லது நீ பைத்தியமாகி விடுவாய்..

(எனக்கு தெரிந்து இரண்டுமே ஓன்று தான்..)

கவிதைகள் உலகம் ..smd safa..

பாசத்தின் தவிப்பு

என் தனிமையின் ஒவ்வொரு நிமிடங்களும்,

உன்னுடன் பழகிய நட்பின் கனம நிறைந்த

ஓராயிரம் நினைவுகளை அள்ளிக் குவிக்கின்றன..

அத்தனையும் இங்கு முத்து, முத்தாக என்

 கன்னங்களை நிறைக்க உயிரும் கரைகிறது..

என்னவளே..,
         உன் பாசத்தின் பரிதவிப்பான  ஏக்கத்துடன்..!!

கவிதைகள் உலகம் ..smd safa..

என் கவிதைகள்

எதிலிருந்து எழுத துவங்கினாலும்,

மீண்டும், மீண்டும்

காதல் என்கிற புள்ளியிலேயே

வந்து முடிவடைகிறது,

   -  என் கவிதைகள் அனைத்தும்..

கவிதைகள் உலகம் ..smd safa..

என்னையும் கொன்று விடு

வலியின் உச்சத்தில் கருணைக்

- கொலை அனுமதிக்கப்படுகிறது..

பெண்ணே..,  என்னையும் கொன்று விடு.,

  - கருணை கொலை என்ற பெயரிலாவது..

கவிதைகள் உலகம் ..smd safa..

உண்மையான காதல்

வறட்டு கெளரவம்.,

வீண் பிடிவாதம்.,

சமுதாயத்தின் உளறல்கள்.,

சொந்தங்களின் போலி புன்னகை.,

பணம் என்னும் காகிதம்.,

இவை அனைத்தும் கொன்று விட்டது.,

    - "என் உண்மையான காதலை"..

காதலி பிரிந்தாலும், காதலர்கள் இறந்தாலும்

       ஒருபோதும் "காதல் அழிவதில்லை"..

கவிதைகள் உலகம் ..smd safa..

கடற்கரை - கல்லறை

கடற்கரை சிரிக்கின்றது.,

   -  காதலர்கள் வருகிறார்கள் என்று..

கல்லறை அழுகின்றது.,

   -  காதலன் மட்டும் தான் வருகிறான் என்று..

கவிதைகள் உலகம் ..smd safa..

எத்தனை காதல் வாழ்வினில்

தொட்டிலில் ஆடும் வயதில்
தாய்பால் மீது காதல்..

எட்டிப்பிடிக்க இயலாத வயதில்
தட்டான் மீது காதல் ..

நம்பிக்கை


உனக்காக வாழ்கிறேன்,


என்றாவது ஒருநாள்


உன்னோடு வாழ்வேன்


என்ற நம்பிக்கை யில்..

கவிதைகள் உலகம் ..smd safa..

காயங்கள் - வித்தியாசம்


எல்லோரின் இதயத்திலும்

காயங்கள் உண்டு..

அதை வெளிப்படுத்தும்

விதம் தான் வித்தியாசம்..

உரிமை உள்ளவர்களிடம்    கண்ணீராக..

மற்றவர்களிடம்                       புன்னகையாக..

கவிதைகள் உலகம் ..smd safa..

பிரிவு - நட்பு காதல்

பல தவறுகள்

பல மன்னிப்புகள்

பிரிய மாட்டர்கள்

நட்பில்..

சிறு தவறுகள், ஒரே தண்டனை

  -பிரிவு  காதலில்..

கவிதைகள் உலகம் ..smd safa..

காதல் தோல்விகளை குறைக்க, காதலில் வெற்றி பெற

காதல் தோல்விகளை குறைக்க சில வழிகள்;-1.ஒரு பொண்ண லப் பண்ண ஆரம்பிச்சா, அது அந்த பொண்ணுக்கு தெரியிறதுக்கு முன்னாடி அவகிட்ட propose பண்ணிடனும். அப்புடி இல்லாம நீங்க லவ்வ சொல்றதுக்கு முன்னால, அந்த பொண்ணு நீங்க அவள சைட் அடிக்கிறத கண்டுபுடிச்சிட்டா அவ்ளோதான்.அவகிட்ட உங்களோட value கம்மி ஆயிடும்... லவ் success rate உம் கம்மி ஆயிடும்.2. விக்ரமன் படங்கள பாத்துட்டு யாரும் அதுமாதிரி ட்ரை பண்ணீங்கண்ணா உங்களுக்கு கடைசில செருப்படி நிச்சயம்.. அதாவது அவளுக்காக அவளோட ஆபீஸ்ல காத்துருந்து

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;