தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

காதல் தோல்விகளை குறைக்க, காதலில் வெற்றி பெற

காதல் தோல்விகளை குறைக்க சில வழிகள்;-1.ஒரு பொண்ண லப் பண்ண ஆரம்பிச்சா, அது அந்த பொண்ணுக்கு தெரியிறதுக்கு முன்னாடி அவகிட்ட propose பண்ணிடனும். அப்புடி இல்லாம நீங்க லவ்வ சொல்றதுக்கு முன்னால, அந்த பொண்ணு நீங்க அவள சைட் அடிக்கிறத கண்டுபுடிச்சிட்டா அவ்ளோதான்.அவகிட்ட உங்களோட value கம்மி ஆயிடும்... லவ் success rate உம் கம்மி ஆயிடும்.2. விக்ரமன் படங்கள பாத்துட்டு யாரும் அதுமாதிரி ட்ரை பண்ணீங்கண்ணா உங்களுக்கு கடைசில செருப்படி நிச்சயம்.. அதாவது அவளுக்காக அவளோட ஆபீஸ்ல காத்துருந்து

அழைச்சிட்டு வந்து வீட்டுல விடுறது, இல்ல காலேஜ்லருந்து ஹாஸ்டல் வரைக்கும் பாடி கார்டா போறது, அந்த புள்ளை கேக்கலண்ணாலும் அதுகிட்ட எதயாது வாங்கி குடுக்குறது... சுருக்கமா சொன்னா எள்ளுண்ணா எண்ணையா இருக்கது...அது சுத்தமா ஆகாது. எள்ளூண்ணா எள்ளாவே இருங்க.. அதான் நல்லது.3. நீங்க நீங்களா இருக்கனும். நீங்க சீன் பார்டின்னா கடைசி வரைக்கும் சீன் பார்ட்டியாவே இருங்க... இல்ல சைலண்ட் பார்ட்டின்னா அத அப்புடியே மெயிண்டைன் பண்ணுங்க. இல்ல...அவளுக்காக என்ன நானே டன் லருந்து கிலோவுக்கு கொறைச்சிகிட்டேன்னு எதாவது மாத்த ட்ரை பண்ணா டஸ் ஆயிரும்.4. மொதல்ல உங்க ஆளோட கொடுக்க கரெக்ட் பண்ணிட்டு அப்புறமா உங்க ஆள கரெக்ட் பண்ணல்லாம்னு பாத்தீங்கன்னா அவ்ளோதான்... அப்புறம் கொடுக்கு main picture ah மாறிடும் உங்க ஆளு உங்களுக்கே out of focus க்கு போயிடும். அதாவது புளியம்பட்டிக்கு போகனும்னா நேரா புளியம் பட்டிக்கு போங்க... பொள்ளாச்சி பொய்ட்டு புளியம்பட்டிக்கு வருவோம்னு நெனச்சா அது வேலைக்காவாது. வண்டி பொள்ளாச்சிலயே கவுந்தாலும் கவுந்துடும்.5. அந்த புள்ளை குடிச்சிட்டு போட்ட கோக் டின், அது தலையிலருந்து விழுந்த ரோஜாப்பூ அந்த புள்ளை நடந்து போன காலடி மண்ணு, அந்த பொண்ணு தொட்டு குடுத்த பேனா இந்த மாதிரி ஐட்டங்களை பொறுக்கி வைக்கனும்னு தோணும். ராஜ்கிரன் பாணில சொல்லப்போனா "அப்புடித்தேன்..அப்புடித்தேன் இருக்கும்" பொறுக்கி வச்சிகோங்க.. ஆனா அது எந்த காலத்துலயும் அந்த புள்ளைக்கு தெரியவே கூடாது.. தெரிஞ்சா குப்பை பொறுக்குறவிங்க
ரேஞ்சுக்கு உங்க ரேஞ்சு இறங்கிடும்.6. நீங்க உங்க ஆள்கிட்ட லவ்வ சொல்றதுக்கு முன்னால, அது வேற ஒரு பையன லவ் பண்ண ஆரம்பிச்சிருச்சின்னு வச்சிக்கோங்க... அந்த பொண்ணுக்கு எண்டு கார்டு போட்டுட்டு "ச்ச... ச்ச... இத போய் நா லவ் பண்ணுவேனா... ஏன் ஆளு எங்க ஊர்ல இருக்கு" ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயி அடுத்த பொண்ண தேடுறது உசிதம். இல்ல... காதல் ஒரு முறைதான் பூக்கும். வேற பூ பூக்காது ன்னு பீல் பண்ணிகிட்டு இருந்தா மரத்த வேறோட புடுங்கி எறிஞ்சிடுவாய்ங்க.7. உங்களுக்கு உங்க ஆள எவ்ளோ புடிக்கும்னு உங்களுக்கு தெரியும். ஆனா இதை அந்த பொண்ணுகிட்ட சொல்லக்கூடாது. எவ்ளோ புடிச்சாலும் உள்ளுக்குள்ளயே ரசிச்சிக்குங்க. அவ்ளோ புடிக்கும்னு அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா லைட்டா ஹெட்ல வெய்ட்டு ஏற chance இருக்கு. அவள பிரிஞ்சா உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் வராதுங்கறமாதிரி நீங்க காட்டிக்கனும். அதாவது "நமக்கு ஆயிரம் ஃபிகர் மடியும் மச்சி"ங்கற மாதிரி நடந்துக்கனும். அப்பதான் உங்க ஆளு உங்கள விட்டு போகாது8. இது ஒரு முக்கியமான விஷயம்... "நீங்க தண்ணி அடிப்பீங்களா?" ன்னு
அந்த பொண்ணு உங்ககிட்ட கேக்குதுன்னு வச்சிக்கோங்க... சீன் போடுறதா நெனச்சிகிட்டு "நாங்கல்லாம் at a time la நாலு ஃபுல்ல அப்புடியே அடிப்போம்" ன்னு எதாவது உளரிட்டா அதான் உங்களோட கடைசி மீட்டிங்கா இருக்கும். அப்புடி இல்லாம "அச்சச்சோ... தண்ணியா... அந்த வாசனையே எனக்கு புடிக்காது.." ன்னு நல்லவனா காட்டிக்க ட்ரை பண்ணா "அய்யய்ய.. இது ஒரு பழமாட்டுருக்கு" ன்னு கொஞ்ச கொஞ்சமா உங்கள விட்டு அந்த புள்ளை போயிடும். அப்ப என்ன செய்யலாம்?... இந்த மாதிரி சிச்சுவேஷன்கள டேக்கிள் பண்ணுவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மகத்தான வார்த்தை தான் "லைட்டா". "தண்ணி அடிப்பீங்களா?" "லைட்டா அடிப்பேன்" மேட்டர் ஓவர். உண்மையிலேயே தண்ணி அடிக்காதவர்கள் கூட "லைட்டா அடிப்பேன்" ன்னு சொல்லிக்கிறது உசிதம்.9. அப்புறம் இன்னொரு ட்ரெண்டு யூஸ் பண்ணுவாய்ங்க.. முதல்ல சிஸ்டர்ன்னு ஆரம்பிச்சி படிப்படியா லவ்வரா மாறிடலாம்னு. அதாவது மொதல்ல வில்லனா பண்ணிட்டு அப்புறம் படிப்படியா ஹீரோவா ஆயிடலாம்னு. நம்ம கலாச்சாரத்துக்கு இதெல்லாம் ஒத்துவராது. நம்ம "நடிச்சா ஹீரோ சார் நா வெயிட் பண்றேன் சார்" தான். "எனக்கு ஒன்ன புச்சிகீது. உனக்கு என்ன புச்சிகீதா?" கேட்டுட வேண்டியதுதான். புடிக்கலன்னா லாஸ் யாருக்கு... பாவம் அந்த புள்ளைக்கு தான... அவ்வ்வ்....10. அந்த புள்ளையோட ஃபோன் நம்பர் வேணுமா, அதுகிட்ட தான் கேக்கனும். இத விட்டுட்டு அதுங்க ஃப்ரண்ட்ஸ புடிச்சி ஃபோன் நம்பர் கேட்டா.. "Actually என் ஃப்ரண்ட்ஸ் நம்பர் நா யாருக்கும் தர்றதில்லைன்னு" அந்த புள்ளை சீனப்போடும். அப்புடியே அப்புடி இப்புடி அந்த புள்ளை அசந்த நேரத்துல நம்பர ஆட்டைய போட்டு, உங்க ஆளுக்கு ஃபோன் பண்ணா, அது ஒரு கேள்வி கேக்கும் பாருங்க.. "உனக்கு எப்புடி ஏன் நம்பர் கெடைச்சிது?".. ஆமா இது என்ன பெரிய அயல் நாட்டு அதிபர் நம்பரான்னு கேக்கனும்னு நமக்கு தோணும்.ஆனா கேக்க முடியாது. டெலிகேட் பொசிசன் ஆயிரும் நமக்கு. so, எப்பவுமே டீலிங் நாட்டாமை டூ பங்களி...பங்காளி டூ நாட்டாமைன்னு ஸ்ட்ரெய்ட்டா இருக்கனும். நோ டீலிங்ஸ் வித் அள்ளக்கைஸ்.11.அப்புறம் பிட்டு போட கத்துக்கனும். ஹலோ ஹலோ பாஸ்... எங்க DVD எடுக்க போறீங்களா? இது அந்த பிட்டு இல்ல.. உக்காருங்க.. எப்பவாது பேசிகிட்டு இருக்கும் போது பேச்சு வாக்குல " உன் கண்ணு காஜல் கண்ணு மாதிரி இருக்கு" "மூக்கு மும்தாஜ் மாதிரி இருக்கு" "சிரிச்சா ஸ்னேகா மாதிரி இருக்கு" ன்னு சொல்லிட்டு போயிட்டே இருங்க.இதெல்லாம் லோக்கல் பிட்டு. இதே பாலிவுட், ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு feel பண்ணா அது ஹைடெக் பிட்டு. பிட்டு போடுறதுல அல்ரெடி எல்லாரும் Phd பண்ணவங்க தான். ஆனா இதுல நோட் பண்ண வேண்டிய விஷயம் என்னன்னா இத மாசம் ஒரு முறை ரெண்டு முறைக்கு மேல சொல்லக்கூடாது. இந்த பிட்டுகள அடிக்கடி போட்டீங்கன்னா, உங்க ஆளுக்கு மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸாடர் வர வாய்ப்பு இருக்கு. அதாவது நீங்க எந்த ஹீரோயின் மாதிரின்னு சொல்றீங்களோ அந்த ஹீரோயின் மாதிரி நிப்பாங்க.. அந்த ஹீரோயின் மாதிரி நடப்பாங்க.. கடைசில அந்த ஹீரோயினாவே தன்ன நெனச்சிகிட்டு உங்கள காமெடியன் ஆக்கிருவாங்க.12. உங்க ஆளு உங்ககிட்ட எதாவது கேட்டுச்சின்னா, performance காட்டுறதா நெனச்சிகிட்டு உடனே செஞ்சி குடுத்துடாதீங்க. ஏன்னா நம்ம ஊர்ல உடனே கெடைச்சிதுன்னா அந்த பொருளுக்கு value கொஞ்சம் கம்மி தான். அதுக்குன்னு "உங்க ஆளு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிட்டல் போகனும்னு கூப்டா "அவ்வளவு... சீசீக்கிரமாவா போவனூம்....... போவோ...ம்" ன்னு இழுத்தா அதுக்குள்ள அது போய் சேந்துரும். இடம், பொருள், ஏவல் ரொம்ப முக்கியம்.சரி நீங்க எல்லாரும் இதெல்லாம் ட்ரை பண்ணிட்டு ஒர்க் அவுட் ஆகுதானு இல்லையான்னு சொல்லுங்க. அப்புறம் நா ட்ரை பண்றேன்கவிதைகள் உலகம் ..smd safa..

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;