தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

தெரியாமல்

கல் மீது அதிக பாசம் வைத்துவிட்டேன்,
 அது மண்ணாகும் என தெரியாமல்..

மண் மீது அதிக பாசம் வைத்து விட்டேன்,
 நான் மண்ணுக்குள் செல்வேன் என தெரியாமல்..

அது போல உன் மீது அதிக பாசம் வைதது விட்டேன்,
 நீ என்னை விட்டு பிரிவாய் என தெரியாமல்..

கவிதைகள் உலகம் ..smd safa..

காத்திருப்பேன்


நான் உனக்காக காத்து இருப்பது
உனக்கு பிடிக்கும் என்றால்
உன்னை காணவே என்றும்
காத்து இருப்பேன் நான் கல்லறையில்
புதையும் வரை பெண்ணே..............!


கவிதைகள் உலகம் ..smd safa..

வாழு = வாழவிடு


நீ எங்கே எந்த தேசம்
போனாலும்.... நான்
உன்மீது வைத்துக்கொண்ட
கொண்ட நேசம்
மட்டும் எப்போதும்
அப்படியே இருக்கும்
என்பதை விட..... ஒருபடி
மேலேதான் இருக்கும்.....!

நீ வாழ்க......!
என்னையும் வாழவிடு.....!


கவிதைகள் உலகம் ..smd safa..

நீ வாழவேண்டும்

நான் உன்னை விட்டு விலகி செல்கிறேன்,
 நீயாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று..

 நான் கல்லறையில் இருந்தாலும் காதலி,
 உன் கண் எதிரில் தான் காந்திருப்பேன்..

 நீ மகிழ்ச்சியாக வாழ்வதை காண ''அன்பே''

கவிதைகள் உலகம் ..smd safa..

கல்லறை


அன்பே நீ நடந்து செல்லும்
சாலையோரத்தில்
உன் பின்னல் நான் உன் பாதசுவடு
மண் சேகரித்த வண்ணம்.....
ஏனென்றால்
நான் இறந்த பின் என் புதைகுழியை
உன் பாதசுவடு பதிந்த மண்களால்
என் புதைகுழியை மூடுவதற்கு.....


கவிதைகள் உலகம் ..smd safa..

கவிதையும் வெறுக்கிறது


கவிதையும் என்னை வெறுகிறது

"யாரிடம் சொல்ல என் காதல் வலிகளை"
-என்றபோது
கவிதைவுடன் பேச போனேன்

ஆனால்

கவிதையுடனும்

உயிரைக் கொல்வது பாவம்


ஒரு சாயங்காலப் பொழுதில்
உன் கண்கள் சிந்தும்
காதல் சாரலில் நனைந்தபடியே
உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன்!

அந்நேரம் உன் சின்னப்பாதம் நோக்கி
சிற்றேரும்பொன்று முன்னேற
நான் அதை கொன்றுவிட எத்தனிக்கிறேன்!

காதல்


நீ வேண்டும் என்கையில்
நீ எனக்கு வேண்டும் என்கையில்
நான் என்னை நேசிக்கிறேன்.
நீ என்னை தாண்டி செல்கையில்
உன் வாசம் சுவாசிக்கிறேன்.
உன் உதடுகள் கவிதை வரைகையில்

நீ- தந்த மின்சாரம்


என்னை கடிக்க வரும்

கொசுக்கள் எல்லாம்

மரணம் அடைகின்றன
...
ஏன் எனில்

தோல்விப் பாடம்


பாடம் படித்தால் மட்டுமே
தேர்வில் வெற்றி பெற முடியம்
பள்ளிப் பாடம் இது !!!
தோல்வி அடைந்தால் மட்டுமே
வாழ்வில் வெற்றி அடைய முடியும்
வாழ்க்கைப் பாடம் இது !!!


கவிதைகள் உலகம் ..smd safa..

நந்தவனத்திற்கு வந்த நிலா


பாவாடை சட்டையில்
பள்ளிக்கு வரும் பளிங்கு நிலா நீ!

உன்னால் வகுப்பறை ஒரு
நந்தவனமாய் இருந்தது நிஜம்!

என் வருகைப்பதிவு குறையாமல்
இருந்ததற்கு நீயும் ஒரு காரணம்!

வாழ்க்கை


வாழ்விற்கும் மரணத்திற்கும்
இடையில் உள்ள காற்றை தான்
சுவாசிக்கிறேன்..

இன்னும் எவ்வளவு
இடைவெளி என்பதினை
அறியாமல்!!


கவிதைகள் உலகம் ..smd safa..

உன் நினைப்பு


இந்த இரவும் ....... நாளை விடியும்....
வந்த கனவும்...... கனவாய் மடியும்.....
எப்போதாவது.....தூக்கம்....
எப்பொழுதும்...... ஏக்கம்......

இப்போது உன்நினைப்பே.....
இனி எப்போதும்  என் நினைப்பு
எனக்கேது
          உன்நினைவு .....  இன்றி.....!!கவிதைகள் உலகம் ..smd safa..

கனவும் நினைவும்


சிந்தனைகள் இங்கில்லை
சிறகடித்துப் பறக்கிறதே
சில நொடிகள் மறைந்திடுதே
...சில நினைவுகள் மறந்திடுதே

கரைந்திடுதே
கனவு கரைந்திடுதே
கருமேகக் கூட்டம் போல
அது மறந்திடுதே !!!


கவிதைகள் உலகம் ..smd safa..

உன் சிரிப்பில்


உன் ஒரு நிமிட சிரிப்பில் என் ஒரு வருட

ஆயுள் நீள்வதாய் உணர்ந்தேன்.....

என் ஒரு நிமிட சிரிப்பில் என் ஒரு வருட

ஆயுள் குறைவதை உணரவில்லை..

உயிர் நட்பு


பழகிய நாட்கள் கொஞ்சம் உன் மேல்
கொண்ட பாசத்தினால் நெகில்கிறதே என் நெஞ்சம் !!!!
ரத்த பந்த உறவல்ல உயிர்ரோடு கலந்ததால்
இதற்க்கு இல்லை இனி பிரிவு ஒருவருக்கொருவர்
துணையாக இருப்போம்!!!!!!!

என் நினைவில் நீ

கண்டேன் கனவு .,  அதில்
                     கற்பனையாய் நீ..
விழித்தேன் கண்,     அதில்
                     தேவதையாய் நீ .

தொழுதேன் கை.,     அதில்
                     கடவுளாய் நீ
தொட்டேன் பேனா  அதில்
                      கவிதையாய் நீ..

கவிதைகள் உலகம் ..smd safa..

தலைவன் : தொண்டன்

தொண்டன் கொடுத்த நிதியில் ஏசி காரில்
உலா வரும் தலைவனைக் காண
காலில் செருப்பு கூட இல்லாமல்
தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு
இருக்கும் உண்மைத் தொண்டன்!

கவிதைகள் உலகம் ..smd safa..

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;