தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

என் கவிதை கூட


உன்னை நேசித்து நான் கவிதை
எழுதுகிறேன்....
ஆனால்,
என் கவிதை கூட என்னை
நேசிக்காமல், உன்னை நேசிக்கிறது
என்னை போலவே


கவிதைகள் உலகம் ..smd safa..

பட்டப் பெயர்


திருத்தி திருத்தி உன்னைப் பற்றி
எழுதிக் கொண்டிருக்கிறேன்.........
எப்படி எழுதனாலும்
உனக்கென்று ஒரு உவமை
என்னிடம் இல்லை
எத்தனை அர்த்தங்கள் கொண்டு
நீ என்னை அழைத்தாலும்
பதிலுக்கு நான் ஒரு "பட்டப் பெயர்" வைக்க
எனக்கொரு அழகான பெயர் இல்லை
உன் உண்மையான பெயர் போல..கவிதைகள் உலகம் ..smd safa..

ஒரு உண்மை காதல்


அவள் ஒரு பேதை
நான் ஒரு போதை
அவளுக்கு திருமணமெனும்
ஆகி இருந்தால்
என் மூச்சு நின்று
போய் இருக்கும்
நீயோ முதிர் கன்னியாய்
நானோ முற்றும் துறந்த
துறவியாய்கவிதைகள் உலகம் ..smd safa..

காதல்


ஏய் அழகிய அருவியே,
இது என்ன தண்ணீரின்
தற்கொலை முயற்சியா??

உனக்கும்
காதல் தோல்வியா??


கவிதைகள் உலகம் ..smd safa..

தண்ணீர் இல்லை கண்ணீர்


காதலன்களை ஒன்று கூட்டுங்கள்.
காவிரியில் தண்ணீர் இல்லையாம்
கண்ணீராவது ஓடட்டும்!


கவிதைகள் உலகம் ..smd safa..

காதல்


பழகிவந்த இனியசுகம்
பாதியிலே கலைந்து
போனாலும் ,,

எழுதிவைத்த ஓவியம்போல்
என் நெஞ்சின் உள்ளே
இருக்கின்றாயே ...!!


கவிதைகள் உலகம் ..smd safa..

ஆசைகைளை துறந்து

அன்று

கண்ணீர் திர்நததால் கண்கள்
இரத்தம் தர துடிகின்றதா ?
அன்பினை தொலைத்து விட்டு
நெஞ்சம் கோபத்தை கொப்பளிக்கும்
நித்திரையில் தொலைத்து விட்ட
நினைவுகளை தேடுகின்றேன்
இன்று
ஆசைகைளை துறந்து விட்டு
ஆண்டி என்றே மாறிவிட்டேன்..


கவிதைகள் உலகம் ..smd safa..

கண் தானம் (காதலில்)


உனது கண்களை
ஒரு சின்னஞ்சிறு
பெண்ணுக்கே
தானமாக
வழங்க வேண்டும் என்று
பதிவு செய்
அந்தக்கண்கள்
அடுத்த தலைமுறையில்
என்னை மாதிரி
இன்னும் ஒரு காதலன்
உருவாகட்டும்..!


கவிதைகள் உலகம் ..smd safa..

உன்னைக் காதலிக்கவே


உன்னை விட்டுவிட்டு
வேறு யாரையேனும் காதலிக்கத்துவங்கிவிடுவேனோ
என்கிற பயமெல்லாம் உனக்கு வேண்டாம்!
உன்னைக் காதலிக்கவே இந்த ஆயுள் போதாது
என்று நினைக்கிறவன் நான்!


கவிதைகள் உலகம் ..smd safa..

தோழியாய் வரபோகும் மனைவி


நெஞ்சுக்குள் சின்ன சின்னதாய் ஒரு ஆசை உண்டு...........
இது கவிதை அல்ல........
நான் கனவுகளால் கோர்த்த மாலை,
...என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா
...கொட்டும் மழையில் ஒரே குடையில் உன் தோள்
உரசி நடக்கஆசை............
உன் சுட்டு விரல் பிடித்து.........
உன் பாதம் தொடர ஆசை
உன் கால்நகம் வெட்டி விட
கையில் மருதானி வைத்து விட ஆசை...........
உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி அதை நீ வாசிக்க
நான் கேக்க ஆசை...........
உன் கைகுட்டை திருட ஆசை அதை என் கைபைல்
எப்போதும் வைத்திருக்க ஆசை....... உனக்காக காத்ருக்க ஆசை.......
கால தாமதமாய் வரும். நீ என் மன்னிப்புக்கு கை கட்டி நீக்க ஆசை.

வெட்கம்


நீ வெட்கம் மறக்கிற
சிலபொழுதுகளை நினைத்து
பிறகு வெட்கப்படுவாயே!
வார்த்தைகளுக்குள் வசப்படாத
அழகிய கவிதை அது!


கவிதைகள் உலகம் ..smd safa..

காதல் காயங்கள்


காதல் காயங்கள்
உங்கள் உயிர்
உங்களை விட்டு பிரிவதை
நீங்கள் நேரில்
பார்த்திருக்கிறீர்களா ?
காதலித்து பிரிந்து பாருங்கள்
தெரியும்,
அந்த அனுபவம்
உங்களுக்கு வேண்டாம்,
அது மிகவும் கொடுமையானது.


கவிதைகள் உலகம் ..smd safa..

தலைவலி


உன் ''தைல விரல்களுக்காக''
என் தலைவலி தவிக்கின்றது...


கவிதைகள் உலகம் ..smd safa..

கோலப்பொடி


அதிகாலையில் தண்ணீர்
தெளித்து துப்புறபடுத்தி விட்டு
என்னை வைத்து
புள்ளிகள் இட்டாய்!
புள்ளிகள் அனைத்தும்
இணைத்து விட்டாய் !
வித விதமாய் கோலங்கள் போட்டு
மலர்கள் வரி துவினாய் !'
சூரியன் மறையும் தருணத்தில்
என்னை துடைப்பத்தால்
துடைத்து விட்டாயே..


கவிதைகள் உலகம் ..smd safa..

உன் கல் நெஞ்சை நினைத்து


காயம் பட்ட என் இதயமோ இன்று
கலங்குவதேனோ, உன் காதலை நினைத்தல்ல‌
கருணை இழந்த உன் கல் நெஞ்சை நினைத்து.


கவிதைகள் உலகம் ..smdsafa..

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;