தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

தொலைந்த பெற்றோரைத்தேடி...விரைவு இரயில்கள் போல்
விரைந்திடும் மனிதர்கள்..
நடைமேடையில்
நகரமுடியாத மனிதன்..

உரக்க ஒலிக்கும்
அறிவிப்புகளுக்கு மத்தியில்
அடங்கி போகும் அவன் பசிக்குரல்..

தொலையாத இரக்கம் கொண்டு
இருக்கும் உணவை அவனுக்கு தந்து
கடந்த இரயிலில்
தொலைந்த பெற்றோரைத்தேடி...
கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ நிலாநீரில் விழுந்த நிலா !
என் நினைவில் விழுந்த நீ !!
நீர் கலங்கினால் கலைந்துவிடும் அது !
நீ கலங்கினால் கலைந்துவிடுவேன் நான் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

தனிமைஎல்லா அவமானங்களிலும்,
துணைக்கு வருகிறது தனிமை !
நாம்தான் எதுவாவது எவராவது,
துணைக்கு கிடைத்துவிட்டால்,
அதற்கு துரோகம்செய்து இடம் பெயர்கிறோம் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

மாற்றம்வீரனாகத்தான் அறியப்பட்டேன் !
எனக்கு நானே !
நினைவுதெரிந்த நாள்தொட்டு !
விளைவு அறியாமல்,
உன் விழிகளுடன் போரிட்டு !
தோற்றுபோய் விவேகியானேன் !
வேகங்கள் வேகமாய் குறைந்து !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதலர்மரணம் அடிக்கடி தொட்டுப்பார்க்கிற,
முகடு காதல் !
அதன் அடிவாரத்தில் எப்போதும்,
துள்ளிவிளையாடி துவண்டு தளர்ந்து,
பொழுது கழிக்கும் மழலைகள் காதலர்கள் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீயும் நானும்நீ எனை சாடி,
ஊருக்குள் விலகிச்சென்றவள் !
நான் உனை தேடி,
உயிருக்குள் உலவச்சென்றவன் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

குத்தல்கள்கதவு ஜன்னல்கள் மூடியிருக்கும்போதும்,
உள்ளே நுழைந்துவிடும் கொசுக்களைப்போல,
எந்தத்தனிமையிலும் புகுந்து கடிக்கிறது !
ஓய்வெடுக்கவிடாத,
உன் ஞாபகக்கூர்மைக்குத்தல்கள் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

அடையாளம்உயிருக்குச் சொல்லிக்கொடுத்தேன்,
அதன் உருவம் நீயென்று !
உணர்ந்துகொண்ட அது,
தேடத் துவங்கியது உன்னை !
உனக்குள் நிரந்தரமாய் அடைந்துவிடலாம்,
அடக்கமாகிறவரை என்று !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

சுற்றம்நான் தேடும் முகவரி எல்லாம்
உன் இதயம் மட்டும்தான்
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே...பழிவாங்கப் புறப்பட்டவனின் விழிகளில்,
கொஞ்சம் ஒளிந்திருந்தது ஈரம் !
ஆனாலும் அது எப்போதும்,
அக்கினிக்குளம்பாய் கனன்றுகொண்டே !
நிலையுணர்ந்து அதை தணிக்க யோசிக்காமல்,
தீக்கங்குகளை அள்ளிப்போட்டுக்கொண்டே !
தவறாமல் உறவுக்கழுகுகள் !
அவனையே பலிகொடுக்க !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ தரும் முகவரிநான் தேடும் முகவரி எல்லாம்
உன் இதயம் மட்டும்தான்
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே...


கவிதைகள் உலகம் ..smdsafa..

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;