உனக்காக உயிர் நோக
கடலோரம் நான் நின்ற நேரம்,
நிலவொன்று நிஜமாகி
உன்னை தேடி வழி கேட்க,
பொய் சொல்ல தெரியாமல்
உன் முகவரி தந்து விட
பொல்லாத அந்த நிலவோ
உன்னழகு திருடி போகுமென
கனவில் கூட நான் நினைக்கவில்லை..!!
கேட்டவுடன் உன் அழகை
நிலவுக்கு தருவாய் என
எனக்கு தெரிந்திருந்தால்,
நிலவை மிரட்டி எனக்காக
இன்னும் ஏழெட்டு நிலவுகள்
படைத்திருப்பேன்..!!!
சதிகார அந்நிலவு இப்படி செய்யுமென
நீயும் எதிர்பார்த்திருக்க மாட்டாய்..!!
ஆம் அந்நிலவு சூரியனிடம்
உன்னை பற்றி சொல்ல
சூரியனும் பகல் மறந்து
கிளம்பி வருகிறான்
உன்னிடம் அழகை திருடி செல்ல...!!
இப்படியே போனால் எல்லா
நட்சத்திரங்களுக்கும் உன் முகவரி
நான் தர வேண்டியிருக்கும்..!!
என்னை மன்னித்துவிடு
உன் முகவரி தேடி நானும் வருகிறேன்
உன் அழகை திருடி செல்ல அல்ல,
உன்னை நட்சத்திரங்களிடமிருந்து காக்க..!!!
fb.com/kavithaigalulagam
கவிதைகள் உலகம் ..smdsafa..
- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA