தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

அழகானவைகள்அழகான கவிதைகள் அறுவடை செய்யப்படுவதில்லை,
அது பெருமழையாய் பெய்துமுடிந்துவிடுகிறது !
பக்கங்களையும் பக்கத்துணைகளையும் பொருட்படுத்தாது.............
மேகங்கள் திரள்வதை தாகங்கள் அறிவதேது?


கவிதைகள் உலகம் ..smdsafa..

அனுமதிஎன் கவிதைகளை
உன் நினைவின்றியும்
உன்னைத் சீண்டாமலும் தான் எழுத முயல்கிறேன்,..
உன் நினைவின்றி நானும் இல்லை...,
உன்னை சீண்டாத என் கவிதைகள் பிறக்கவே மறுக்கின்றனவே...,
யாசிக்கும் என் கவிதைகளுக்காகவேனும்
யோசிக்காமல் நான்சிறிது சீண்டிக் கொள்ளட்டுமா உன்னை....!


கவிதைகள் உலகம் ..smdsafa..

கவிதைகள் சில =========================
உன்னை நான்
மறந்துவிட்டேன் என்று
நீ எண்ணும் வேளையில்
பிரிந்திருக்கும் என் உயிர்..
=========================

=========================

கடலின் உள்ளே
மூழ்கி எடுத்தால்
கிடைக்கலாம்
ஆயிரம் முத்துக்கள்
ஆனால் நீ
ஆயிரம் அதிசய
முத்துக்களையும்
அப்புறம் தள்ளும்
அழகிய முத்து
எந்தன் சொத்து !
=========================

=========================

மெதுவாய் ஒரு மல்லிகை
வாசம், 
எழுந்து பார்த்தேன்,


என் கல்லறை மேல்,
உன் கண்ணீர் துளி ..........

=========================

=========================

             நினைவுகள்
முட்கள் 
நடுவே சிரிக்கும்
ஒற்றை ரோஜாவாய்..!
தனித்தே 
சிரித்திருப்பேன்
உன்னையும்
உன்னோடான
நினைவுகளையும்
என்னுள்
என்னுள் சுமந்தபடி..!

=========================
============================
   கவிதைகள் உலகம் ..smdsafa..
============================

மழலைத்தொழிலாளி கல்லுடைக்கிறாள் மண் சுமக்கிறாள்,
கட்டிடவேலை நீர் இறைக்கிறாள் !
கூவிவிற்கிறான் பரிமாறி நிற்கிறான்,
ஓடியாடி எடுபிடியும் ஆகிறான் !
பள்ளி செல்வதை மறந்துபோய்விட்ட,
தெளிவு வராத சிறுமியும் சிறுவனும் !
பால்குடி மறந்த சிலவருடத்தில்,
தேள்கடியாக நாட்கள் மாறினார் !
பண்டங்கள் எது தின்றாலும்,
அங்கே ஒரு மழலை பார்த்தால்,
உடனேயே அள்ளித் தந்திடும்,
தன்மைகள் வளர்த்த கரங்கள் !
தமதாக கொண்டதுதானே,
இதுவரையிலும் எங்களின் மனங்கள் !
ஆனால்,
விளையாடும் மழலைக்கூட்டம்,
வியர்வையைத்துடைக்கும் அவலம் !
வெயில் மழையுடன் போராடித்தான்,
வெரும்கால்கல் நிறைக்கும் கவளம் !
மாலை வரும் கூலிக்காக,
காலைவரும் முன்னர் எழுந்து,
கவனங்கள் தொலைக்கும் பிறவிகள் !
காலம்வரும் என்றேகூட,
காத்திருக்கத் தெரியா உறவுகள் !
வயதுக்குமீறிய சுமைகளை,
ஏற்கின்ற மெல்லிய விரல்கள் !
கண்டதும் எம்பிகுதிக்கும்,
இமைகளை உடைக்கும் திரள்கள் !
ஆகவே பொறுமைகாட்டு,
அன்பினில் வளர்ந்த மனிதா !
அழித்திட முற்படுகின்றாய்,
வளராத ரேகைகள்தம்மை !
தெரிந்தே ஏன் சிதைக்கிறாய் நீ?
நடைபயிலும் பாதைகள்தம்மை !
உற்று நோக்கிடின் எங்கெங்கினிலும்,
திரிந்தபடியே உழைக்கும் மழலைகள் !
கந்தலாடை தந்தே சிலைகளை,
சிதைப்பதென்ன உந்தன் கயமைகள் !
தவறு குற்றம் என்றே சொல்லி,
விலகி ஓடும் உங்கள் கொடுமைகள் !
பாவம் சாபம் என்பதை உணர்ந்தும்,
பாதகங்கள் செய்யும் எருமைகள் !
வளைக்காதே வானவில்களை !
உடைக்காதே குருத்தெலும்புகளை !
சிதைகாதே சின்னக் கடவுள்களை !
படைக்காதே பாவப் பூமியை !
மழலையிடம் மழலை ஆகு !
மடியினிலே விடியல் தேடு !
நிம்மதியை அவரிடம் நாடு !
அவர் வளர நீயும் ஓடு !
மழலைகள் வார்த்திடும் தன்னை !
வருங்காலம் வாழ்த்திடும் உன்னை !


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஈர்க்கிறாய்நீ பார்க்காத நேரங்களில் உன்னோடு,
பவனி வந்துகொண்டுதானிருன்தேன்,
உன் நிழலாய் !
நீ நினைக்காத நிமிடங்களில்,
உன்னோடுதானிருந்தேன்,
உன் தொண்டைக்குழியிறங்கும் எச்சிலாய் !
நீ தீண்டாத மணித்துளிகளில்,
உன்னோடுதானேயிருந்தேன்,
நரகமென எரியும் விரகமாய் !
நீ தூங்காத சமயங்களில்,
உன்னுடனேயே இருந்தேன்,
உன் உறக்கம் பறித்த சாபமாய் !
எனக்கோ..........................!!
எல்லாமுமாய் நீயிருந்தாய் எந்தநேரமும் !
ஐம்பூதங்களின் அர்த்தமாய் !
அதில் ஊசலாடிடும் அற்பமாய் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உயிராடல்என்றோ படித்து ரசித்து,
நினைவை நீங்கிய ஒரு கவிதையை,
நினைவுபடுத்தியது உன் உரையாடல் !
வரிகள் நினைவுக்கு வரவில்லை !
வந்தது அது தந்த நெகிழ்ச்சியும் பரவசமும் !
அடிக்கடி இனி பேசு என்னுடன் !
அதுகாறும்,
கவித்தூறலில் களைப்பாறும் என் நிழல் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

இரவை எதிர்ப்பார்த்துகனவிலாவது வருவாய் என உன்னை எதிர்ப்பார்த்து காத்திருந்து........
இன்றும் ஏமாற்றத்துடன் தள்ளினேன் இரவை !

விடுதலையானது இரவு,
உறங்க மறந்துவிட்டேனோ என பெருமூச்சுடன் நான்......
நாளைய இரவை எதிர்ப்பார்த்து........!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல் விளையாட்டுஇருவருக்குமே வெற்றி என்பதெனில்
எனக்கும் சந்தோஷம்தான்.

நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
நான் தோற்றுபோககூட
சித்தமாயிருக்கிறேன்.

ஆனால்,

இருவருமே தோற்றுபோவோம்
என தெரிந்த பின்னும்
ஏனடி இந்த காதல் விளையாட்டு.


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் அம்மா!என் அம்மா! உன்னை புகழ்ந்து பாட எனக்கு கவிதை எழுத தெரியவில்லை,
நீ செய்வதை சொன்னாலே அது கவிதை ஆகுமோ!
பத்து மாசம் பொத்தி வைத்து பெற்றெடுத்தாய் தாயே!
பிறந்தவுடனே அழுதது குழந்தை ஆனால் பெற்றெடுக்க சிரமப்பட்டது நீதான் அன்னை!
உன் வலியை பொறுத்து கொண்டு, குழந்தையின் அழுகை நிறுத்த
உன் இரத்தமே தாய்பாலா தந்தாயே தாயே!
நடக்க பழக்கிவிட்டாய், பேச கற்றுக்கொடுத்தாய்
அன்பாய் வளர்த்துவிட்டாய், நீ தானே என் தாய்!
முடியாது முடியாது என்று நான் சொன்ன போதும்,
உன் பாசம் முடிவதில்லை உன்னைபோல் பாசம் காட்ட எவரும் இல்லை!
இத்தனையும் செய்யும் தாயே எனக்கு ஆசையே நீ என்றும் என்னோடு இருப்பது தானே!
           என் அம்மா!  என் ஆசை நிறைவேறாது போனதே அம்மா..


கவிதைகள் உலகம் ..smdsafa..

கவிதைகள் உலகம் 298

கவிதைகள் உலகம் படங்கள்            ..smdsafa..

என்னுள் ஒரு தேடல்மூங்கில் காடுகளில் அலைந்து திரிந்து ,

ஒரு மூங்கிலை தேர்வு செய்து அழகிய புல்லாங்குழலாக

மாற்றி என் மனதோடு மகிழ்ந்தேன்...

ஊத நினைத்தேன்..

மறுத்தது...

பின்பு தான் தெரிந்தது..

அது ஊமை என்று...

அது போல் தான் உன்னுடனான என் வாழ்க்கையும்...

நீ என்னுள் இணைய மாட்டாய் என்று எனக்கு தெரியும்..

இருப்பினும் என்னுள் ஒரு தேடல்...

உன்னை காண...கவிதைகள் உலகம் ..smdsafa..

முயற்சி


மறக்க மாட்டேன்
நான் மரணிக்கும் வரை
என் வறுமையின் நிலையை

மரணித்தாலும் முயற்சி
செய்யாமல் விட மாட்டேன்

எனை சார்ந்தவர்களின்
வறுமையை போக்க ..

கவிதைகள் உலகம் ..smdsafa..

படிப்பு தான் கவிதையோ !வறுமையை படித்தேன்
கவிதை கொடுத்தது ..
உனை படிக்க முயன்றேன்
நீயோ உயிரை பணையமாக
வைத்து விட்டு கவியை
பரிசாக கொடுத்தாய் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஐ மிஸ் யூஉன் பாத சுவடு 

தேடியே என் 

வாழ்க்கை சுவடு 

அழிந்து கொண்டு 

இருக்கிறது ..கவிதைகள் உலகம் ..smdsafa..

வாழ்வியல்திசைமாறிய பாய்மரக்கப்பலில்,
அசைவற்றுக்கிடந்தது எங்கள் விதி !
அவளுக்கும் எனக்கும் இடமிருந்தது,
ஆனாலும் எங்களைச்சுற்றி,
காற்றும் புயலும் சுழன்றது !
தனித்தீவுக்கோ புது வாழ்வுக்கோ,
பிரியப்படவேயில்லை நாங்கள் !
எங்களின் தேவையெல்லாம்,
இடர்பாடுகளில்லாத பயணமாகவேயிருந்தது !
அதனால் பிரார்த்தனைகள்,
ஆபத்தில்லாத பயணம்வேண்டியே உழன்றது !
கட்டிப்பிடித்து கண்ணீர்விட்டு அழ,
காதலேதும் இருக்கவில்லை எங்களிடம் !
ஒட்டுமொத்தமான தேவையாய் சத்தமற்ற அமைதியும்,
அதன் இலக்காய்...........
ஒரு அர்த்தமான வாழ்க்கையாகவுமேயிருந்தது !
சூழ்நிலைக்கேற்ப என்ன மாறுவது இங்கே?
யோசிக்கவிடாதபடி யாசிக்கிறது உயிரை பசி !
உணர்ச்சியில் எத்தனை பரிமாணங்கள்,
திக்குத்தெரியாத இந்த ஆயுள் இருளில் !
இணைந்து எப்படி வாழ்ந்தாலும்,
தனித்து விதிக்கப்பட்டதுதானே பிறவி !
வாழ்ந்துவிடலாமே எவருக்கும் வலி தராமல் !
குறைந்தபட்ச அன்பாய் ஒரு புன்னகையை பரிசளித்து !!
மற்றபடி தொடர்ந்துகொண்டே இருக்கட்டுமே,
பேரலைகளுக்கிடையிலான போராட்டமும் திசைதேடலும்..............


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;