தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

கவிதைகள் உலகம் படங்கள்

பூக்களின் பொறாமை


" இப்போதெல்லாம் என் தோட்டத்து ரோஜாக்கள்..........

" என் காதலியின் வரவுக்காக

பூக்காமல் காத்திருக்கின்றன.........

" காரணம் அவளின் மலர் முகத்தை விட......

" தங்களின் மலர்வு அவ்வளவு

சிறப்பாக இல்லை என்பதால்!

" பூக்களே பொறாமைப்படும்

                                                        அழகி என் காதலி!!


கவிதைகள் உலகம் ..smd safa..

பிரிவு
பிரிவொன்று வந்தால் அது
நிரந்தர பிரிவாக இருக்கட்டும்..


இதயம் இறந்து உயிர் வாழ்வதை விட
கல்லறை சுகம் சுகமானது..கவிதைகள் உலகம் ..smd safa..

தகனம்

உன் மனதுக்குள் இருக்கும்,
கோபங்களெல்லாம் ஒருமுகப்படும்போது,

எதிர்முகமாயிருப்பது என் துரதிஷ்டம் !!

அங்கே எரிமலையாய் வெடிக்கும்,
உனது தீக்குழம்பு வாரத்தைகளில் சுருண்டு,

துரும்பாகி வெந்து வேகாலத்தில் சிதைந்து,
கருகி கரிக்கட்டையாய் சுடுகாடு போகிறேன் நான் !!

கவிதைகள் உலகம் ..smd safa..

பேராசையினால்

பகல் முழுவதும் இரவாக
வேண்டுமென்று

இறைவனிடம் வேண்டினேன்..!


இரவுநேர கனவில்
மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை,

நாள் முழுவதும்
அனுபவிக்கவேண்டும்

என்ற பேராசையினால்.....


கவிதைகள் உலகம் ..smd safa..

வன்முறை


கட்டாயப்படுத்தி கட்டியணைக்கும் பொழுதெல்லாம்,

எந்த எதிர்ப்பும் காட்டாமல் சிலையாய்,

அவள் கடைபிடிக்கும் அமைதியே,

உலகத்தின் உச்சபட்சவன்முறை எனைப்பொறுத்து !!


கவிதைகள் உலகம் ..smd safa..

தினம் தினம் இறக்கிறேன்


பெண்ணே நீ பிறக்காமல் இருந்துருந்தால்

நான் உன்னை நினைக்காமல் இருந்து இருப்பேன்

நீ பிறந்து விட்டதால் நான் இறந்து கொண்டு இருக்கிறேன்


கவிதைகள் உலகம் ..smd safa..

கடிதங்கள்

நான் உனக்கு அனுப்பும் கடிதங்களை

எல்லாம் எரித்து விடுகிறாய் பெண்ணே

அதில் கரிந்து போவது என் உயீர் என்று தெரியாமல்..

                                                                  கவிதைகள் உலகம் ..smd safa..

தைத் திருநாள்


ஓரெழுத்தில் ஒரு தமிழ் மாதம்
தமிழர் கொண்டாடும் பெரு மாதம்
விதைத்த பயிரெல்லாம் வீடு சேரும்
போட்ட முதலெல்லாம் மும்மடங்காய் மாறும்
ஒரு காலம் பொய்த்து விட்டாலும்
மறு காலம் வாழ வைக்கும்
வளமாக்கும் !!! வணங்குவோம் இயற்கையை !!!


கவிதைகள் உலகம் ..smd safa..

பிறப்பிடம்.


எல்லா தவறுகளையும் நீயே செய்துவிட்டு,
கடைசியாய் அருகேவந்து,
உன்னிடம் அனைத்தையும் இறக்கிவைத்துவிட்டேன்,
என் பாரமெல்லாம் குறைந்தது என்கிறாயே ?
இந்த சொல்லவொணா சுமைகளை எங்கு இறக்கட்டும் ?
காலம்முழுதும் கழுத்தை நெறிக்குமே இந்த கணம் ?
தாங்கவேண்டுமே நான் இதை தார்மீக ரகசியமாய் ?
என்னடி முடிவு என் மௌனச்சுமைகளுக்கு ?


கவிதைகள் உலகம் ..smd safa..

காதலில் வீழ்ந்தது

தோழியே..! உன்னைச் சந்தித்தது விதி…
உன்னுடன் நட்பு கொண்டது ஒரு வாய்ப்பு. ஆனால்
உன்னிடம் காதலில் வீழ்ந்தது,
என்னையும் அறியாமல் நடந்தது,
என்னால்கட்டுப்படுத்த முடியாமல் போனது.

                                                                       அதுதான் காதல்….!

கவிதைகள் உலகம் ..smd safa..

நெருக்கம்

உன் நிழலுக்கு ஆசைப்படமாட்டேன்,
என் நிழலுக்கு நீ ஆசைப்படாதபட்சத்தில் !
இந்த நிழல் உவமை கண்களுக்கும் உடலுக்கும் அல்ல,
மனதுக்கு சம்மந்தப்பட்டது !!
நீ இல்லாமல்போனாலும்கூட,
உன் இருப்பையும் நெருக்கத்தையும் திரட்டித்தருவது !!

கவிதைகள் உலகம் ..smd safa..

உண்மை காதல்


கவிதைகள் உலகம் ..smd safa..

தளர்ந்தவன்

தளர்ந்த நடையும் குனிந்த பார்வையும்,
தோல்விக்கான துவக்கங்கள் அல்ல,
அவைகள்,
யோசிப்பவன் மூளையை யாசிக்கிற நிமிடங்கள் !!
குறைத்து மதிபிடாதீர் குனிந்த தலையனை,
அவன் காலநேரங்களை கணக்கில்கொள்வதில்லை !!
சாபம் கடந்தாலும் சாதித்து நேட்டிமுறிப்பான்,
சாமானியர்கள் இங்கே சாதாரனர்களுக்குல்தான்,
சத்தமின்றி வசிக்கிறார்கள்,
மொத்தத்தில்,
குறைத்து எடைபோடாதே எந்த கணவானையும் !!
நடை உடை நளினம் நாகரீகம் பார்த்து

கவிதைகள் உலகம் ..smd safa..

இழப்பு


சிந்திக்க மறந்ததால் நிந்திக்கப்பட்டவன்,
உனை சந்திப்பதற்கு முந்திக்கொண்டு வந்தேன்,
பிறகு ஏனோ மெத்தனமாய் கலைந்தேன்,
அதன் உறுதியில் விழுந்து உன்னை இழந்தேன்,
அதனது விளைவின் தொடர்ச்சியில் என்னை இழந்தேன்.


கவிதைகள் உலகம் ..smd safa..

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;