அம்மா நீ நல்ல முன்னெழுத்தும்
முகவரியும் போட வேண்டும்
என்பதற்காக முந்தானையால்
அடிவயிற்றில் மறைத்து வைத்து
பெற்றெடுத்து என்னை
முன்னெழுத்தே தெரியாமல்
அலையவிட்டுவிட்டாயே,,,,!
கண் எதிரே நீ தெரிந்தும்
என் தாய் தான் என்று
நான் உணர்ந்தும் அம்மா என
உன்னை அழைக்க முடியாத
நிலையில் அனாதையாய்
பிச்சை வேண்டி அம்மா
தாயே என்று அழைத்தேனே,,,,,!
துவாரக யுகத்தில்
கொடை வள்ளல் கர்ணன்
தளபதி படத்தில் சூப்பர்
ஸ்டார் ரஜனி காந்த்
கலியுகத்தில் நவநாகரீக
நளின நங்கையால்
நானும் தந்தை தாய்
அறியாத உன் பிள்ளையா,,,,, !
குந்தி தேவிகளே உங்கள்
மந்திர ஞாலங்கள் மறையட்டும்
கிணறுகளிலும் குளங்களிலும்
குப்பை தொட்டிகளிலும்
உங்கள் குழந்தைகள் அநாதரவாய்
உறங்குவது இனி குறையட்டும் !
அம்மா என்ற வார்த்தையின்
உள்ளார்ந்த அர்த்தத்தை
அகில உலகமே போற்றட்டும்
அணைக்கும் கரங்களே
கருணை உள்ளங்களே
குழந்தைகள் கண்
கண்ட தெய்வம் நீங்களே,,,,
கவிதைகள் உலகம் ..smdsafa..
- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA