வரிசைகட்டி வாகனத்தில் நோஞ்சான் மாடுகள்,
சாலையோர ஜீவராசிகளை ரசித்தபடியோ வெறுத்தபடியோ !
தாம் வாழத்தகுதியற்றவர் என மனிதன் நிர்ணயித்துவிட்டான் !
எனும் பயங்கரத்தை அறியா பயணத்தை மேற்கொள்பவர்களாய் !
எங்காவது இறக்கி அங்கேயே முடிக்கப்படுவோம் என்பதறியாமல் !
கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்ற கொடூர எண்ணகர்கள் நமக்குள் !
நீ உதவாதுபோனால் உன்னையே வெட்டித்தின்ன சம்மதிக்குமா மதி ?
ஆறறிவு படைத்தது உழைத்துப்போட்ட ஐந்தறிவை அடித்துப்புசிக்கவா ?
மனிதா ! மனிதனா நீ ?
நாடுகேட்காதுபோனாலும் நாளை ஒரு மாடு கேட்கும் !
உயிர் வதைக்கும் உனை முட்டித்தூக்கும் !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
உமது இரைச்சல்கள் இதமாய் வந்து கலந்ததுண்டு,
என் படுக்கையில் தூக்கத்தினூடே !
அந்தரத்தில் தொங்கும் தந்திக்கம்பிகளில்,
ஒய்யாரமாய் அமர்ந்திருக்குமே உமது கூட்டம் !
மொட்டைமாடிக்கு வரும்போதெல்லாம் ஓய்வின்றி,
வலமும்இடமும் பறந்து போக்குக்காட்டுவீரே கவனத்திற்கு !
எந்த இடத்தையும் பற்றியமர்ந்து குட்டி வாலாட்டும் கூட்டமே !
எங்கே போனீர் எமைக்கடந்து இங்கே இல்லாமல் !
துள்ளலாட்டம் போட்ட உமைக்கான தள்ளாட்டம் போடுது மனது !
அங்குமிங்கும் தேடுகிறேன் தொலைந்தபொருளை கண்டிடும் ஆர்வத்தில் !
காட்டவேண்டும் உமது குழுவை எமது குழந்தைக்கூட்டத்திற்கு !
காதில் விழுகிறது !!
"சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன"
எனும் செய்தி பற்றவைத்த தீயாய் !
விம்மிப் புடைக்கிறது நெஞ்சம் !
மரணம் வரலாம் பிறப்பு ஈடுசெய்யும் !
தனிமை வரலாம் இனிமை ஈடு செய்யும் !
இனம் அழியும் கொடுமை எந்த முடிவைத்தரும் ?
தடயங்களைத் தேடவேண்டுமா இனி குருவிகளுக்கு ?
அவைகளை குழந்தைகளாய்ப்பார்த்து குழந்தையாகியிருக்கிறேன் !
அச்சிறிய ஜீவன்களிடம் சிந்தை சிறைப்பட்டதும் உண்டு !
சென்றுவிட்ட உமக்காக நின்றுபெய்கிறது கண்ணீர் மழை !
என்செய்து எப்படி கொணர்வது உணர்வது உமது அருகாமையை ?
எதன் வளர்ச்சியில் துவங்கியது உமது வீழ்ச்சி ?
கண்ணெதிரே அழிந்துவிட்டவரே !
காணக் கிடைப்பீரா இனி ?
உறவைத்துண்டித்த பறவைகளே சிட்டுக்குருவிகளே !!
"உள்ளத்தில் வெறுமையாகவே உமக்கான இடம்"
கவிதைகள் உலகம் ..smdsafa..
எவரும் சொல்லாததை சொல்லமுயன்று,
சொல்லெடுத்துப் போராடுகிற யுக்தியை,
காதல்தான் தருவித்தது....................
பலநேரங்களில் சொல்லாமலேயே,
மௌனமாயும் முடிந்துபோகிறது சொல்லவந்தது !
அவைகளை மனதுள் மறையும் தோல்விகள்,
என்று மடித்து முடித்துவைத்து விடாமல்,
முயற்சிகளின் சின்னங்கள் என்று,
முழுமையாய் ஏன் அங்கீகரித்து முகரக்கூடாது நீ !!
முயற்சிகளும் காதலிக்கப்படவேண்டும் முழுமையாய் பெண்ணே !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
எப்போது ஒன்று சேர்வோம்? எப்படி ஒன்று சேர்வோம்? இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை! உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...
-
அன்பே என்று அழைத்திடுங்கள்! ஆசை களை எல்லாம் பட்டியலிடுங்கள்! இதயங் களை ஈந்திடுங்கள்! ஈரவிழி களை துடைத்திடுங்கள்! உறவு களை நினைத்தத...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
தேவை இல்லாத எண்கள் என்று; அலை பேசியில் இருந்து அழிக்கும் போது தான்,,, தெரிகிறது,,, உலகை விட்டுப் போன என் உயிர் நண்பன் பிரிவின்...










- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA