தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

இதயமாக வேண்டாம்

நீ என் உயிராக மட்டும் இரு.,
        இதயமாக இருக்க வேண்டாம்..

உன்னை துடிக்க விட்டு
        நான் உயிரே வாழ வேண்டாம்..

கவிதைகள் உலகம் ..smd safa..

அம்மாவின் தவிப்பு


இந்த இரண்டு வருடத்தில்
நான் அவனை பிரிந்ததே இல்லை .

இந்த இரண்டு நாளில்
அவன் பிரிவை நன்கு உணர்கிறேன் .

மூக்கு கண்ணாடி

மூக்கு கண்ணாடி அணிந்தால்
பலருக்கு அழகு கூடுமாம் .

ஆனால்

மூக்கு கண்ணாடியின் அழகு கூடியது.,
          அதனை என்னவன் அணிந்ததினால்!!

கவிதைகள் உலகம் ..smd safa..

அம்மாவின் ஆனந்தம்

இப்போதெல்லாம் இரவில் அவன் கண்கள்
                              என்னை தேடுவதில்லை .
அவன் கைகள் என்னை தீண்டுவதில்லை ,
                              எனை தீண்டவிடுவதுமில்லை .

ப்ரியமானவனே


ப்ரியமானவனே,.

உன்னில் இருந்து நான் விலகவும் இல்லை,
இனி விலகப்போவதும் இல்லை..

பிரியமான தோழனாக வந்த உன்னை- இன்று

உன்னை காண வேண்டும்

சொல்லி அழுது விட்டால்
துன்பம் எல்லாம் தீர்ந்து விடும்...

சொல்ல ஒரு தோழி இல்லை,
சொல்வதற்கு வார்த்தை இல்லை....

நீ கொண்ட அன்பு

அன்பிற்கு அன்னையாய்....
பாசத்துக்கு தந்தையாய். .
நேசத்துக்கு சகோதரனாய்..
நட்பிற்கு தோழியாய்...

உன் குரல் கேட்க

நீ இங்கு இல்லை என்று தெரிந்தும்
போகும் இடமெல்லாம் என் கண்கள்
உன் முகத்தை தேடுகின்றது..

என் மனமும் உன்னையே நினைத்து

அன்பு

எல்லோரிடமும் அன்பை காட்டி
                                 ♥ ♥ஏமாந்து விடாதே...♥ ♥

யாரிடமும் அன்பை காட்டி
                                 ♥ ♥ஏமாற்றி விடாதே..♥ ♥
♥ ♥கவிதைகள் உலகம் ♥ ♥..smdsafa..♥ ♥

அம்மா, காதல் படங்கள்

காதல் சோகம், அம்மா, நட்பு படங்கள்

காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..

அன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்

பெண், அம்மா, காதல், சோகம் படங்கள


காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..

பூக்கள் காதலி படங்கள்


காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..

சோகம் தத்துவம் படங்கள்காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..

காதல நட்பு அம்மா படங்கள்


காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..

கவிதை படங்கள்காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..

தமிழ் கவிதைகள் புகைப்படங்கள்


 காதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..

ஊமையாய் காதல

திருட்டுதனமாய் பார்த்தோம் பயந்து
பயந்து நேசித்தோம் தயங்கி தயங்கி
நேரெதிர் சந்திக்கும் தருணத்திலே
நம் விழிகள் மோதிகொண்டதே..

விருந்தாளி

இன்பங்கள் என்று ஆடைகட்டி
               அலங்கரித்து ஆடித் திரிந்த
எல்லாம்  ஒவ்வொன்றாய்
               விலகிச் சென்றாலும்

அடை மழை

நிலா பெண்ணுடன் கொண்ட

          காதல் தோல்வி..

ஓயாமல் அழுகிறது மேகம்....

கவிதைகள் உலகம் ..smd safa..

ஹைக்கூ

இருப்பதையும் இல்லாமல் ஆக்கிவிடும்,
                  பதட்டமும் - பயமும்..

கவிதைகள் உலகம் ..smd safa..

தாங்கமுடியாதது


நி உன் இதயத்தில் இருந்து என்னை தள்ளியதும்!
மிக உயரத்திலிருந்து படுக்குழி நோக்கி விழுவதாய் உணர்கிறேன்!
அநேகமாக அது கல்லறை என்று தான் நினைக்கிறேன்!
எனெனில்

உன்னால் மட்டுமே

உன்னால் மட்டும் எப்படி முடிந்தது!!

இதயத்திற்கு
                      இதமான அன்பையும் கொடுத்து,
                      பிரிவு -எனும் வலியும் கொடுக்க..

கவிதைகள் உலகம் ..smd safa..

பிரிவு

நீ பிரிந்து சென்ற பின் உன்
                   நினைவுகளை எப்படி செலவழிக்க.??

காகிதங்களில் கவிதையாகவா?    - இல்லை

கண்களில் கண்ணீராகவா??

கவிதைகள் உலகம் ..smd safa..

இலட்சியம்

கவலையை நினைத்து
                             கண்ணீர் சிந்துவதை விட,

இலட்சியத்தை நினைத்து
                             இரத்தம் சிந்துவதே மேல்.

கவிதைகள் உலகம் ..smd safa..

புன்னகை

ஒரு புன்னகையில் என்னைக்
                     கவிழ்த்த   கர்வம் உனக்கு.!!.

அந்த புன்னகையில்
                     கவிழ்ந்த ஆச்சர்யம் எனக்கு.!!

கவிதைகள் உலகம் ..smd safa..

உன் நினைவுகளோடு

நினைவுகளாலே நிறைத்து விட்டாய் என் இதயத்தை.,
உனது பெயரை தட்டச்சு செய்கிறது என் விரல்கள், தானாகவே..

தனிமையில் உன் பெயரை முனு முனுக்கிறது என் இதழ்கள்..

தண்ணீர் தண்ணீர்

ஏறி, குளங்களில் இல்லை - தண்ணீர்..

பயிர் பாசனத்திற்கு இல்லை - தண்ணீர்..

தாய் தந்தை

தோள் கொடுக்க தோழனும்,
தோள் சாய தோழியும்        கிடைத்தால்
                அவர்கள் கூட  தாய் தந்தை தான் ...!

கவிதைகள் உலகம் ..smd safa..

மௌனம

பெண்ணே,   என்னை கொல்ல
                     எந்த ஒரு ஆயுதமும் வேண்டாம்..

உன் ஒரு நொடி "மௌனமே" போதும்..

கவிதைகள் உலகம் ..smd safa..

நண்பன்

உன் நினைவில் நான் வந்தால்,
                                    - நான் உன் நண்பன்...

உன் கனவில் நான் வந்தால்,
                                    - நான் உன் உயிர் நண்பன் ...

கவிதைகள் உலகம் ..smd safa..

தாஜ் மஹால்

என்னை கட்டிய்வனும் இல்லை,
கட்ட சொன்னவனும் இல்லை..

இருந்தும் வாழ்கிறேன், உண்மையான

உறவுகள்

எந்த உறவாக இருந்தாலும், அதில்
உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே
நீங்கள் விலகி சென்றாலும்  உங்களை விரும்பி வரும்...

கவிதைகள் உலகம் ..smd safa..

ரோஜாச்செடி

ரோஜாச்செடியில்,
                      முள்ளும் இருக்கும் -  மலரும் இருக்கும்..

முள்ளை பார்த்து பயந்து விடாதே...
மலரை பார்த்து மயங்கி விடாதே...!

கவிதைகள் உலகம் ..smd safa..

குழந்தையின் தவிப்பு

அவளை பார்க்கும் போது சொல்ல நினைக்கிறேன்..

அவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கிறேன்...

அவள் முத்தமிடும் போது சொல்ல நினைக்கிறேன்....

தாய்மை

அம்மாவின் பிரசவ நேர "அம்மா ஆஆஆ" என்ற அலறல் சத்தம்...
அவள் ஈன்றெடுக்கும் உயிரின் "ம்மா ...ம்மா " முன் எப்படி மண்டியிடுகிறது....அது தான் தாய்மை. உதிரம் தந்தாள்,

உயிர் தந்தாள், உறவு தந்தாள், உலகம் தந்தாள்....

கோயில் வேண்டாம், சர்ச் வேண்டாம், மசூதி வேண்டாம் .....

அவரவர் "அம்மாவை" கொண்டாடுவோம் .....

அது (அம்மா) தான் நாம் எல்லோரும் தேடும் "கடவுள்"


கவிதைகள் உலகம் ..smd safa..

பெண்ணின் குணம்


கானல் நீரோ  பெண்ணின் குணம்...

கண்டதில்லை எவரும், அதன் உண்மை நிறம்...

நட்பென தொலைவில் நின்றால் உவகை நிறைந்தாள்...

விதி

‎"ஒளிந்துகொள்ள இடமா இல்லை இவ்வுலகில்!
இருந்தும் மனிதன் ஏன் காதல் வயபடுகிறான்.,
                     என்றெலாம் தத்துவம் பேசி திரிந்தேன்!!

 விதி யாரை விட்டது,                   இங்கு-இன்று

என் காதல்

என் கவிதைகள் புரியவில்லை என
                                       குற்றம் சொல்கிறாய்..

நான் எழுதுவதெல்லாம் உன் மீதான
என் காதலென்று - நீ   புரிந்துகொள்ளும் வரை

                என் கவிதைகள் புரியாதது தான்....

கவிதைகள் உலகம் ..smd safa..

ஞாபகங்கள்

காலத்தின் சுவடுகளை பார்த்தாலும் சரி,

உன் காலடி சுவடுகளை பார்த்தாலும் சரி,

என்னில் எச்சங்களாய் மிச்சம் இருப்பது

                    உன் ஞாபகங்கள் மட்டுமே..!!

கவிதைகள் உலகம் ..smd safa..

கானல் நீர்


அருகில் இருக்கும் போது அருமை தெரியவில்லை

தொலைவில் இருக்கும் தண்ணீரை கண்ட போது

என் மனம் பருக நினைத்தது..

தடயங்கள்

பெண்ணே :-   அன்று உன் விழியின் ஓர விழியை பார்த்த பின்
ஒவ்வொரு இரவும் கனவினிலே உன் நினைவுகளில் உன்னை
தேடித்தேடி அலைந்தேனே.. கிடைக்காத போதும்
தித்திப்பாய் இருந்ததடி என் தேடல்..

காந்தம்

என் இதயத்தை இரும்பாக
                     தான் வைத்திருந்தேன்..

யாருக்கு தெரியும்..   அவள்
                     காந்தமாக இருப்பாள் என்று..

கவிதைகள் உலகம் ..smd safa..

கருணை

     என் பயம் போக்க நீ என்னை

அணைத்து அரவணைக்கும் போது

கடவுளின் "கருணை" கூட தோற்று போகும்

உன்     பாசத்தின்...           "கருணை" கண்டு...

கவிதைகள் உலகம் ..smd safa..

காதல் தோல்வி

     காதலில் தோற்பவர்கள்..

             பிணமாகிறார்கள்..

                       அல்லது

       பிணமாக  வாழ்கிறார்கள்..

நினைவுகள் மட்டும் உயிரோடு !!

கவிதைகள் உலகம் ..smd safa..

காதலிக்கக் கற்று கொள்


இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என்
வாழ்க்கை   ஒற்றை நொடியில்
முடியும் முன்...

                           நீ காதலிக்கக் கற்று கொள் !


கவிதைகள் உலகம் ..smd safa..

பொய்யான பெண்கள்


       உண்மையான காதல் 
             தோன்றுகிறது, 

பொய்யான பெண்கள் மீது..


கவிதைகள் உலகம் ..smd safa..


உன்னை எப்படி அழைக்க

ஆசைகளை அடக்குபவனை
 ஞானி என்று  அழைப்பார்கள்!!

 அதுபோல்,

தமிழ் பெண்

நீளக் கைகள் உண்டு, நீண்ட கூந்தலும் உண்டு..

முத்தான பல் உண்டு, முன் கோபச் சொல்லும் உண்டு..

மயங்க வைக்கும் மொழி உண்டு,
                              கிறங்க வைக்கும் கண்ணும் உண்டு..

நாம் தமிழனடா


ஓட்டை ஜோப்பில் காலணா இல்லாவிட்டாலும்
கால்கள் தரையில் நிற்காது கனவில் திரிவோம்..

துண்டு பீடிக்கு பிச்சையெடுத்தாலும்
உரத்த குரலில் ஒபாமாவை திட்டுவோம்..

என்னுள் பாதி

நெஞ்சுக்குள் உன்னை வைத்தேன்,
துடிக்க வைக்க ஆசை இல்லை..

உன்னை விழிகளில் வைக்க ஆசை,
உறக்கமில்லாமல் வைக்க ஆசை இல்லை...

பெண்ணே உன்னால்


உன் ரெட்டைப் பின்னல்
பார்த்த பின்பு    
என் ஒற்றை மனது
தொலைந்ததடி

அலைபெசி உலகம்


கனவுகளோடு காத்திருக்கிறேன்.,..................
... ..................கனவிலும் காத்திருக்கிறேன்..

ஒரு வார்த்தையாவது பேசு.............................

அலைபேசியே உலகமென்று ஆனது,
 ................உன் அழைப்புக்காக காத்திருப்பதால்..

காதல் சுவடு

பலபேர் பாதம்பட்ட பேருந்து நிறுத்தத்தில்
பல வருடங்கள் கழிந்தபின்பும்
என்னவளின் பாதசுவடுகள் மட்டும்
அழியாமல் சுவடுகளாய் ...    என் மனதில்.!!.

கவிதைகள் உலகம் ..smd safa..

அழகில் இல்லை காதல்

நீ அழகியாக இருப்பதால் தான்

நான்  உன்னை காதலிக்கிறேன்

   என்று                கர்வம் கொள்ளாதே..!

 உன்னை அழகியாக்கியதே என் காதல் தான்.!!.

கவிதைகள் உலகம் ..smd safa..

நட்பு


நண்பர்களை ஒன்றாக இணைப்போம் ..
                                 நட்புடன் வாழ்ந்திடுவோம் :)

கற்பபை தாண்டி ஒரு சக உதிரமாய்
       சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுவோம் :)

        நட்பு பேச்சு இல்ல .. உயிர் மூச்சு :)


கவிதைகள் உலகம் ..smd safa..

பருவ காலம்

கோடையில் விழும் கடும் இடியில் வந்து
விழுந்தாய் என் மன மடியில்..

கார்காலத்தில் பெய்யும் மழைத் துளியில்
கண்காட்சியாய் நிறைந்தாய் என் கரு விழியில்..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;