தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

பூக்களின் பொறாமை

" இப்போதெல்லாம் என் தோட்டத்து ரோஜாக்கள்..........

" என் காதலியின் வரவுக்காக பூக்காமல் காத்திருக்கின்றன.........

" காரணம் அவளின் மலர் முகத்தை விட............

" தங்களின் மலர்வு அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதால்!

" பூக்களே பொறாமைப்படும் அழகி என் காதலி!!

கவிதைகள் உலகம் ..smd safa..

என்னவென்று சொல்வது

" எல்லோருக்கும் நேற்றைய புன்னகை.........

" இன்றைய கண்ணீர் என்பார்கள்!

" ஆனால் எனக்கோ நேற்றைய கண்ணீர்....

" இன்றைய புன்னகையாக மாறியது!

" காதலியை இழந்தவன் நான் தனிமையில்...

... " என் காதலியை கற்பனை செய்து...

" பேசி மகிழ்வதை என்னவென்று சொல்வது!

" நேற்றைய கண்ணீர் இன்றைய புன்னகை!

கவிதைகள் உலகம் ..smd safa..

தவிப்பு

சொல்ல வேண்டுமென்கிற

தவிப்பில்தான் வருகிறேன்.

ஒவ்வொரு முறையும்

சொல்லாமலேயே திரும்ப நேர்கிறது.

சிலவற்றைச்

... சொல்லாமலே

புரிந்துகொள்ள வேண்டுமென்பதை

யார் உனக்குச்

சொல்லித்தருவது?

கவிதைகள் உலகம் ..smd safa..

உன்னை மறக்க

என்னை எப்படி நீ மறந்தாய்..?

     சொல் "அன்பே"

 நானும்  உன்னை  மறக்க…

கவிதைகள் உலகம் ..smd safa..

நட்பு

ஆயிரம் கோடி நட்ச்சத்திரங்கள் விண்ணில்

இருந்தாலும்

இரவுக்கு அழகு நிலவு தான்

ஆயிரம் உறவுகள் மண்ணில் இருந்தாலும்

வாழ்க்கைக்கு அழகு நட்பு தான்!

கவிதைகள் உலகம் ..smd safa..

ரோஜா

அவள் வைத்துகொள்ளும் ரோஜா

அவளை விட

அழகில் குறைவு தான்

அதனால் தானோ

அவள் கூந்தலின்

பின்னால் ஒளிந்து கொள்கிறது !

கவிதைகள் உலகம் ..smd safa..

கருவறை

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்

கண்கள் இல்லாமல் ரசித்தேன்

காற்று இல்லாமல் சுவாசித்தேன்

கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்

என் தாயின்

“கருவறையில்”

கவிதைகள் உலகம் ..smd safa..

யாரும் இல்லை

எங்கு பார்த்தாலும் காதலர்கள்

என்னை தான் காதலிக்க

யாரும் இல்லை

என்று வீடு திரும்பினேன்

எனக்காக சாப்பிடாமல்

என் “அம்மா” !

கவிதைகள் உலகம் smdsafa.net

மறக்க நினைக்கிறேன்

மறக்க நினைக்கிறேன்

உன்னை அல்ல

உன்னிடம் பேசாமல்

தவறவிட்ட

அந்த நிமிடங்களை!

கவிதைகள் உலகம் smdsafa.net

பிரிவு

எனக்காக பூத்திருக்கும்

ரோஜாவை கூட

பறிக்க முடியவில்லை

காரணம்

பிரிவின் வலி

எனக்கு தெரியும்!

கவிதைகள் உலகம் smdsafa.net

தவம்

உன்னோடு வாழ்வதற்கும்

உன் நினைவோடு வாழ்வதற்கும்

சிறு வித்தியாசம் தான்

    உன்னோடு வாழ்ந்தால்

அது வரம்

   உன் நினைவோடு வாழ்ந்தால்

அது தவம்..

கவிதைகள் உலகம் smdsafa.net

பிடிவாதம்

 அனுமதி கேட்கவும் இல்லை

அனுமதி வழங்கவும் இல்லை

ஆனால் பிடிவாதமாக

ஒரு முத்தம்

என் கண்ணத்தில்

கொசு கடி

கவிதைகள் உலகம் smdsafa.net

நேசிக்கிறேன்

என் கண்ணை நேசிக்கிறேன்

அது உன்னை காட்டியதால்

என் இதயத்தை நேசிக்கிறேன்

அதில் நீ இருப்பதால்

என்னையே நான் நேசிக்கிறேன்

உன்னுடன் நான் அன்பு கொண்டதால்!

கவிதைகள் உலகம் smdsafa.net

நிலா

உன்னை எட்டி பார்த்தேன்

நீ அழகாய் தெரிந்தாய்

ஆனால்

தொட்டு பார்க்க ஆசைப்பட்டேன்

நீ தொலைந்து போனாய்

“தண்ணீரில் நிலா”

கவிதைகள் உலகம் smdsafa.net

நட்பு

உறவென்று சொல்லிக்க

யாரும் இல்லாவிட்டாலும்

உயிர் என்று சொல்லிக்கொள்ள

ஒரு நட்பு இருந்தால்

போதும் உன்னை போல்!

கவிதைகள் உலகம் smdsafa.net

உனக்கும் இதயம்

உனக்கும் இதயம் இருக்கிறது

என்று

உனக்கே உணர்த்த

உன்னிடம் வருவது தான்

காதல்...

கவிதைகள் உலகம் smdsafa.net

அவளுக்கு இதயமாக

நான்
மீண்டும்
பிறந்தால்
அவளின்
இதயமாக
பிறக்க வேண்டும்

அவளுக்காக
துடிப்பதற்காக
அல்ல
...
இந்த முறையாவது
அவளுக்கு
இதயம் இருக்கட்டும் என்று...!

உன்
நினைவு
இல்லாத நாள்...?

என்
நினைவு நாள்...!

கவிதைகள் உலகம் smdsafa.net

வெறுப்பு

அவள் விரும்பிய அனைத்தையும்

நானும் விரும்பினேன்

அவள் வெறுத்த அனைத்தையும்
...
நானும் வெறுத்தேன்

என்னையும் சேர்த்து!

கவிதைகள் உலகம் smdsafa.net

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

கவிதைகள் உலகம்

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

தமிழ், காதல் கவிதைகள் உலகம்..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;