தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

கவிதைகள் உலகம் ஆண்ட்ரைடு அப்ளிகேஷன்


கவிதைகள் உலகம்

கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்..

டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam


நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற

டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET

மிதி----அடிகள்


"மிதியடிகளை வெளியே விடவும்"
எனும் வாசகங்கள்,
ஆக்கிரமித்தது மனதை !
யோசித்தேன் பலமாய் !
பதிலேதும் கிடைக்கவேயில்லை !
சரி நீயே சொல் !
எங்கே விடுவதடி?
நீ கொடுத்த,
"அடிகளையும் மிதிகளையும்"


கவிதைகள் உலகம் ..smdsafa..

மனைவி !


நீ தந்த கடிதங்களை
நிலவொளியில் இருந்து
விடியும்வரை
படித்துப்பார்க்கிறேன்...!

கொட்டும் அருவியின்
அருகில் அமர்ந்து,
நீ சிரிப்பதாய் நினைத்து
நானும் சிரித்துக்கொள்கிறேன்...!

உயிருள்ளவரை - என்
உயிர்துடிப்பு நீ என
கவிதை எழுதியே
காலந்தள்ளுகிறேன்...!

வருடந்தோறும் வந்துபோகும்
காதலர் தினத்தில்,
நீ தந்துபோன பரிசுகளை
தினம் தினம்
விரல்களால் உரசிப்பார்க்கிறேன்...!

நம் காலடிப்பட்டு
கடற்கரை மணல் கருத்தரித்த
காலடிச்சுவடுகளை
தேடிப்போகிறேன்...!

இருவரும் இணைந்துநின்று,
இதழ்களால் புன்னைகைத்து,
புகைப்படமாய் என்
பழைய புத்தகத்திலிருக்கும்
நம்மை உற்றுநோக்குகிறேன்...!

என்னில் நீ
இதழ்பதித்த இடங்களின்
ஈரங்களை தேடிப்பார்க்கிறேன்...!

பெண்ணே...!
இனியென்ன நான் செய்ய...?
இன்னொருவனுக்கு நீ
மனைவியான பின்பு... Via : Kavithaigal Ulagam கவிதைகள் உலகம்


கவிதைகள் உலகம் ..smdsafa..

அதுவல்ல


நான் ரகசியமாய் வடிக்கும்,
கண்ணீர் துளிகளெல்லாம்,
என் உலக அதிசயம் !
உன்னை இழந்ததர்க்கு என்றே,
உன் உள்ளம் நம்பிக்கொண்டிருக்கிறது !
உண்மையில் உண்மை அதுவல்ல !
உன்னை உலகமாய் சிலாகிக்கும் ஒருவனை,
உன் ஜென்மம் இழந்துவிட்டதே என்பதற்காக !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ தந்தவை


மறக்காது மரிக்காது,


மனதைவிட்டு அகலாது !

மாறவும்செய்யாது,

மரணம் வரும்வரையில் !

தொடர்ந்தேதான் தீருமாம்,

தோள்களில் அமர்ந்தபடி !

அன்பே நீ தந்த அழகான வேதனைகள் !!கவிதைகள் உலகம் ..smdsafa..

தாங்கமுடியாதது


நி உன் இதயத்தில் இருந்து என்னை தள்ளியதும்!
மிக உயரத்திலிருந்து படுக்குழி நோக்கி விழுவதாய் உணர்கிறேன்!
அநேகமாக அது கல்லறை என்று தான் நினைக்கிறேன்!
எனெனில்

உன்னால் ஏற்பட்ட பிரிவோ!
ஏமாற்றமோ! துரோகமோ!
என்னால்
ஏற்றுக்கொள்ளமுடியாதது!! தாங்கமுடியாதது!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

கோபக்காரி


உனக்கென்னடி,
காரணத்தை பிடித்து,
வேகத்தை வளர்த்து,
கோபமாகி விலகிப்போய்விடுகிறாய் !
என்னையும் என் உறவையும் !
எப்பொழுது தணிவாய்?
எந்த நிமிடம் இணைவாய் என்று புலராமல் !
எரிமலைக்குளம்புகள்,
எனது விழியில் புரண்டோட !
பார்வை மறையும் நீர்த்தேக்கத்தில் !
நீ வா என்று அழுகிறேன் !
பதிலுக்கு நீ சா என்கிறாயே !
காதல் போனால் கருணையுமா போய்விடும்?
கடவுளின் பிரதியாகவல்லவா பிரார்த்தித்தேன் உனை !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல் தோல்வியா


காதல் தோல்வியா?
அழு...
வாய்விட்டு அழு...
கதறிக்கதறி அழு...
உன்
கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும்வரை
அழு...
பின்பு
உலகத்தைப் பார்...
காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்..

கவிதைகள் உலகம் ..smdsafa..

போதை


உண்டால் போதை தரும் பொருட்களுக்கு தடை விதித்தவன்

பார்த்தாலே போதை தரும் உன் கண்களுக்கு

                                                                        தடை விதிக்க மறந்துவிட்டான்..

கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் விழியோரம் நானிருப்பேன்


காலம் கடந்து,
என் கவிகளை
நீ வாசிக்கையில்,
உன்னிலிருந்து வெளியேற
வழியின்றி, வலியோடு...
உன் விழியோரம்
நானிருப்பேன்..!?
கண்ணீராக...

கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ இல்லாமல்


என் வாலிப வானம்
அமாவாசையானது
நிலவு நீ இல்லாமல்
என் இதயப் படகு
தவிக்கிறது
துடுப்பு நீ இல்லாமல்
என் இளமைச் சோலை
மணம் வீசவில்லை
மலர் நீ இல்லாமல்
என் வாழ்க்கைச் சாலை
வெறிச்சோடிக் கிடக்கிறது
வாகனம் நீ இல்லாமல்
ஆம்! தொடர்கின்றது
என் தனிமைப் பயணம்
ஒரு கணம் ஒரு யுகமாய்
ஒவ்வொரு பொழுதும் சோகமாய்..!

கவிதைகள் உலகம் ..smdsafa..

என் எழுத்து


எதைப்பற்றி வேண்டுமானாலும்,
எழுத முடியும் !
நீ எதிரே இல்லாதபோது !
இருக்கையில் !!
உனைத்தாண்டி எதையும்,
சிந்திக்க முடியாது !
உன்னைவிட,
உயர்ந்த விசயமும் கிடையாது !
நீமட்டும்தான் !
என் மனதை உன்னிடமே,
கட்டிவைக்கிற மாயாவி !!

கவிதைகள் உலகம் ..smdsafa..

ஆணின் எதிர்காலம்


எந்த ஒரு பெண்ணால்

ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க

வைக்க முடிகிறதோ அவள் தான்

அந்த ஆணின் எதிர்காலம் ஆகிறாள்...!!!!!

கவிதைகள் உலகம் ..smdsafa..

எப்படி முடிகிறது


காந்தம் கூட

எதிர் முனைகளை
மட்டும்தான் ஈர்க்கும்

ஆனால்

உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது

நான் எங்கிருந்தாலும்
என்னை ஈர்க்க......??

கவிதைகள் உலகம் ..smdsafa..

பேசியதில்


யோசித்து எழுதும் வரிகள்,
வெறும் வார்த்தைகளாகிவிடுகிறது,
கவிதைகளாகும்,
நீ பேசுகிற வாக்கியங்களின் முன்னே..........கவிதைகள் உலகம் ..smdsafa..

நட்பின் நிழல்


காரணங்கள் சொல்ல எத்தனித்திருந்தால்,
நான் முயற்சிகளே எடுத்திருக்கமாட்டேன் !
உனது முடியாத காரியத்திற்கு !
முடியாது என்று ஒதுங்கவில்லை விலகி,
தோல்வி உன் தோள்களில் அமரும்வரை !
இயலாமை உனை சூழ்ந்த தருவாயில்,
எள்ளி நகையாடினாய் என் பங்களிப்பை !
எண்ணிப்பார்த்தேன் எனது போராட்டத்தை !
துணை நின்றேனே உன்னுடன் தளராமல் !
அதற்குத்தரும் பரிசா?
இந்த அவமானம் நண்பா?
வருத்தமில்லா வா எனைத்தேடி !
இனி எப்பொழுது விதி உன்னை விரட்டினாலும் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் நினைவுகளால்
உன்னை நினைக்க எனக்கு கிடைத்த வரம் 
உன்னை மறக்க எனக்கு கிடைத்த சாபம் 
உன் நினைவில் வாழ்கிறேன் 
உன் நினைவால் சாகிறேன் 
வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் 
வாழ்ந்து கொண்டே சாகிறேன் 
செத்த பிறகும் வாழ்கிறேன் 
உன் நினைவுகளால்..கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ தந்த வலிஉன்னை 
என் மனதிற்குள் 
சிறைப்பிடித்து 
பூட்டி வைக்க 
தான் 
நினைத்தேன்.,


அனால் நீயோ.. 
என்னை 
புதைத்துவிட்டு 
புறம்
சென்றுவிட்டாயே..


கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் அறிவேன் அன்பேநீ என்னை வெறுக்கும் போதெல்லாம் 
நானுன்னை நேசிக்கின்றேன் 
நானுன்னை வெறுத்துவிட்டால் 
நீ சுவாசிப்பதைக் கூட 
நிருத்திருவாய் 
என்பதை நான் 
அறிவேன் அன்பே


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ என்னை மறக்க நினைக்கையில்உன்னை நினைக்கும் போது 

மனதில் உள்ள வலி கூட 

சுகமாகிறது................. 

நீ என்னை மறக்க நினைக்கும் போது 

அந்த சுகம் கூட 

மரணமாக தெரிகிறது.............


கவிதைகள் உலகம் ..smdsafa..

சுனாமியில் தப்பி பிழைத்தவன்..!!!!திடீரென இதயம் நின்று விட்டது
யார் காரணமோ..??
இதயம் நின்ற காரணம் அறிந்தால்
காதல் என்ன செய்யுமோ..??

இந்த காதல் என்ன செய்தால் என்ன
நான் கண்டுகொள்ள மாட்டேன்,
எதற்கும் அஞ்சிவிட மாட்டேன்,
துணிந்தே நிற்பேன்,
துயரத்தை இழப்பேன்..!!!

காதல் ரேகை அழித்துவிட்டேன்,
இதய ஓசை தொலைத்துவிட்டேன்,
இருந்தும் என்ன செய்வேன் பெண்ணே
உன் மூச்சுக்காற்றில் என்னை
கொன்று விட்டாய்..!!
இந்த காதல் கழுத்து வரை
என்னை இறுக்கி உயிர் எடுக்கிறதே..!!

அடைத்து வைத்த கடிகாரம் உள்ளே
நேரம் இழந்து தவிப்பதை போல,
உன் விழி ஓரம் பார்த்தே
விண்வெளியில் தவித்தேன் நானே..!!

யார் யோசனையும் கேட்கவில்லை,
சுய பரிசோதனையும் செய்யவில்லை..!!
காதல் என்றால் காதலல்ல
கண்ணீர் தந்து உயிரை உறிஞ்சும்
புதுமுறை வஞ்சனை..!!
வாஞ்சையுடன் அருகே சென்றால்
நஞ்சு தெளிக்கும் விந்தை..!!

காதலின் நிலையை கண்டேன்,
என் நிலை சுயமாய் தெளிந்தேன்,
எவளுக்கோ என்னுயிர் கரைந்து
காதல் சுனாமியில் மூழ்கும் முன்
தப்பி பிழைத்து தடம் கண்டேன்..!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

* என் கண்ணீரில் அவள் புன்னகை *மின் அதிர்வை தாங்க முடிந்த என்னால் ஏனோ உன் விரல் என்னுள் தீண்டியதை தாங்க முடிய வில்லை...
சூரிய ஒளியை நேராக பார்த்த என்னால் ஏனோ உன் விழி அலையை பார்க்க முடிய வில்லை..
மலரின் இனிமை வாசத்தை அறிந்த என்னால் ஏனோ என்னால் உன் பெண்மை வாசத்தை நுகர முடிய வில்லை...
பயணங்கள் பல தொடர்ந்த என்னால் ஏனோ உன் பாத சுவடுகளை தொடர முடியவில்லை...
என்னவளே நீ என் நினைவில் வந்து உரையாடியதை விட , கனவில் வந்து உரையாடியது தான்அதிகம்...
அது தான் என் வாழ்வின் வசந்தம்...
காரணம்...

" தேவதைகள் நினைவில் வருவதை விட கனவில் தான் அதிகம் வருவார்கள் என்று என்னவளே முன்பு ஒரு நாள் நீ என்னிடத்தில் சொல்லி இருந்ததால் "...

* என் கண்ணீரில் அவள் புன்னகை *


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஹைக்கூ கவிதைகள்பார்க்காதே என்றாய்
கண்களை மூடினேன்
பேசாதே என்றாய் வாயை மூடினேன்
நினைக்காதே என்றாய்
மனதை மூடினேன்
உள்ளே நீ மாட்டிக்கொண்டாய்.

எப்பூடி???


கவிதைகள் உலகம் ..smdsafa..

கல்விச்சாலை
கண்ணிற்கு எட்டியும்
கனவாகவே..

வாழ்க்கை
பாடசாலையில்
தினந்தோறும்
மூன்றுவேளையும் தேர்வு
பசி..

ஒருவேளையாவது தேர்ச்சிபெற
உழைத்தபடி...


கவிதைகள் உலகம் ..smdsafa..

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் 6848555


ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்கள்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
வெறுப்புகள், போன்றவையும் கூடுகிறது...,
அவைகளெல்லாம்
உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேன்.
***********************************


உன் பிறந்த நாளில்
உனக்கு பரிசளிக்க
ரோஜாவைப் பறிக்க சென்றேன்...,
மலர்ந்த அந்த ரோஜாவுக்காக
மலருமென்னை பறிக்காதே என்றது ..,
********************************

கவிதைகள் உலகம் ..smdsafa..

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் சில 9557


 அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே..
****************************


குறிஞ்சி பூப்பது
பனிரெண்டு வருடத்திருக்கு
ஒரு முறைதானாம் ..,
யார் சொன்னது????
வருடத்திற்கு ஒருமுறை
பூக்கிறது
உன் பிறந்த நாளாக!!!
************************

புத்தம் புது நாள்...,
புத்தம் புது வருடம்...,
புத்தம் புது வாழ்க்கை...,
எல்லா சோகங்களும்,,
கஷ்டங்களும்..,
கரைந்துவிட ...,
இனி....,
உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி மட்டுமே
பொங்குவதற்கு...,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

****************************

பறவை பறப்பதை மறக்கலாம்,
ரோஜா பூப்பதை மறக்கலாம்,
ஏன் பூமி
சுற்றுவதைக் கூட மறக்கலாம்..,
ஆனால் ...,
உன், பிறந்த நாளை
எப்படி என்னால் மறக்க முடியும்??!!!...,
ஏனெனில்...,
.
.
.
போன வருஷம் ட்ரீட் தரேன்னு
டிமிக்கி குடுத்திட்டியே அதான்.

**************************

நிலவைக் காட்டி
தாய்தான் சோறு ஊட்டுவாள்
ஆனால்,
இங்கு அந்த நிலவே
birthday cake ஊட்டுகிறது.
*************************
கவிதைகள் உலகம் ..smdsafa..

பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்


இன்று மலர்ந்த
கோடானுக் கோடி மலர்கள்
சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்..,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
********************************

உன் பிறந்த நாளை
பார்த்து மற்ற நாட்கள்
பொறாமைப்படுகின்றன??!!!..
பிறந்து இருந்தால்
உன் பிறந்த நாளாகத் தான்
பிறந்து இருக்க வேண்டும் என்று ..
*****************************

365 நாள் சுற்றுப்பயணத்தில்
உங்கள் பிறந்த நாள்
அந்த இனிய நாள்
இன்றுதான்...,
Enjoy the journey....,
Happy birthday to U
*************************

இன்று உனக்கு
பிறந்த நாள் இல்லை..,
இந்த பூமிக்கு
தேவதை ஒன்று
இறங்கி வந்த நாள்!!
***************************


உனக்கு வாழ்த்து சொல்ல
புதிதாய் பிறந்தது
நீயா இல்லை நானா?
உன்னை வாழ்த்த
புதிதாய் யோசித்து, யோசித்து
நானே புதியதாய் மாறிப்போனேன்.
யோசித்து, யோசித்தும்
பிறக்கவில்லை கவிதை??...,
புதியதாய் இன்று
பிறந்த நீயே
கவிதைதானே எனக்கு.
*************************கவிதைகள் உலகம் ..smdsafa..

பிறந்தநாள் கவிதைகள்


இன்று
சுரியனும் நிலவும்
சன்டைஇட்டது
யார் முதலில் உனக்கு
வாழத்துச
சொல்வதென்று !....

பாவம்
அவைகளுக்கு தெரீயாது
நான் தான் உனக்கு
முதலில் வாழத்துச
சொல்வேன் என்று !.....

ஏனென்றஆல்
நான் காலையில்
தோன்றும் சுரியனும் அல்ல!...
இரவில்
தோன்றும் நிலவும் அல்ல!...
எப்பொழுதும்
உன் இதயம்
சுவாசிக்கும்
முச்சுக் காற்று !......

கவிதைகள் உலகம் ..smdsafa..

ஆசைபை நிறைய ஆசையோடு
பயணம் செய்கிறேன்
நான் இறங்க வேண்டிய
பேருந்து நிறுத்தம்
உன் இதயம் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நிழலே போதும்..


நான் மாறும்போது தானும் மாறியும்,
 நான் தலையசைக்கும் போது
 தானும் தலையசைக்கும்
நண்பன் எனக்குத் தேவையில்லை.

அதற்கு என் நிழலே போதும்..

கவிதைகள் உலகம் ..smdsafa..

என்னை அழ வைத்தாய் நீபெற்றவளை அழ வைத்தேன்
பிரசவத்தில் பாசதந்தையை அழ
வைத்தேன் பிடிவாதத்தில்
அழகு தோழியை அழ வைத்தேன்
பிரிவில்
இத்தனை பாவங்களை செய்த
என்னை அழ வைத்தாய் நீ யாருக்கும்
தெரியாமல் மனதிற்குள் .....


கவிதைகள் உலகம் ..smdsafa..

என்னை எழுதிய கவிதை நீஉன்னோடு பேசும்
ஒரு நிமிடம்
போதும்
கண்களின் கண்ணீர் ஆறும்
மனதின் காயங்களும்
ஆறும்…
நீ சிரிக்கும்
ஒவ்வொரு
வினாடியும்
நான் உன் அருகில்
இருப்பேன்
உன் சிரிப்பை ரசிக்க…
நீ அழும் ஒவ்வொரு
வினாடியும்
நான் உன் முன்னால்
இருப்பேன்
உன் கண்ணீரை துடைக்க…
நான்
எழுதிய
கவிதைகள் பல…
என்னை எழுதிய
கவிதை நீ மட்டுமே… !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

அம்மாஅம்மா நீ நல்ல முன்னெழுத்தும்
முகவரியும் போட வேண்டும்
என்பதற்காக முந்தானையால்
அடிவயிற்றில் மறைத்து வைத்து
பெற்றெடுத்து என்னை
முன்னெழுத்தே தெரியாமல்
அலையவிட்டுவிட்டாயே,,,,!

கண் எதிரே நீ தெரிந்தும்
என் தாய் தான் என்று
நான் உணர்ந்தும் அம்மா என
உன்னை அழைக்க முடியாத
நிலையில் அனாதையாய்
பிச்சை வேண்டி அம்மா
தாயே என்று அழைத்தேனே,,,,,!

துவாரக யுகத்தில்
கொடை வள்ளல் கர்ணன்
தளபதி படத்தில் சூப்பர்
ஸ்டார் ரஜனி காந்த்
கலியுகத்தில் நவநாகரீக
நளின நங்கையால்
நானும் தந்தை தாய்
அறியாத உன் பிள்ளையா,,,,, !

குந்தி தேவிகளே உங்கள்
மந்திர ஞாலங்கள் மறையட்டும்
கிணறுகளிலும் குளங்களிலும்
குப்பை தொட்டிகளிலும்
உங்கள் குழந்தைகள் அநாதரவாய்
உறங்குவது இனி குறையட்டும் !

அம்மா என்ற வார்த்தையின்
உள்ளார்ந்த அர்த்தத்தை
அகில உலகமே போற்றட்டும்
அணைக்கும் கரங்களே
கருணை உள்ளங்களே
குழந்தைகள் கண்
கண்ட தெய்வம் நீங்களே,,,,


கவிதைகள் உலகம் ..smdsafa..

வராதேஎவ்வளவு தூரம் முடியுமோ?
அவ்வளவு தூரம் வெறுக்கிறேன் !
இனி வராதே !
என் வழியிலும் வாழ்க்கையிலும் !
என்று சொல்லத்தான் ஆசை !
எனை பிரிந்து நீ தனியாய் திரியும்,
எல்லா மணித்துளியிலும் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

தேவதை வாசம்நான்,
தேவதையோடு பலகித்தொலைத்து,
தெருவெல்லாம் தேடியலைந்தவன் !
சத்தியமாய்த் தெரியாது !
அவர்களுக்கு !
இங்கே வந்துபோகமட்டுமே உரிமை !
வாழ்வதற்கு அல்ல என்று !
காதலில் கதகளி ஆடியது எனது தவறே !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

மனப்பரப்புகாயப்படுத்தினாய் !
என் கடற்பரப்பை !
உன் கொடூர கொந்தளிப்பால் !
மண்டியிட்டு சரிந்தேன் மனது கனத்து !
தலைதடவி ஆறுதல் சொன்னது !
சில சின்னச்சின்ன அலைகள் !
அதுவெல்லாம் மூழ்கடித்தது எனை !
நீ என்னை முகர்ந்து தந்த முத்தங்களின் சாயலில் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் விழியால்உன் வலிகளை,
நீ தனிமையில் விவரித்தபோது,
என் விழிகள் பழுதுபட்டது !
அங்கே !
மொழிகள் பெரிதாய் உதவவில்லை !
என் ஆறுதலையும் அரவணைப்பையும்,
அன்பாய் வெளிப்படுத்த !
மாறாய் மதகுடைத்த வெள்ளமாய்,
நான் மனதுக்குள் அழத்தொடங்கியிருந்தேன் !


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் கல்லறையில்மனத்தால் உனைத்தாங்கி
கவிதையாய் தாலாட்டி
நீ உறங்க கண்விழிப்பேன்
தினம்தோறும் உன்னை காதலிப்பேன்
என் கல்லறையில் எழுதி வைப்பேன்
காதல் சுகமானது என்று.!! -காதலுடன்


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் நட்புசொல்ல முடியாத ஒர் உணர்வு !
ஊவமை சொல்ல முடியாத கவிதை !
நமக்காக துடிக்கும் ஒர் உயிர் !
கனவுகளை நனவாக்கும் ஒர் நவீனம் !
உறவுகள் இல்லாத உறவு !
ரத்தபந்தங்கள் இல்லாத சொந்தம் !
வானத்து நட்சத்திரம் !
பொறாமை இல்லாத உயிர் !
அனாதை என்ற வார்த்தையை அழிக்கும் உயிர் !
எனக்காக கடவுள் கொடுத்த இன்னொரு உயிர் !

என் நட்பு. . . .            - கவிதைகள் உலகம்..


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ எழுதுவதற்காகவேபெண்ணே..!!

நீ ஒரு எழுதுகோல்…
நான் ஒரு தாள்…!!

எதையேனும் எழுது
உன் இதயத்தால்…!!!

நீ எழுதுவதற்காகவே…
வெறுமையாயிருக்கிறது
என் இதயத் தாள்…!!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

அழகில் இல்லை காதல் என்றவள்[நா(ன்) என்ன அழகாவா இருக்கேன்

என்ன போய் காதலிக்கறே

என்று கேட்ட காதலனுக்கு

காதலி சொன்னது…]

அழியும் அழகில்
இல்லை காதல்...

அழியாத அன்பில்
இருக்கிறது காதல் என்று...

இன்று உன்னிடம் பேச துடிக்கும் என்னை
வெறுப்பாய் பார்ப்பது ஏனடி?? -ஷபா!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

பிரியாதவைபிரிந்திருக்கிற நேரத்தை,
உணர்ந்தறிவது கடினம் !
வலுவாய் வளர்ந்துவிட்டது,
ஒருவர்மேல் ஒருவருக்கான காதல் !
மேலும் !
இவர்களை பிரிப்பது பாவத்தைக்கூட,
கொணர்ந்து சேர்க்கும் !
பேசாமல் சிதைக்காமல் விட்டுவிடலாமே !
இந்த சிட்டுக்குருவிக்கூட்டை !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் கவிதைகள்=========================
நம் காதல் உயர்ந்ததற்கு
உன் பார்வைதான்,
ஏணி-படி..!!

இப்போது உன் பார்வை
வேறுபக்கம் சாய்கிறதே
ஏனிப்படி..?
=========================

=========================
உன் பார்வை மழையை
யாசிக்கும் நான் ஒரு
தாவரம்…!!! 

உன் பார்வையில்
தினமும் நனைய
எனக்குத் 
தா-வரம்…!!! 
=========================


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் சீண்டலின்றி தவிக்கும்நீ மீட்டுவாய் என்பதற்காகவே
கவிதை எழுதுவது போல் நடித்துக் கொண்டிருக்கின்றன
என் விரல்கள்

உன் சீண்டலின்றி தவிக்கும்
என் கவிதைகளுக்காகவேனும்
சீண்டிச் செல்லடா
என் பேனா முனையை..


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் சீண்டலின்றி தவிக்கும்நீ மீட்டுவாய் என்பதற்காகவே
கவிதை எழுதுவது போல் நடித்துக் கொண்டிருக்கின்றன
என் விரல்கள்

உன் சீண்டலின்றி தவிக்கும்
என் கவிதைகளுக்காகவேனும்
சீண்டிச் செல்லடா
என் பேனா முனையை..


கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் உன்னை தொலைக்கவில்லைநீ பிரிந்ததால்

நான் உன்னை தொலைக்கவில்லை

நீ என்னுள்

தொடர்கிறாய் கவிதையாக !!!!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

எனக்காக நீ - உனக்காக நான்ஆசைதான் அதிகமானால்
அங்கம்தான் புனிதமாகும்
தேகங்களின் கூடலிலே
மோகத்தால் மூச்சடைக்கும்

ஆடையே பாரமாக
அச்சமோ தூரம் போக
அனைத்தவளே ஆடையாக
அவள் இதழ் எனை ஈரமாக்க

ஐந்தடி உடல்மூலம்
அகிலத்தை ரசித்தேன்
அழகிய இதழ்களிலே
அமுதத்தை ருசித்தேன்

போதும் என்று சொல்லி நடித்தாள்
போகசொல்லி அனைத்தேபிடித்தாள்

நீ தொடத்தான் நான் பிறந்தேன்
நான் தொடத்தான் நீ பிறந்தாய்
நாம் தொட்டோம் யார் பிறப்போ?
_ எங்கோ படித்ததில் ரசித்தது


கவிதைகள் உலகம் ..smdsafa..

திருட்டு நிலாவும்,திருந்தாத சூரியனும்உனக்காக உயிர் நோக
கடலோரம் நான் நின்ற நேரம்,
நிலவொன்று நிஜமாகி
உன்னை தேடி வழி கேட்க,
பொய் சொல்ல தெரியாமல்
உன் முகவரி தந்து விட
பொல்லாத அந்த நிலவோ
உன்னழகு திருடி போகுமென
கனவில் கூட நான் நினைக்கவில்லை..!!

கேட்டவுடன் உன் அழகை
நிலவுக்கு தருவாய் என
எனக்கு தெரிந்திருந்தால்,
நிலவை மிரட்டி எனக்காக
இன்னும் ஏழெட்டு நிலவுகள்
படைத்திருப்பேன்..!!!

சதிகார அந்நிலவு இப்படி செய்யுமென
நீயும் எதிர்பார்த்திருக்க மாட்டாய்..!!
ஆம் அந்நிலவு சூரியனிடம்
உன்னை பற்றி சொல்ல
சூரியனும் பகல் மறந்து
கிளம்பி வருகிறான்
உன்னிடம் அழகை திருடி செல்ல...!!

இப்படியே போனால் எல்லா
நட்சத்திரங்களுக்கும் உன் முகவரி
நான் தர வேண்டியிருக்கும்..!!
என்னை மன்னித்துவிடு
உன் முகவரி தேடி நானும் வருகிறேன்
உன் அழகை திருடி செல்ல அல்ல,
உன்னை நட்சத்திரங்களிடமிருந்து காக்க..!!!

fb.com/kavithaigalulagam


கவிதைகள் உலகம் ..smdsafa..

அனைத்தும் உன்னால்எனக்குள் ஒரு வசந்தம்

உன் வரவு,

எனக்குள் ஒரு மாற்றம் 

உன் நினைவு,

எனக்குள் ஒரு இன்பம் 

உன் உறவு,

எனக்குள் ஒரு துன்பம் 

உன் பிரிவு....


கவிதைகள் உலகம் ..smdsafa..

என்ன செய்வேன் என் மனதை


ஒடிக்க முடிந்தால்
ஒடித்திருப்பேன்
அழிக்க முடிந்தால்
அழித்திருப்பேன்
அறுக்க முடிந்தால்
அறுத்திருப்பேன்
வெட்ட முடிந்தால்
வெட்டி இருப்பேன்
ஆனால்
என்ன செய்வேன்
உன்னையே நினைத்து
ஏங்கும் என் மனதை
உன்னைப் போலவே
ஒளிந்து விளையாடுகிறது
என்னிடம்...


கவிதைகள் உலகம் ..smdsafa..

புதைவதும் ஆனந்தமே


அனைவரையும் வெறுத்த நீ
என்னை மட்டும் வைத்தாய் உன் இதயத்துக்குள்..

இன்று அத்தனை பேரின் முன்னிலும்
என்னை மட்டும் வெறுத்து புதைக்கிறாய்
                                                    அதே உன் இதயத்துக்குள்..

புதைவதும் ஆனந்தமே..
                   உன் இதயத்தினுள் தானே, பரவாயில்லை.. ‎#smdsafa


கவிதைகள் உலகம் ..smdsafa..

சந்திரகிரகணம்


சந்திரகிரகணத்திற்கு,

விஞ்ஞானம் ஏதோ

விளக்கம் சொல்கிறது..!!!

ஆனால்,

என்னைப் பொறுத்தவரை

உன்னை எது மறைத்தாலும்,

எனக்கு சந்திரகிரகணம் தான்…!!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

தனிமை - நானும் நிலாவும்இரவு பேருந்து பயணம்
நிலவும் என்னை போல் தனிமையில்
என்னோடு சேர்ந்து அதுவும் பயணிக்கிறது
விட்டு சென்ற தன் துணையைத் தேடியோ
அதை சுற்றி சொந்தங்களாய் பல நட்சத்திரங்கள்
இருந்தாலும்.. -பாத்திமா..


கவிதைகள் உலகம் ..smdsafa..

நிறம் : காதலின் வகைநினைவுக்கு ஆறு நிறம் !
அதன் ஒவ்வொன்றிலும்,
நீ அழகாய் பூத்திருந்தாய் !
உன் நிழலுக்கோ நூறு நிறம் !
அதன் அசைவுகள் எதையும்,
கணிக்கவே இயலுவதில்லை !
அது ஏனெனச்சொல்?
நிழலின் நிறம் கருப்பு என்பதா,..?


கவிதைகள் உலகம் ..smdsafa..

தொலைந்த பெற்றோரைத்தேடி...விரைவு இரயில்கள் போல்
விரைந்திடும் மனிதர்கள்..
நடைமேடையில்
நகரமுடியாத மனிதன்..

உரக்க ஒலிக்கும்
அறிவிப்புகளுக்கு மத்தியில்
அடங்கி போகும் அவன் பசிக்குரல்..

தொலையாத இரக்கம் கொண்டு
இருக்கும் உணவை அவனுக்கு தந்து
கடந்த இரயிலில்
தொலைந்த பெற்றோரைத்தேடி...
கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ நிலாநீரில் விழுந்த நிலா !
என் நினைவில் விழுந்த நீ !!
நீர் கலங்கினால் கலைந்துவிடும் அது !
நீ கலங்கினால் கலைந்துவிடுவேன் நான் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

தனிமைஎல்லா அவமானங்களிலும்,
துணைக்கு வருகிறது தனிமை !
நாம்தான் எதுவாவது எவராவது,
துணைக்கு கிடைத்துவிட்டால்,
அதற்கு துரோகம்செய்து இடம் பெயர்கிறோம் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

மாற்றம்வீரனாகத்தான் அறியப்பட்டேன் !
எனக்கு நானே !
நினைவுதெரிந்த நாள்தொட்டு !
விளைவு அறியாமல்,
உன் விழிகளுடன் போரிட்டு !
தோற்றுபோய் விவேகியானேன் !
வேகங்கள் வேகமாய் குறைந்து !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதலர்மரணம் அடிக்கடி தொட்டுப்பார்க்கிற,
முகடு காதல் !
அதன் அடிவாரத்தில் எப்போதும்,
துள்ளிவிளையாடி துவண்டு தளர்ந்து,
பொழுது கழிக்கும் மழலைகள் காதலர்கள் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீயும் நானும்நீ எனை சாடி,
ஊருக்குள் விலகிச்சென்றவள் !
நான் உனை தேடி,
உயிருக்குள் உலவச்சென்றவன் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

குத்தல்கள்கதவு ஜன்னல்கள் மூடியிருக்கும்போதும்,
உள்ளே நுழைந்துவிடும் கொசுக்களைப்போல,
எந்தத்தனிமையிலும் புகுந்து கடிக்கிறது !
ஓய்வெடுக்கவிடாத,
உன் ஞாபகக்கூர்மைக்குத்தல்கள் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

அடையாளம்உயிருக்குச் சொல்லிக்கொடுத்தேன்,
அதன் உருவம் நீயென்று !
உணர்ந்துகொண்ட அது,
தேடத் துவங்கியது உன்னை !
உனக்குள் நிரந்தரமாய் அடைந்துவிடலாம்,
அடக்கமாகிறவரை என்று !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

சுற்றம்நான் தேடும் முகவரி எல்லாம்
உன் இதயம் மட்டும்தான்
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே...பழிவாங்கப் புறப்பட்டவனின் விழிகளில்,
கொஞ்சம் ஒளிந்திருந்தது ஈரம் !
ஆனாலும் அது எப்போதும்,
அக்கினிக்குளம்பாய் கனன்றுகொண்டே !
நிலையுணர்ந்து அதை தணிக்க யோசிக்காமல்,
தீக்கங்குகளை அள்ளிப்போட்டுக்கொண்டே !
தவறாமல் உறவுக்கழுகுகள் !
அவனையே பலிகொடுக்க !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ தரும் முகவரிநான் தேடும் முகவரி எல்லாம்
உன் இதயம் மட்டும்தான்
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே...


கவிதைகள் உலகம் ..smdsafa..

அம்மாஅம்மா.... நான் எட்டி உதைத்தும் கூட 

முதல் பார்வையிலே என்னை 

கட்டியைணைத்தவள் நீ மட்டும் தான்...

கவிதைகள் உலகம் ..smdsafa..

கவிதைகள் உலகம் சோகம் காதல் 325

கவிதைகள் உலகம் ..smdsafa..

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;