தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

கைரேகை அவள்


அழிக்க முயன்றேன்
அவள் நினைவுகளை
கண்ணீர் விட்டு அழிக்க முயன்றேன்,
பின் தான் அறிந்தேன்...
கண்ணீர் விட்டு அழிக்க
அவள் நினைவுகள் கையில் தீட்டிய
ஓவியம் இல்லை..
என் கைகளில் ஓடும் ரேகை என்று..
என் காலம் வரை என்னுள்..


கவிதைகள் உலகம் ..smd safa..

என் உறவே நீ எங்கே????


பாவை உன்னை பார்த்த பின்னே பார்வையையே நான் இழந்தேன்!
பாவமென தெரிந்த பின்னும் பாவி உன்னை நினைத்து விட்டேன்!!
பாதையிலே போகயிலே பாதி உயிர் நான் இழந்தேன்!!!
மீதி உயிர் போகும் முன்னே மீண்டும் நீ வந்துவிடு!!!


கவிதைகள் உலகம் ..smd safa..

கோலம


கலைக்கபடும் எனத் தெரிந்தும்
கவனமாக போடப்படுகிறது
                ..கோலம்..


கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் வருகைக்காக


பாலை வனமாய் இருந்த
என் வாழ்வை
சோலை வனமாக்க
மழை பெய்தது போல்
விழுந்த மழைத்துளிகள்
என் நண்பர்கள் நண்பிகள்
என்றும் இந்த சோலை
உங்கள் வரவிற்காய்
எதிர் பார்த்து காத்திருக்கும்


கவிதைகள் உலகம் ..smd safa..

சண்டே கவிதை


நாளை மதியம்
என்னை இம்சிக்கும்
இன்று மதியம்
உன்னைக் கட்டிபிடித்து
உறங்கியது ..

நாளை மதியம்
என்னை இம்சிக்கும்
இன்று உன் முந்தானையில்

கடல்


வரை முறையன்றி
எங்கும் வியாப்பித்து
விரிந்து நிற்கும்
கடல்

இதன்
அகலத்தையும் ஆழத்தையும்
இன்னும் அறிந்தவர் யாருமில்லை

மெழுகென உருகுது என் காதல்


மெழுகென உருகுது
என் காதல் நெஞ்சம்
அதில் திரியேனே எரிவது
என் நினைவே
அதில் ஒளியேனே தெரிவது
உன் நினைவோ !!!
என்னை கரைப்பது
உன் காதல் தான்
முடிவென்ன மரணமா ????


கவிதைகள் உலகம் ..smd safa..

தலை எழுத்து


காதல் என்பது...
ஒவ்வொரு மனிதனின்
தலை எழுத்தில் இருக்கும் எழுத்து பிழை...!
விலகவும் முடியாது
விளக்கவும் முடியாது..கவிதைகள் உலகம் ..smd safa..

காதலின் ஆழம்


வார்த்தையில் காட்டிய கோபத்தின்
ஆழம் தெரிந்த உனக்கு. .

உன் மனதிற்குள் இருக்கும் என்
காதலின் ஆழம் தெரியவில்லையே..


கவிதைகள் உலகம் ..smd safa..

சொந்தங்களே....


சொந்தங்களிடம்
சொல்லிக்கொள்ள
முடியாமல்..... சொந்தம்
ஒன்றை
தேடிக்கொண்டேன்.....!

நாள் எல்லாம்
உன் நினைவுதான்
அது அவள் பேச்சு.....
என் காதில்
பலபொழுது விழுந்துச்சு......!

காற்றில் எழுதுகிறேன்


உனக்காய்
எழுதும் கவிதைகளை
இரக்கமின்றி -நீ
கிழிப்பதினால்
இப்போதெல்லாம்...
காற்றில் எழுதுகிறேன்
கண்டிப்பாய் நீ
சுவாசிப்பாய் எனும்
நப்பாசையில்


கவிதைகள் உலகம் ..smd safa..

செருப்பு


வீட்டுக்குள் சேர்க்கும் உறவுகளை விட
வாசலோடு வைத்திருக்கும் செருப்பு
கிழியும் வரை நமக்காக உழைக்கிறது


கவிதைகள் உலகம் ..smd safa..

உன்னோடு வருகிறேன்


குழந்தைகளோடு விளையாடுவதன்றால்
கொள்ளை பிரியம் உனக்கு!...
உங்கள் விளையாட்டில் என்னையும்
சேர்த்துக்கொள்ளச் சொன்னால்
முறைக்கிறாய் நீ!


கவிதைகள் உலகம் ..smd safa..

என் கவிதை


என் கவிதைக்கு வலி அதிகம்
என் வார்த்தைக்கு வலி அதிகம்
என் கவிதை காகிதத்தில் ஓர் ஓடம்
என் கவிதை ஓர் இளம் விதவையின் குமுறல்
என் கவிதை ஓர் முடவனின் வேண்டுதல்
என் கவிதை ஓர் குழந்தையின் அழுகை
இரவினில் கண் விளித்து காத்து கொண்டிருக்கிறேன்
நீ கவிதையாக வருவாய் என்று..


கவிதைகள் உலகம் ..smd safa..

நீ - நான்


உனக்குள் என் நினைவும்
எனக்குள் உன் நினைவும்
இருக்கும் வரை...


சத்தியமா சொல்றேன்.,

நீயும் உருப்பட மாட்ட
         - நானும் உருப்பட மாட்டேன்கவிதைகள் உலகம் ..smd safa..

மனித வாழ்க்கை


தோல்வியை கண்டு துவளாதே வாழ்க்கையில்
சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது.....
தோல்வி காண்பதே வாழ்க்கை அல்ல
அதையும் வெற்றியாக்குவதுதான் வாழ்க்கை.....
இளமை என்பது இலைசருகுபோல
இளமை போனால் திரும்ப வராது.....

காலை கவிதை


நடப்பை பற்றி எழுதுவதா !!
இல்லை காதலை பற்றி எழுதுவதா!!
என்னுள் ஒரு போராட்டம் !!
காதல்
என் கற்பனையில்
கலந்து கவிதையானது !!
என் ஐம்புலன்களையும் அடக்கி
ஜடமக்கியது !!
நட்ப்பு
என் குருதியில் கலந்து
எனக்கு உயீர் உட்டியது..


கவிதைகள் உலகம் ..smd safa..

அம்மா


அன்னையின் கண்ணீரைத்துடைக்கும் மழலை.....!
அம்மா.....!

கையில்லாத உனக்காக
கைகளோடு நான் பிறந்தேன்..!

நிலா சோறு எனக்கூட்ட
நீ ஏங்கி வருந்தாதே....!
உனக்காக சோறு ஊட்டவே - நான்
வரம் வாங்கிப் பிறந்தேனே...!

விஷம்


பாம்பில் விஷம்
நாய்ப் பல்லில் விஷம்
தேள் கொடுக்கில் விஷம்
பூச்சிக் கொல்லி மருந்தில் விஷம்
நீர் கொடுக்கும் அணையிலுமா விஷம் ???
பகைமை மற !!! பகிர்ந்தளி !!! பண்பாளியாகு !!!


கவிதைகள் உலகம் ..smd safa..

அன்பு - காதல்

எனக்கும் சேர்த்து
அழகாய் இருக்கிறாய் நீ!

உனக்கும் சேர்த்து
அன்பாய் இருக்கிறேன் நான்!

கவிதைகள் உலகம் ..smd safa..

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;