நீ தந்த கடிதங்களை
நிலவொளியில் இருந்து
விடியும்வரை
படித்துப்பார்க்கிறேன்...!
கொட்டும் அருவியின்
அருகில் அமர்ந்து,
நீ சிரிப்பதாய் நினைத்து
நானும் சிரித்துக்கொள்கிறேன்...!
உயிருள்ளவரை - என்
உயிர்துடிப்பு நீ என
கவிதை எழுதியே
காலந்தள்ளுகிறேன்...!
வருடந்தோறும் வந்துபோகும்
காதலர் தினத்தில்,
நீ தந்துபோன பரிசுகளை
தினம் தினம்
விரல்களால் உரசிப்பார்க்கிறேன்...!
நம் காலடிப்பட்டு
கடற்கரை மணல் கருத்தரித்த
காலடிச்சுவடுகளை
தேடிப்போகிறேன்...!
இருவரும் இணைந்துநின்று,
இதழ்களால் புன்னைகைத்து,
புகைப்படமாய் என்
பழைய புத்தகத்திலிருக்கும்
நம்மை உற்றுநோக்குகிறேன்...!
என்னில் நீ
இதழ்பதித்த இடங்களின்
ஈரங்களை தேடிப்பார்க்கிறேன்...!
பெண்ணே...!
இனியென்ன நான் செய்ய...?
இன்னொருவனுக்கு நீ
மனைவியான பின்பு... Via : Kavithaigal Ulagam கவிதைகள் உலகம்
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
இருளில் இருந்த என்னை ஒளி காண செய்தவள் அவள் ; என்னை முதல் முதலில் காதல் செய்த வளும் அவளே ; இன்று வரை என்மேல் அக்கறை கொண்டு நடப்பவள...
-
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய். நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திரு...
-
"ஒளிந்துகொள்ள இடமா இல்லை இவ்வுலகில்! இருந்தும் மனிதன் ஏன் காதல் வயபடுகிறான்., என்றெலாம் தத்துவம் பேசி திரிந்தே...
