தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

கவிதை


என் கவிதைய நேசித்தவள்
என் காதலை நேசிக்கவில்லை

என் சுவாசமே நீ தான்
நீ சுவாசிக்க மறந்தால் நான் மரணித்து விடுவேன்

என் கவிதையே என்னவளிடம் போய் சொல்
நீ இல்லாமல் அவன் கவிதை கூட அழகில்லை என்று


கவிதைகள் உலகம் ..smd safa..

தகுதி


எனக்கு அழகு இல்லை
எனக்கு படிப்பிலை

எனக்கு வசதியும் இல்லை
சொல்லிக்கொளுமளவுக்கு
உறவுகளும் இல்லை

தெரிந்து தான் காதலித்தாய்
நம் இருமனம் சேர்ந்து
ஒரு மனம் என்னும்

திருமணத்தில் சேரும் முன்
சொல்கிறாய் உனக்கு தகுதி
இல்லை என்று

உன் காதல் என்ன வியாபாரமா
என்ன விலை சொல்லடி (தகுதி தான் )

உன் அன்பு என்ன வெற்று காகிதமா
உன்னால் எப்படி முடிந்தது

நம் காதலுக்கு (அன்புக்கு )
விலை கோர நீ என்ன விலை மதுவோ


கவிதைகள் உலகம் ..smd safa..

என் காதல்


என் காதல்
கருவறையில் என் தாயை
காதலித்தேன்
சிறு பருவத்தில் என் உடன்
பிறப்புகளை காதலித்தேன்
என் இளமை பருவத்தில்
என் நண்பர்களை காதலித்தேன்
என் கவிதை
கருவறையில் தொடங்கி
கண்ணீரில் நனைந்து
தண்ணிரில் முழ்கி
கல்லறையில் முடிய
போகிறது
அதுவும் பெண்ணாலே..

கவிதைகள் உலகம் ..smd safa..

நினைவுகள்


நான் தவற விடவில்லை உன்னை
நீ தான் தவற விட்டு விட்டாய் என்னை
நான் உயீர் வாழ்வதே உன்
நினைவுகள் உள்ளதால் தான்
உன் தாய் உன்னை பத்து மாதம்
கருவில் சுமந்தாள்
நான் உன்னை ஒரு
தலை முறை முழுவதுமாய்
சுமந்து கொண்டு இருக்கிறேன்
உன் நினைவுகள் என்னுள்
வெடித்து சிதறும் எரிமலையாக..

கவிதைகள் உலகம் ..smd safa..

என் காதல்


பூவை காதலித்தேன்
அது வாடிவிடும் என்று தெரியாமல்
மழலைய காதலித்தேன்
அது மறந்து விடும் என்று தெரியாமல்
தீயை காதலித்தேன்
அது அணைந்து விடும் என்று தெரியாமல்
பணியை காதலித்தேன்
அது உருகி விடும் என்று தெரியாமல்
என் வாழ்க்கைய காதலித்தேன்
அது முடிந்து விடும் என்று தெரியாமல்
உன்னையும் காதலித்தேன்
நீ என்னை உருக்கி விடுவாய் என்று தெரியாமல்..

கவிதைகள் உலகம் ..smd safa..

மரணம்


கண்ணும் கண்ணும்
சந்தித்து கொண்டது
பேராபத்து நிகழ்ந்தது
கரணம் தப்பினால்
மரணம்
சாலையில் மட்டும் அல்ல
காதலிலும் தான்.

கவிதைகள் உலகம் ..smd safa..

பிறந்த நாள் வாழ்த்து


தாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும்,
சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும்,
வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும்,
பாடி வரும் குயிலே, உன்னை இசை வாழ்த்தும்,
பூத்து வரும் புன்னைகையே,
உன்னை என் அன்பு வாழ்த்தும்,

என்னில் கலந்து இருந்த கவிதையே,
உன்னை என் வரிகள் வாழ்த்தும்,
இன்று போல் என்றும் மகிழ்ச்சி பொங்க உன்னை என் இதயம் வாழ்த்தும் ............இதய கனிந்த பிறந்த நாள்" நல் வாழ்த்துகள்..

கவிதைகள் உலகம் ..smd safa..

உன் கால் தடம்

நான் தான் நிழல் என்று
தெரியாமல் என்னை உதறுகிறாய்
கண்ணே எங்கு செல்கிறாய் !!
உன் நிழல் போல் தொடருகிறேன் !!
உன் கால் சுவடு பற்றி கொண்டு
சிறு குழந்தை போல் தவிக்கின்றேன் !!
என் வாழ்க்கைக்கு முற்று புள்ளி
வைத்து விட்டு போகிறாய்!!!!

கவிதைகள் உலகம் ..smd safa..

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;