தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

நண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்

எப்போது ஒன்று சேர்வோம்?
எப்படி ஒன்று சேர்வோம்?
இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள்
இனிமேல் உமக்கு இல்லை!

உணர்வுகளால் நேற்றுவரை
உரையாடிய காதல்ஜோடி
இன்றிலிருந்து என்றென்றும்
உடலாலும் இணைகிறது!

உள்ளத்தில் நீர் சுமந்த
உண்மையான அன்பிற்காய்
திருவிழா செய்கின்றோம்!
திருமணமாம் உமக்கின்று!


இதயத்தின் உரசல்களில்
உருவான ஒளித் தீப்பிழம்பு
விண்வெளியில் பயணித்து
கண்மணிகள் கதைசொல்லும்!

முத்தான காதல் செய்தமணமக்கள்  ஓருயிராய்
வாழ்க பல்லாண்டு
0 comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook

Labels: திருமண வாழ்த்து கவிதைகள், நண்பனின் காதல் கல்யாண வாழ்த்து கவிதைகள்
திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை


சாத்திரங்கள் பழையன
சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே
சத்தியமாய்ப் புதியன


பஞ்சாங்கம் பார்ப்பது
பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே
அஞ்சாதோர் புதுவழி
குறையொன்றுமில்லை
மணமகன் உன்னிடம்
வரையாத ஓவியம்
இருக்குது பார் உன் இடம்
சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும்
உன்மனம்மணமகளின் சொத்தென
சொல்வதிந்த திருமணம்
வாழ்க நிவிர்
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்
என்றும் அழியாது உம் நற்புகழ்!
இங்கனம்- நட்புகள்கவிதைகள் உலகம் ..smd safa..

Google+ Followers

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;