தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

நான் மட்டும் தனியாக (ஒரு காதலனின் கண்ணீர்)




நாமிருவரும் சின்னஞ்சிறு வயதில், அம்மா-அப்பா விளையாட்டு விளையாடிய அதே மாந்தோப்பில்தான், நீ உன் அம்மாவின் சேலையைக் கிழித்து முதல் தாவணியும், நான் என் அப்பாவின் வேட்டியைக் மடித்து முதல் வேட்டியும் கட்டிக் கொண்டு, சந்தித்தோம் – பொங்கி வழிந்தக் கூச்சத்துடன், ஒரு திருவிழா நாளில்…

குனிந்த தலை நிமிராமல் நீ அப்போது சொன்னாய், ”இனிமே, நான் உன்ன ‘டா’ போட்டுக் கூப்பிட மாட்டேன்..” ♥

“ஏன் ?”

“மாட்டேன்னா… மாட்டேன்”

”அப்போ இனிமே நானும் உன்ன ‘டீ’ போட்டுக் கூப்பிடக் கூடாதா?”

“இல்லேல்ல… நீ கூப்பிடலாம்… கட்டிக்கப் போறவள பின்ன எப்டி கூப்டுவியாம்?” ♥ என்று சொல்லிக்கொண்டு, நாக்கைக் கடித்துக் கொண்டாய்.. உன் வெட்கத்தில், மாந்தோப்பில் இருந்த மாங்காய்களெல்லாம், சிவந்துப் போயின…

இன்னொரு அமாவாசை நாளில், என் அக்கா குழந்தைக்கு நான் சோறூட்டுகையில், நிலவைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தது குழந்தை… மாடியில் நின்றிருந்த உன்னைக் காட்டி, “அதோ பார்.. நிலா ♥ ” என்று குழந்தைக்கு நான் சோறூட்டியதைப் பார்த்துவிட்ட நீ, அடுத்த நாள் விடிந்தும் விடியாதப் பொழுதில், ஓடி வந்து என்னை முத்தமிட்டதும் அந்த மாந்தோப்பில் தான்… ♥

பிறிதொரு வருடத்தில் அதோ மாந்தோப்பில்தான், “என்னை மறந்துடு ” என்று அழுதாய்… அதோடு முடிந்துப் போனது எல்லாம்… 

இப்போது உன்னை ‘இந்தா’ என்று அழைக்க ஒரு கணவன் இருக்கிறான்…

’அம்மா’ என்று அழைக்க இரு குழந்தைகளும் இருக்கின்றனர்…

ஆனா,
“ஏண்டா கல்யாணம் வேணாங்கிற?” என்று கெஞ்சி அழும் என் அம்மாவுக்கு மட்டும் நான் மகனாயில்லை…


கவிதைகள் உலகம் ..smdsafa..

கவிதைத்துளிகள்



==============================

உன்னை அன்பாக 
தழுவ தான் முடியவில்லை 

ஒரு வாய்ப்பு கொடு பெண்ணே 
கவிதையால் வர்ணிக்க ....
==============================


==============================
கண்களால் வரைய 
படும் ஓவியம் கண்ணீர் ..

கண்ணீர் கொண்டு 
உருவாகும் காவியம் காதல் ..
==============================

=====================================
எங்கு போகிறாய் நண்பனே !!!
வாழ்க்கையின் வாசலை தேடியா !!
இல்லை வழுதிய வழிகளை தேடியா !!
இரண்டுமே நலம் தான் ..
நீ வழுதிய வழிகள் தான் 
உன் வாசலை திறக்கும் ..
=====================================

==========================
கண்ணாளனே 
நம் கனவுலக மழலைக்கு 
என்ன பெயர் தான் !!

கனவிலே கரையும் 
வாலிபதுக்கு 
கல்லறை தான் பெயரோ !!
==========================

================================
ரொம்ப நாள் ஆசை 
இப்படி எழுதனும்னு ....


குடி குடித்தவன் 
குடியை கெடுக்கும் ...

கூரை கூட இல்லாத 
குடியானவனுக்கு குடி எதற்கு 
அங்கே குடியானவன் காசில் 
மணி மண்டபம் மட மாளிகைகள் 
அவன் பிஞ்சு குழந்தைகளுக்கு 
கஞ்சி கூட இல்லை .......
நீ கற்றதும் கண்டதும் குடி தான் 
உன் குடியின் காரணமாக 
கெட்டது நீ மட்டும் அல்ல 
உன் தலைமுறையும் தான் 

குடிகார பயலே உனக்கு எதற்கு 
திருமணம் குழந்தை ஒரு கேடா ....
=================================

===========================
கவிதைகள் உலகம் ..smdsafa..
===========================

அந்தப்புரம்



உன் கூரிய நகங்கள் கூறிய வார்த்தைகள்,
கூனிக்குறுகிக்கிடக்கிறது தேகம் !
கூச்சம் மறந்து முற்றிய முனகல்களுடன் !
தீண்டாதே எனை இன்னொருமுறை !
இறப்பை தரிசித்து இங்கு திரும்புகிறேன் நான் !
காதலா !!
கட்டித்தழுவு அதற்காக !
ஒட்டி எடுக்கப்பார்க்காதே உயிரை !
உனக்காக வாழ்பவளை உடைத்து சில்லாக்குவது,
உனது கரங்கலன்றி வேறு எது?
என்னே நியதி இது?
தனியாய் சந்திக்கிறேன் பேர்வழி !
சதிகாரனாகிறாயே உன் உடமைக்கு நீயே?
தொடு மூழ்கடிக்காமல்..................
விடு சாகடிக்காமல்..


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் பிரிவில்



காதல் பிரிந்தால் கனத்தையும்,
நட்பு பிரிந்தால் ரணத்தையும்
தருமென்று 
கேள்விபட்டிருக்கிறேன்..

இதோ !

முதன்முறை இரண்டையும்
உன் பிரிவில்
அனுபவிக்கிறேன் ...!!

            I Miss you...


கவிதைகள் உலகம் ..smdsafa..



உனக்குத்தான் அன்பனே



உறக்கமில்லை விழிகளுக்கு,
நீ இரக்கமில்லாமல்
உதறிப்போனத்தில் !
தூக்கிஎறிவதும் துஷ்டவார்த்தைகள்
பிரயோகிப்பதும்,
ஆண்மையின் அடையாளங்கள் என எவர்
அறிவுறுத்தினர்?
வனத்திலிருந்து வந்தவர்
என்று இனம்கானமுடிகிறவர்,
எத்தனை எத்தனை பேர் இங்கே !
அழவைப்பதும் அலைகளிப்பதும்
அன்றாடவழக்கம் பலருக்கு,
பின் அவரையே தொழலவைக்கவேண்டி
மாய்ந்துகிடப்பது,
செயற்கையின் சிரிப்பு அல்லவா?
பெண் படைக்கிறவள்,
உன் உயிரை உடலென்னும் கூட்டுக்குள்
அடைக்கிறவள் !
நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்
அவர்க்கு நாம்,
ஆயுளின்
கடைசி மூச்சு பிரிகிறவரை !
அதையா நினைக்கிறாய் நீ?
அந்திவந்தால் சுந்தரியாகவும்,
விழித்தெழுந்தால்
செக்குமாடாகவும்,
மாற்றத்தானே முயல்கிறாய்
மதியாமல்?
நிமிடங்கள் போதும் அந்தப்பெருந்தீ
நம்மைச்சாம்பலாக்க !
உணராமலேயே கொடுங்கோலனாய்,
வாழ்ந்து சரியச் சம்மதமே நமக்கு !
வேதனைப்படுத்தாதே பெண்ணை !
சோதனைக்கு உள்ளாகும் உன்
சுயமரியாதை !
அடங்கிவாழ் அந்த அற்புத
படைப்பிற்கு !
எதுவும் குறைந்துபோய்விட­
ாது இங்கே !
எந்த உயிரின் உச்சபட்ச நிம்மதியும்
எதிலிருக்கிறது தெரியுமா?
காதலியாய் தாரமாய் தங்கையாய்,
தாயாய் தோழியாய் பாட்டியாய்,
மகளாய் மனுசியாய் நல்ல உறவாய்,
ஒரு பெண்
உனை உச்சிமுகர்வதில்தான் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;