உன் ரெட்டைப் பின்னல்
பார்த்த பின்பு
என் ஒற்றை மனது
தொலைந்ததடி
உன் கற்றைக் கூந்தல்
கருப்பு கண்டு
என் உச்சிக் கர்வம்
கலைந்ததடி
உன் வட்டப் பொட்டின்
தனிமை கண்டு
என் வசந்த காலம் தொடங்குதடி
உன் பத்து விரல்
நளினம் கண்டு
எனக்கு பத்து தலை
முளைக்குதடி
உன் ரெட்டைக் கண்
வேல்கள் குத்திக் குத்தி
என் கடும் மேனி எங்கும்
தழும்பாய் போனதடி
கவிதைகள் உலகம் ..smd safa..