தவறுகளின் நடமாட்டம்,
தனிமைகளின் உருவேற்றம்,
தாகம் வளர்த்தவனை,
துரோகியாக்கும் உதாசீனம் !
தோற்றுப்போன நிமிஷம் தோன்றும்,
துடிக்கும் வல்லூறுகள் உனக்குள் !
ஓடிச்சென்று அமர்ந்துகொள் நண்பர் குழுவுக்குள் !
தனித்து மருதளிக்காதே அந்நேரம் !
உன் எண்ணங்கள் உருவெடுக்கக்கூடும்,
துளைக்கும் துப்பாக்கி ரவையாய் !
பின் அழிக்கக்கூடும் உன் ஆன்மாவை பழியால் !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
வெளிப்படையாய் மறுத்து வெகுளியாய் நடித்து,
நீ எனை தூரவீசிப்போனது அனைவர்க்கும் தெரியும் !
அதையே காரணமாகக்கொண்டு,
என் காதலைக்கலைத்துவிடுவேன்,
என்று நினைத்தது உன் முட்டாள்தனம் !
பழகிய எனக்கு தெரியாதா உன் புத்தியின் நர்த்தனம்?
நானும் விலகினேன் உன் விலகலின் அடிதொட்டு !
காரணம் நாம் கண்ணிமைகளுக்குள் காத்துவளர்த்த காதல் !
அதுவே கழுத்தை நெரிக்காமல் கயமை பொருத்தாமல்,
சுதந்திரமாய் பறக்கவிடச்சொன்னது உனை எனைவிட்டு !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
வறண்ட நிலத்தின் வெடிப்புகள்,
தண்ணீர்கேட்டு தவம்கிடந்தது வானம்பார்த்து !
மழை வருமோ இல்லையோ ?
மனம் அழுதது அந்த அவலநிலம் பார்த்து !
எங்கோ எனக்குள் ஒரு ஜீவன் கெஞ்சிக்கூத்தாடியது !
ஆண்டவனே இறையே பிதாவே !
வறட்சிமட்டும் வேண்டாமே நாங்கள் வாழும் உலகுக்கு !
வெந்து சிதைகிறது எமை சுமக்கும் அன்னைமடி !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
இருளில் இருந்த என்னை ஒளி காண செய்தவள் அவள் ; என்னை முதல் முதலில் காதல் செய்த வளும் அவளே ; இன்று வரை என்மேல் அக்கறை கொண்டு நடப்பவள...
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
அவளில் சாய்வதற்காக சின்னதாய் ஒரு பொய் சொல்வேன் - "தலை வலி" உண்மையென நம்பி அவள் துடிக்கும் துடிப்பில் இருக்கும் உண்மை காதல்...
-
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ் ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று வாழ்நலம் வரம் பேற்று. இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி ந...