தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..
மௌனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மௌனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காதல் சோக கவிதைகள் சில



================================
நீ அருகில் இருந்தால் மலருவேன் 
இப்பொழுது பார் 
நீ தொலைவில் இருப்பதால் 
மடிகிறேன் என்னுளே..
================================

================================
தொலைகிறேன் என்னுளே 
தொலைக்கிறேன் 
என் இதயத்தை உன்னுளே..
================================

================================
என் கவிதைகள் 
கசக்கின்றது 
உன் இதழ்களால் 
வாசிக்க படாமல் ...
================================


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ தந்தது




கத்தியின்றி ரத்தமின்றி அழிக்கப்பட்டு விட்டனவோ
உன்னிடமிருந்த என் நினைவுகள் ?

ஆனால் நான் உன்னை நினைத்திருக்க
நீ தந்தது உன் மௌணம் மட்டுமே..... !


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஈர்க்கிறாய்



நீ பார்க்காத நேரங்களில் உன்னோடு,
பவனி வந்துகொண்டுதானிருன்தேன்,
உன் நிழலாய் !
நீ நினைக்காத நிமிடங்களில்,
உன்னோடுதானிருந்தேன்,
உன் தொண்டைக்குழியிறங்கும் எச்சிலாய் !
நீ தீண்டாத மணித்துளிகளில்,
உன்னோடுதானேயிருந்தேன்,
நரகமென எரியும் விரகமாய் !
நீ தூங்காத சமயங்களில்,
உன்னுடனேயே இருந்தேன்,
உன் உறக்கம் பறித்த சாபமாய் !
எனக்கோ..........................!!
எல்லாமுமாய் நீயிருந்தாய் எந்தநேரமும் !
ஐம்பூதங்களின் அர்த்தமாய் !
அதில் ஊசலாடிடும் அற்பமாய் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஐ மிஸ் யூ



உன் பாத சுவடு 

தேடியே என் 

வாழ்க்கை சுவடு 

அழிந்து கொண்டு 

இருக்கிறது ..



கவிதைகள் உலகம் ..smdsafa..

அன்புடையவளே



நீயாய் அழைக்கும்வரை,
நானாய் வரமாட்டேன் !
என்ற கர்வம் தலைதூக்கியிருந்தால்,
நீ யாரோ நான் யாரோ?
என்ற நிலை வந்திருக்கும் நம் உறவுக்கு !
நீ போனால் பின்னாலே வந்தும்,
நான் போனால் நானே தணிந்தும்,
வீண்போகாமல் காத்தேன் அன்பை !
அதனின்பால்,
நீ எந்தன் எல்லைகளுக்குள்,
நான் உந்தன் தொல்லைகளுக்குள் !
தெரிந்துகொள்ள உன் கவனத்திற்கு,
இங்கே குளிர்ந்தே கிடக்கிறது,
நம் காதலெனும் மோகவெளி !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

பார்வை



புத்தகத்தை

புரட்டும் போது

படமாக உள்ள

மொட்டும் மலரும்

அவள் விழிப் பார்வையில் !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் ரசித்தது


உலகில் ரசிக்க ஆயிரம் இருந்தும்

அனைத்தையும் மறந்து நான் ரசித்தது

உன்னோடு பேசிய
இனிமையான நாட்களை மட்டும் தான் ♥ ♥ ♥

கவிதைகள் உலகம் ..smdsafa

..

உன் மௌனத்தின் அர்த்தம்



நீ பேசும் வார்த்தை

எல்லோருக்கும் புரியும்.

 ஆனால்,

நீ பேசாத மெளனம்

உன்னை நேசிப்பவர்களுக்கு

 மட்டுமே புரியும்...


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஒரு வார்த்தையில் சாகடிக்க



நலம் என்றால் நாம்
தான் என்றவளே என்

உயிரை கயிறென கட்டி
இழுத்து சென்றவளே

எப்படி மனம் நோகாமல்
கேக்கிறாய் நலமா என்று

என்னை ஒரு வார்த்தையில்
சாகடிக்கவா !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

கடிதங்கள்

நான் உனக்கு அனுப்பும் கடிதங்களை

எல்லாம் எரித்து விடுகிறாய் பெண்ணே

அதில் கரிந்து போவது என் உயீர் என்று தெரியாமல்..

                                                                  கவிதைகள் உலகம் ..smd safa..

பிறப்பிடம்.


எல்லா தவறுகளையும் நீயே செய்துவிட்டு,
கடைசியாய் அருகேவந்து,
உன்னிடம் அனைத்தையும் இறக்கிவைத்துவிட்டேன்,
என் பாரமெல்லாம் குறைந்தது என்கிறாயே ?
இந்த சொல்லவொணா சுமைகளை எங்கு இறக்கட்டும் ?
காலம்முழுதும் கழுத்தை நெறிக்குமே இந்த கணம் ?
தாங்கவேண்டுமே நான் இதை தார்மீக ரகசியமாய் ?
என்னடி முடிவு என் மௌனச்சுமைகளுக்கு ?


கவிதைகள் உலகம் ..smd safa..

வாடும் ரோஜா

அந்த காலத்து நாம் நினைவுகளை நினைத்தேன் !
கடந்த காலங்களை நிகழ்வுகளை நினைத்து
பார்க்கையில் என்னுள் ஒருவித நெருடல்
நாம் கால் கடந்த தடங்களை தேடி சென்றேன்
அங்கு ஒரு அதிசயம் கண்டேன்
உன்னுருவம் பொறித்த சிலை ஒன்று கண்டேன்
என் வர்ணனையின் புன்னைகை
வாசம் அதில் விச கண்டேன்
காண்போரை வியக்க வைக்கும் உன்னழகு
கண்டு அதை வடிவமைத்தவனும்
மலைத்து போய் சிலையாக கண்டேன்
உன் நினைவு என்னும் தோட்டத்தில்
வாடும் இந்த பூவுக்கு வழி சொல் கண்ணே..


கவிதைகள் உலகம் ..smd safa..

உன் இதயத்தை கடனாக கொடு


என் அன்பை அடகு வைக்கிறேன்
உன் இதயத்தை கடனாக கொடு
நித்தமும் நினைவுகளை வட்டி கட்டுகிறேன்
களங்கமில்லா கனவுகளை காணிக்கையாக்கி
காதலை அசலாக்கி விடு.....


கவிதைகள் உலகம் ..smdsafa..

மௌனம

பெண்ணே,   என்னை கொல்ல
                     எந்த ஒரு ஆயுதமும் வேண்டாம்..

உன் ஒரு நொடி "மௌனமே" போதும்..

கவிதைகள் உலகம் ..smd safa..

உன்னை எப்படி அழைக்க

ஆசைகளை அடக்குபவனை
 ஞானி என்று  அழைப்பார்கள்!!

 அதுபோல்,

தவிப்பு

சொல்ல வேண்டுமென்கிற

தவிப்பில்தான் வருகிறேன்.

ஒவ்வொரு முறையும்

சொல்லாமலேயே திரும்ப நேர்கிறது.

சிலவற்றைச்

... சொல்லாமலே

புரிந்துகொள்ள வேண்டுமென்பதை

யார் உனக்குச்

சொல்லித்தருவது?

கவிதைகள் உலகம் ..smd safa..

அழகான உன் மௌனம்


வார்த்தைகள் யாசிக்கிறது.
அவளின் அழகான (ஆழமான) மெளனத்திடம்..


கவிதைகள் உலகம் smdsafa.net

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;