தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

என்னுள் ஒரு தேடல்



மூங்கில் காடுகளில் அலைந்து திரிந்து ,

ஒரு மூங்கிலை தேர்வு செய்து அழகிய புல்லாங்குழலாக மாற்றி என்
மனதோடு மகிழ்ந்தேன்...

ஊத நினைத்தேன்..

மறுத்தது...

பின்பு தான் தெரிந்தது..

அது ஊமை என்று...

அது போல் தான் உன்னுடனான என் வாழ்க்கையும்...

நீ என்னுள் இணைய மாட்டாய் என்று எனக்கு தெரியும்..

இருப்பினும் என்னுள் ஒரு தேடல்...

உன்னை காண...



கவிதைகள் உலகம் ..smdsafa..

நிகழ்வுகள்



சூரியனாய் உன் காதல்
சுடர் வீசி மறைந்த பின்னும்
நிலவாக தொடர்வது உன் நினைவுகள் தான்
பகலில் கதிர்களாய் சூழும் உன் நினைவுகள்
நிலாவின் நேரத்தில்
கனவுகளான கணங்களால் உன் ஆக்ரமிப்புகள்
மீட்டெடுக்க முடியாத என் நிகழ்வுகள்


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல்

காதல் ஒரு அழகிய ஓவியம் - ஆனால் 

வரைந்தவனால் அதை கடைசி வரை 

                  ரசிக்கமுடிவதில்லை..

கவிதைகள் உலகம் ..smdsafa..

யார் சொன்னது .?



என் கறுப்பு வெள்ளை 
கண்களிடம்
யார் சொன்னது ....?
உன்னைப் பார்த்தவுடன் 
வண்ணமயமாய்
விழித்திரையில் பதிவுசெய்ய
வேண்டுமென்று..

இயல்பாய் துடிக்கும் என் இதயத்திடம்
யார் சொன்னது?
உன்னைப் பார்த்தவுடன்
வேகமாக துடிக்க 
வேண்டுமென்று...

இனிதாய் பேசும் 
என் நாக்கிடம்
யார் சொன்னது ....?
உன் பேரை 
உச்சரிக்கும்போது
இசையோடு உச்சரிக்க 
வேண்டுமென்று ....

நீ நீயாக இருக்க
மாற்றம் மட்டும் என்னிலா !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல்

உருவத்தால் வருவது காதல் அல்ல
உள்ளத்தின் உணர்வுகளால்
உருவாவதே காதல்!

இதயத்தை திருடுவது காதல் அல்ல
இதயத்தால் இணைவதே காதல்!

இன்பத்தை பகிர்வது காதல் அல்ல
துன்பத்திலும் தொடர்வது தான் காதல்.!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உண்மை காதல்


அவளில் சாய்வதற்காக
சின்னதாய் ஒரு பொய்
சொல்வேன் - "தலை வலி"

உண்மையென நம்பி
அவள் துடிக்கும் துடிப்பில்
இருக்கும் உண்மை காதல் ...!!!

இல்லை இல்லை நான்
பொய் சொன்னேன்
என்றாலும்  அவள் நம்பமாட்டாள் ....!!




கவிதைகள் உலகம் ..smdsafa..

தனிமை


நீங்கள் நேசித்த இதயத்திடம்,
பெற கூடத ஒரே தண்டனை தனிமை,

ஏனென்றால் 

அது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் நரகமாய் மாற்றிவிடும்..!


கவிதைகள் உலகம் ..smdsafa..

மனைவி !


நீ தந்த கடிதங்களை
நிலவொளியில் இருந்து
விடியும்வரை
படித்துப்பார்க்கிறேன்...!

கொட்டும் அருவியின்
அருகில் அமர்ந்து,
நீ சிரிப்பதாய் நினைத்து
நானும் சிரித்துக்கொள்கிறேன்...!

உயிருள்ளவரை - என்
உயிர்துடிப்பு நீ என
கவிதை எழுதியே
காலந்தள்ளுகிறேன்...!

வருடந்தோறும் வந்துபோகும்
காதலர் தினத்தில்,
நீ தந்துபோன பரிசுகளை
தினம் தினம்
விரல்களால் உரசிப்பார்க்கிறேன்...!

நம் காலடிப்பட்டு
கடற்கரை மணல் கருத்தரித்த
காலடிச்சுவடுகளை
தேடிப்போகிறேன்...!

இருவரும் இணைந்துநின்று,
இதழ்களால் புன்னைகைத்து,
புகைப்படமாய் என்
பழைய புத்தகத்திலிருக்கும்
நம்மை உற்றுநோக்குகிறேன்...!

என்னில் நீ
இதழ்பதித்த இடங்களின்
ஈரங்களை தேடிப்பார்க்கிறேன்...!

பெண்ணே...!
இனியென்ன நான் செய்ய...?
இன்னொருவனுக்கு நீ
மனைவியான பின்பு... Via : Kavithaigal Ulagam கவிதைகள் உலகம்


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ தந்தவை


மறக்காது மரிக்காது,


மனதைவிட்டு அகலாது !

மாறவும்செய்யாது,

மரணம் வரும்வரையில் !

தொடர்ந்தேதான் தீருமாம்,

தோள்களில் அமர்ந்தபடி !

அன்பே நீ தந்த அழகான வேதனைகள் !!



கவிதைகள் உலகம் ..smdsafa..

தாங்கமுடியாதது


நி உன் இதயத்தில் இருந்து என்னை தள்ளியதும்!
மிக உயரத்திலிருந்து படுக்குழி நோக்கி விழுவதாய் உணர்கிறேன்!
அநேகமாக அது கல்லறை என்று தான் நினைக்கிறேன்!
எனெனில்

உன்னால் ஏற்பட்ட பிரிவோ!
ஏமாற்றமோ! துரோகமோ!
என்னால்
ஏற்றுக்கொள்ளமுடியாதது!! தாங்கமுடியாதது!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

போதை


உண்டால் போதை தரும் பொருட்களுக்கு தடை விதித்தவன்

பார்த்தாலே போதை தரும் உன் கண்களுக்கு

                                                                        தடை விதிக்க மறந்துவிட்டான்..

கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ இல்லாமல்


என் வாலிப வானம்
அமாவாசையானது
நிலவு நீ இல்லாமல்
என் இதயப் படகு
தவிக்கிறது
துடுப்பு நீ இல்லாமல்
என் இளமைச் சோலை
மணம் வீசவில்லை
மலர் நீ இல்லாமல்
என் வாழ்க்கைச் சாலை
வெறிச்சோடிக் கிடக்கிறது
வாகனம் நீ இல்லாமல்
ஆம்! தொடர்கின்றது
என் தனிமைப் பயணம்
ஒரு கணம் ஒரு யுகமாய்
ஒவ்வொரு பொழுதும் சோகமாய்..!

கவிதைகள் உலகம் ..smdsafa..

என் எழுத்து


எதைப்பற்றி வேண்டுமானாலும்,
எழுத முடியும் !
நீ எதிரே இல்லாதபோது !
இருக்கையில் !!
உனைத்தாண்டி எதையும்,
சிந்திக்க முடியாது !
உன்னைவிட,
உயர்ந்த விசயமும் கிடையாது !
நீமட்டும்தான் !
என் மனதை உன்னிடமே,
கட்டிவைக்கிற மாயாவி !!

கவிதைகள் உலகம் ..smdsafa..

ஆணின் எதிர்காலம்


எந்த ஒரு பெண்ணால்

ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க

வைக்க முடிகிறதோ அவள் தான்

அந்த ஆணின் எதிர்காலம் ஆகிறாள்...!!!!!

கவிதைகள் உலகம் ..smdsafa..

எப்படி முடிகிறது


காந்தம் கூட

எதிர் முனைகளை
மட்டும்தான் ஈர்க்கும்

ஆனால்

உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது

நான் எங்கிருந்தாலும்
என்னை ஈர்க்க......??

கவிதைகள் உலகம் ..smdsafa..

பேசியதில்


யோசித்து எழுதும் வரிகள்,
வெறும் வார்த்தைகளாகிவிடுகிறது,
கவிதைகளாகும்,
நீ பேசுகிற வாக்கியங்களின் முன்னே..........



கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் நினைவுகளால்




உன்னை நினைக்க எனக்கு கிடைத்த வரம் 
உன்னை மறக்க எனக்கு கிடைத்த சாபம் 
உன் நினைவில் வாழ்கிறேன் 
உன் நினைவால் சாகிறேன் 
வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் 
வாழ்ந்து கொண்டே சாகிறேன் 
செத்த பிறகும் வாழ்கிறேன் 
உன் நினைவுகளால்..



கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ தந்த வலி



உன்னை 
என் மனதிற்குள் 
சிறைப்பிடித்து 
பூட்டி வைக்க 
தான் 
நினைத்தேன்.,


அனால் நீயோ.. 
என்னை 
புதைத்துவிட்டு 
புறம்
சென்றுவிட்டாயே..


கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் அறிவேன் அன்பே



நீ என்னை வெறுக்கும் போதெல்லாம் 
நானுன்னை நேசிக்கின்றேன் 
நானுன்னை வெறுத்துவிட்டால் 
நீ சுவாசிப்பதைக் கூட 
நிருத்திருவாய் 
என்பதை நான் 
அறிவேன் அன்பே


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ என்னை மறக்க நினைக்கையில்



உன்னை நினைக்கும் போது 

மனதில் உள்ள வலி கூட 

சுகமாகிறது................. 

நீ என்னை மறக்க நினைக்கும் போது 

அந்த சுகம் கூட 

மரணமாக தெரிகிறது.............


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;