எனக்கென்று படைக்கப்பட்ட நீ !
எப்படி எனக்குப் பிடிக்காத,
விசயங்களைச்செய்யலாம் ?
எனக்கான மாற்றங்களைத்தவிர்க்கலாம் ?
எனக்கு பிடித்த நிறத்தை உடுத்தாமல்,
எனக்கு பிடித்த உணவைச்சுவைக்காமல்,
உன்னவன் என்று என்னைக் கொண்டாடுவதில்,
என்ன அர்த்தம் இருக்கிறது பெண்ணே ?
உனக்காக வாழ்கிற எந்தனது எண்ணங்களை,
உச்சிமுகர்ந்து நடைமுறைப்படுத்தாமல்,
உன்போக்கிலேயே நடந்தால்,
என்னடி அர்த்தம் நாம் வளர்த்த காதலுக்கு ?
நான் உனக்கென்று ஆகி வருடக்கணக்கானபின்,
உற்றுநோக்குகிறேன் உன்னை !
உனக்குப் பிடித்தவைகள் எனக்கு பரிச்சயமில்லாதவைகள் !
நான் பிடிக்காதென ஒதுக்கிய விசயங்கள் !
நான் கேட்கிறேன் ?
என்ன விசயத்தில் ஒத்துப்போகிறாய் நீ என்னுடன் ?
என் கனவுகளை கொலுவில் ஏற்றாமல்,
கொள்ளி வைக்கிறாயே அனைத்திற்கும் மொத்தமாய் !
ஆசைகளை நிராசைகளாக்கவா நாயகியானாய் எனக்கு ?
மனது ஆறாத ரணங்கள் எனக்குள் உன்னால் !
எங்கே போனது எனக்கான உனது வாழ்க்கை ?
மொத்தத்தில் உயிரெனக்கருதினாலும்,
நீ நினைப்பதேயில்லை எனை உற்றவனாய் !
உனக்காக மூச்சுவிட்டு என்ன பிரயோஜனம் எனக்கு ?
தயங்கி ஒதுங்காமல் பளிச்சென்று பதிலைச்சொல் !
எனக்காக வாழ்வதினும் பெரிதாய்,
என்ன சுதந்திரம் வேண்டிக்கிடக்கிறது பெரிதாய் உனக்கு ?
அனைத்தையும் ஒதுக்கி வந்து அடை சரணாகதி !
எனை உணர்ந்து அம்மணி !
ஆண் உன் ஆதாரசுருதி !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
நீயாய் அழைக்கும்வரை,
நானாய் வரமாட்டேன் !
என்ற கர்வம் தலைதூக்கியிருந்தால்,
நீ யாரோ நான் யாரோ?
என்ற நிலை வந்திருக்கும் நம் உறவுக்கு !
நீ போனால் பின்னாலே வந்தும்,
நான் போனால் நானே தணிந்தும்,
வீண்போகாமல் காத்தேன் அன்பை !
அதனின்பால்,
நீ எந்தன் எல்லைகளுக்குள்,
நான் உந்தன் தொல்லைகளுக்குள் !
தெரிந்துகொள்ள உன் கவனத்திற்கு,
இங்கே குளிர்ந்தே கிடக்கிறது,
நம் காதலெனும் மோகவெளி !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
1.மிகவும் உடல் பலமிழந்த நேரத்தில் உங்களை தாங்கி பிடிக்கும் கைகளை கண்டுபிடியுங்கள்.
2.எல்லோரும் பார்க்க மறுக்கும் நேரத்தில் உங்களை பார்க்க விரும்பும் கண்களை கண்டுபிடியுங்கள்.
3.உங்களின் மோசமான நிலைமையிலும் உங்களை நேசிக்கும் இதயத்தை கண்டுபிடியுங்கள்.
இவைகளை நீங்கள் கண்டுபிடித்தால் நேசம் உங்களை கண்டுபிடித்திருக்கும் !
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
இருளில் இருந்த என்னை ஒளி காண செய்தவள் அவள் ; என்னை முதல் முதலில் காதல் செய்த வளும் அவளே ; இன்று வரை என்மேல் அக்கறை கொண்டு நடப்பவள...
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
அவளில் சாய்வதற்காக சின்னதாய் ஒரு பொய் சொல்வேன் - "தலை வலி" உண்மையென நம்பி அவள் துடிக்கும் துடிப்பில் இருக்கும் உண்மை காதல்...
-
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ் ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று வாழ்நலம் வரம் பேற்று. இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி ந...