தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..
smd safa mohamed லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
smd safa mohamed லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கவிதைகள் உலகம் ஆண்ட்ரைடு அப்ளிகேஷன்


கவிதைகள் உலகம்

கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்..

டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam


நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற

டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET

புதைவதும் ஆனந்தமே


அனைவரையும் வெறுத்த நீ
என்னை மட்டும் வைத்தாய் உன் இதயத்துக்குள்..

இன்று அத்தனை பேரின் முன்னிலும்
என்னை மட்டும் வெறுத்து புதைக்கிறாய்
                                                    அதே உன் இதயத்துக்குள்..

புதைவதும் ஆனந்தமே..
                   உன் இதயத்தினுள் தானே, பரவாயில்லை.. ‎#smdsafa


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஷபா-மீதுள்ள காதல் கிறுக்கல்


======================
தாய் மடி கிடைக்காத
போது
உன் மடியில்
தலை சாய்ந்தேன்..
உன் மடியும்
கிடைக்காது
எனில்
மரணத்தின் மடியில்
தலை சாய்கிறேன்..
======================
===========================
உன் இதயத்தில் இடம்
இல்லையென்று தெரிந்
என் இதயம் உனக்காக
மட்டும் துடிக்கிறது
உன்
ஒரு வார்த்தைக்காக.. ஷபா..
===========================
========================================
என்னை மறந்திவிடு என்று
நீ கூறிய ஒரு வார்த்தையால்
நீ முத்தமிட்ட என் கண்கள்
நீங்காமல் கண்ணீர் சிந்துகின்றன
உன் நினைவை கழுவி விடலாமென்று ......
அவற்றுக்கு தெரியவில்லை
உன் நினைவை அழிக்க
கடல் நீரும் போதாதென்று
========================================

=================================================================
நினைவில் இல்லை என் ஜனனமே... !
உன்னைக் காணும் ஒவ்வொரு நொடியும் இறந்து பின் பிறக்கிறேன்,
அக்கணங்கள் ஒவ்வொன்றும் புதிய உலகில் இருப்பதாய் உணர்வதால்....!

காதலில் காத்திருப்பதும் சுகம் தான், ஆனாலும்
4 வருடமாக காத்திருப்பது தான் ஏனோ??

இது என்ன விதியா?? அல்ல இறைவனின் சதியா?? - smdsafa

=================================================================
கவிதைகள் உலகம் ..smdsafa..


அடம்பிடிக்கிறதே என் இதயம்


உன் மனதில்
நான் இல்லையென
தெரிந்தும் சிறுபிள்ளைபோல்
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்
நீ வேண்டுமென்றே அடம்பிடிக்கிறதே
உன் பெயர் சொல்லியே துடிக்கிறதே
என் இதயம்.....


கவிதைகள் உலகம் ..smdsafa..

மௌனம் வேண்டாம் காதலியே



என்
மீது
கோப படு..
என்னோடு
சண்டையிடு..
பேசாமல்
மட்டும்
இருந்து விடாதே.!
நான்
செத்து போய்
விட
வாய்ப்புண்டு.. .


கவிதைகள் உலகம் ..smdsafa..

விளையாடும் வரை விளையாடு



இந்தா என் இதயம்
விளையாடும் வரை விளையாடிவிட்டு,
தூக்கிப் போட்டுவிடு...

அது அதற்காகத்தான்
படைக்கப்பட்டது...


கவிதைகள் உலகம் ..smdsafa..

அவளை தேடி ஒரு பயணம்



அவளின் தூக்க
பொழுதுகளில்
சிறுபிள்ளை முகம்
காண
தினம் தோறும்
அவளை தேடி
கனவில் ஒரு பயணம்
காதல் என்ற உலகில்
அவளின்
முகவரி அறிந்தாலும்
வாசலுடன்
நின்று விடுகிறேன்
கண்ணியத்துடன்
காத்திருக்கிறேன்
எனகென அவள்
சொந்தமாகும் நாள்
வரை..


கவிதைகள் உலகம் ..smdsafa..

மே தின கவிதைகள்



எல்லா விடியலும்
மனிதனுக்காய் !!!
நாளைய விடியல்
தொழிலாளார்களுக்காய் !!
எப்பொழுதும்
கிடைப்பதில்லை விடியல் !!
முன்னிருக்கும் பொழுதை
நினைத்து உழைப்போம் ..
வியர்வையின் துளி
நிலத்தில் விழுந்து
நிலங்களுக்கு வளமுட்டட்டும் ,,

மே தின வாழ்த்துக்கள் தோழர்களே ..


கவிதைகள் உலகம் ..smdsafa..

அழகானவைகள்



அழகான கவிதைகள் அறுவடை செய்யப்படுவதில்லை,
அது பெருமழையாய் பெய்துமுடிந்துவிடுகிறது !
பக்கங்களையும் பக்கத்துணைகளையும் பொருட்படுத்தாது.............
மேகங்கள் திரள்வதை தாகங்கள் அறிவதேது?


கவிதைகள் உலகம் ..smdsafa..

உனக்கான என் கவிதையை



என் பேனாவில் மை தீர்ந்த பின்னும் கூட
எழுதிக் கொண்டிருக்கிறேன்,
உனக்கான என் கவிதையை...,

காதலுக்கு கண் இல்லை என்பதாலா ?
இல்லை....,

என் வார்த்தைகளுக்கு சாயம் பூச வேண்டியதில்லை என்பதால்.....!


கவிதைகள் உலகம் ..smdsafa..

அம்மாவே கவிதைதான்



அம்மாவுக்கு என்று தனியாக 
கவிதை வேண்டாம்... 

 அன்பாக பழகிப்பார்
அம்மாவே கவிதை தான்..

கவிதைகள் உலகம் ..smdsafa..

முள்



மனிதர்கள் போல் தான்
குத்தி கொண்டே இருக்கும் ....

அதில் பூக்கும் பூக்கள்
மனிதம் போன்றது

மலர்ந்து மணம் விசி
கொண்டே இருக்கும் ..


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதலில் பொய் இருக்காலாம்;ஆனால்

காதலில் யார் (அதிகம்) பொய் சொல்கிறார்கள் என்பது அந்த காதலில் யார் (அதிகம்) நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து வேறுபடும். இதில் பால் பாகுபாடு எல்லாம் கிடையாது. முடிவாய் ஒரு கருத்து, காதலில் பொய் இருக்காலாம்;ஆனால் காதலே பொய்யாக இருக்கக் கூடாது. கவிதைகள் உலகம் ..smdsafa..

வன்முறை


கட்டாயப்படுத்தி கட்டியணைக்கும் பொழுதெல்லாம்,

எந்த எதிர்ப்பும் காட்டாமல் சிலையாய்,

அவள் கடைபிடிக்கும் அமைதியே,

உலகத்தின் உச்சபட்சவன்முறை எனைப்பொறுத்து !!


கவிதைகள் உலகம் ..smd safa..

தைத் திருநாள்


ஓரெழுத்தில் ஒரு தமிழ் மாதம்
தமிழர் கொண்டாடும் பெரு மாதம்
விதைத்த பயிரெல்லாம் வீடு சேரும்
போட்ட முதலெல்லாம் மும்மடங்காய் மாறும்
ஒரு காலம் பொய்த்து விட்டாலும்
மறு காலம் வாழ வைக்கும்
வளமாக்கும் !!! வணங்குவோம் இயற்கையை !!!


கவிதைகள் உலகம் ..smd safa..

திருமண வாழ்த்து உயிர் எழுத்துக்களின் வரிசைப்படி


அன்பே என்று அழைத்திடுங்கள்!

ஆசைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்!

இதயங்களை ஈந்திடுங்கள்!

ஈரவிழிகளை துடைத்திடுங்கள்!

உறவுகளை நினைத்ததிடுங்கள்!

ஊடல்களை மறந்திடுங்கள்!

திருமண வாழ்த்து கவிதை 15


அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.

இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்


உண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும்
வாய்மை வெல்லுமென் றுணர்
ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்

திருமண [கல்யாண] நாள் வாழ்த்து கவிதை 14


பூவினால் காய்கள் தோன்றும்!
புலவனால் கவிதை தோன்றும்!
நாவினால் சொற்கள் தோன்றும்!
காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம்
இனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு

கல கல பேச்சு உண்டு!
களங்கமில்லா தோற்றமுண்டு! -தன்
பல கலைத் திறனினாலே -மணமக்கள்

நலிவடையா விளை நிலம் போலானார்!

கன்னத்தில் பொலிவு தோன்றும்
கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது
எண்ணங்களிலும் இனிமை தோன்றும்
வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர்
நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…


கவிதைகள் உலகம் ..smd safa..

திருமண {கல்யாண} வாழ்த்துக்கள் 13


இதுநாள்காறும்
பூமியாய் நின்று
நிலவை ரசித்திருந்தவன்;
நாளைமுதல் நிலவின் கைப்பிடித்து
இராட்டிணம் சுற்றப் போகிறான்
திருமண வானில்!


கவிதைகள் உலகம் ..smd safa..

திருமண {கல்யாண} வாழ்த்து கவிதைகள் 12


அன்பின் நண்பர்களே,

இதயத்தால் இணைந்திட்ட

இவர்களின்

இல்லறப் பாதையெங்கும்

உங்களின் வாழ்த்துக்களால்

தோரணம் கட்டிட

விரும்பி அழைக்கிறோம்!



கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;