நிலவே..
நீ ஓர் நாள் வந்து
பல நாள் தேய்கிறாய்..
மலரே..
நீ ஓர் நாள் மலர்ந்து
மறுநாள் உதிர்கிறாய்..
மழையே..
நீ ஓர் நாள் பொழிந்து
மறுநாள் ஓய்கிறாய்..
உறவே..
நீ ஓர் நாள் வந்து
மறுநாள் மறைகிறாய்..
'' நண்பனே..
நீ ஓர் நாள் வந்தாலும்
நம் நட்பு அலைபோல்
என்றும் இருப்பாய் என நினைத்தேன்''..
காலம் பிரித்ததே நண்பா
உன்னை எங்களிடம் இருந்து..
ரெஜின், என்றும் மறவாத உன் நினைவில் உன் நண்பர்கள்...
அன்பே
கள்ளத்தனமாய் ஒரு முறை கூட
என்னை ரசிக்கவில்லை என்று
உனது நெஞ்சை தொட்டு சொல்..
என் எல்லா கவிதைகளிலும்
உன்னை பற்றிதான் என்பது
உனக்கு தெரியாது என
உனது நெஞ்சை தொட்டு சொல்...
நான் உன்னை பார்க்காத நேரம்
நீ என்னை ரசித்த நொடிகள்
இல்லை என்று உனது நெஞ்சை தொட்டு சொல்...
கண்களால் ஆயிரம் காதல் கடிதங்கள்
தந்து வாசிக்கும் முன்
இமைகள் கொண்டு அடைத்தாயே
நெஞ்சை தொட்டு சொல் இல்லையென்று
எல்லாம் செய்து விட்டு காதல் எண்ணம்
உன்மேல் இல்லை என்கிறாய்
கண்ணாடி முன் நின்று
உன் நெஞ்சை தொட்டு கேட்டு பார்
ஜாக்கிரதை, ''உன் மனம் உன்னையேஅறைந்துவிட போகிறது''...
எட்டி உதைக்கும் உன் ஸ்கூட்டிக்காகவும்
ஏறி மிதிக்கும் உன் செருப்புக்ககவும்
காற்றில் பறக்கும் கேசத்திற்க்காகவும்
கையில் கிடக்கும் உன் வலையளுக்காகவும் அலையவில்லை ?
கழுத்தில் கொடுக்க ஒரு தாலிக்காக அலைகிறேன்.
எட்டி உதைக்காமல் ஏறி மிதிக்காமல்
காற்றில் பறக்கா ஆண்மையோடு உன்
கையை பிடித்து கொள்கிறேன் காதல் சொல்வாயா ?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
இருளில் இருந்த என்னை ஒளி காண செய்தவள் அவள் ; என்னை முதல் முதலில் காதல் செய்த வளும் அவளே ; இன்று வரை என்மேல் அக்கறை கொண்டு நடப்பவள...
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
அவளில் சாய்வதற்காக சின்னதாய் ஒரு பொய் சொல்வேன் - "தலை வலி" உண்மையென நம்பி அவள் துடிக்கும் துடிப்பில் இருக்கும் உண்மை காதல்...
-
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ் ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று வாழ்நலம் வரம் பேற்று. இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி ந...