அன்பே
கள்ளத்தனமாய் ஒரு முறை கூட
என்னை ரசிக்கவில்லை என்று
உனது நெஞ்சை தொட்டு சொல்..
என் எல்லா கவிதைகளிலும்
உன்னை பற்றிதான் என்பது
உனக்கு தெரியாது என
உனது நெஞ்சை தொட்டு சொல்...
நான் உன்னை பார்க்காத நேரம்
நீ என்னை ரசித்த நொடிகள்
இல்லை என்று உனது நெஞ்சை தொட்டு சொல்...
கண்களால் ஆயிரம் காதல் கடிதங்கள்
தந்து வாசிக்கும் முன்
இமைகள் கொண்டு அடைத்தாயே
நெஞ்சை தொட்டு சொல் இல்லையென்று
எல்லாம் செய்து விட்டு காதல் எண்ணம்
உன்மேல் இல்லை என்கிறாய்
கண்ணாடி முன் நின்று
உன் நெஞ்சை தொட்டு கேட்டு பார்
ஜாக்கிரதை, ''உன் மனம் உன்னையேஅறைந்துவிட போகிறது''...