தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..
பிரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிரியாதவை



பிரிந்திருக்கிற நேரத்தை,
உணர்ந்தறிவது கடினம் !
வலுவாய் வளர்ந்துவிட்டது,
ஒருவர்மேல் ஒருவருக்கான காதல் !
மேலும் !
இவர்களை பிரிப்பது பாவத்தைக்கூட,
கொணர்ந்து சேர்க்கும் !
பேசாமல் சிதைக்காமல் விட்டுவிடலாமே !
இந்த சிட்டுக்குருவிக்கூட்டை !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் மட்டும் தனியாக (ஒரு காதலனின் கண்ணீர்)




நாமிருவரும் சின்னஞ்சிறு வயதில், அம்மா-அப்பா விளையாட்டு விளையாடிய அதே மாந்தோப்பில்தான், நீ உன் அம்மாவின் சேலையைக் கிழித்து முதல் தாவணியும், நான் என் அப்பாவின் வேட்டியைக் மடித்து முதல் வேட்டியும் கட்டிக் கொண்டு, சந்தித்தோம் – பொங்கி வழிந்தக் கூச்சத்துடன், ஒரு திருவிழா நாளில்…

குனிந்த தலை நிமிராமல் நீ அப்போது சொன்னாய், ”இனிமே, நான் உன்ன ‘டா’ போட்டுக் கூப்பிட மாட்டேன்..” ♥

“ஏன் ?”

“மாட்டேன்னா… மாட்டேன்”

”அப்போ இனிமே நானும் உன்ன ‘டீ’ போட்டுக் கூப்பிடக் கூடாதா?”

“இல்லேல்ல… நீ கூப்பிடலாம்… கட்டிக்கப் போறவள பின்ன எப்டி கூப்டுவியாம்?” ♥ என்று சொல்லிக்கொண்டு, நாக்கைக் கடித்துக் கொண்டாய்.. உன் வெட்கத்தில், மாந்தோப்பில் இருந்த மாங்காய்களெல்லாம், சிவந்துப் போயின…

இன்னொரு அமாவாசை நாளில், என் அக்கா குழந்தைக்கு நான் சோறூட்டுகையில், நிலவைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தது குழந்தை… மாடியில் நின்றிருந்த உன்னைக் காட்டி, “அதோ பார்.. நிலா ♥ ” என்று குழந்தைக்கு நான் சோறூட்டியதைப் பார்த்துவிட்ட நீ, அடுத்த நாள் விடிந்தும் விடியாதப் பொழுதில், ஓடி வந்து என்னை முத்தமிட்டதும் அந்த மாந்தோப்பில் தான்… ♥

பிறிதொரு வருடத்தில் அதோ மாந்தோப்பில்தான், “என்னை மறந்துடு ” என்று அழுதாய்… அதோடு முடிந்துப் போனது எல்லாம்… 

இப்போது உன்னை ‘இந்தா’ என்று அழைக்க ஒரு கணவன் இருக்கிறான்…

’அம்மா’ என்று அழைக்க இரு குழந்தைகளும் இருக்கின்றனர்…

ஆனா,
“ஏண்டா கல்யாணம் வேணாங்கிற?” என்று கெஞ்சி அழும் என் அம்மாவுக்கு மட்டும் நான் மகனாயில்லை…


கவிதைகள் உலகம் ..smdsafa..

கோவிலுக்குள்

என்னை சுமந்த 
காலனியை கழற்றி 
விட்டு என்னை வெறுத்த 
அவளை நெஞ்சில் சுமந்து 
கொண்டு செல்கிறேன் 
கோவிலுக்குள் !!!!

கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் நினைவில் தூங்குது



உன் நினைவில்
தூங்குது என் நெஞ்சம் --
சுமையாக இருந்தும்
வலுவிழக்க வில்லை
என் இதயம் ---
உணர்வுகள் தட்டி
எழுப்புகிறது பசியை
புசிக்கிறேன் --
நம் நினைவுகளை


கவிதைகள் உலகம் ..smdsafa..

அவளின் நினைவுகளில்



அவள் காதல் இன்று
என் கண்ணீராகவும்,
என் காதல் இன்று
அவள் நாட்குறிப்பின்
மிச்சமாகவும் தொடர்கிறேன்
அவளின் நினைவுகளில்
என் காதலை!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நண்பனின் பிரிவு ரெஜின் REGIN




வாழ தெரிந்த மனிதன்
கற்றுக் கொள்ளும் பாடம்
நட்பு...!!

உயிர்த் தோழனின் நட்பு
உருக வைக்கும் ஆனந்தம்
சுக துக்கங்களை பரிமாறும்
ஓர் ஆனந்த திருவிழா...!!

உண்மையான நட்பு
ஒருவனை மனிதனாக்கும்
வாழ்வை தொலைத்தவன் கூட
நட்பை தொலைக்க மாட்டான்

ஆனால்...
என் நண்பனை தொலைத்தேன்...
நட்பை தொலைக்கவில்லை...

கவிதைகள் உலகம்..  ..smdsafa..

நண்பனின் பிரிவு கவிதை ரெஜின் REGIN



நண்பனின் பிரிவு !
கண்ணீரை சந்திக்கிறேன்
என் நண்பன் இல்லாதபோது
தனிமையில்தான் வாழ்கிறேன் -நீ
இல்லாத ஊரில் ...

மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள
நண்பனே நீ இல்லை அதனால்
மகிழ்ச்சியை நான் உணர்வதே இல்லை !

நீ கற்றுக்
கொடுக்கவில்லையடா
உன்னை பிரிந்து வாழ ...

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;