நண்பனின் பிரிவு !
கண்ணீரை சந்திக்கிறேன்
என் நண்பன் இல்லாதபோது
தனிமையில்தான் வாழ்கிறேன் -நீ
இல்லாத ஊரில் ...
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள
நண்பனே நீ இல்லை அதனால்
மகிழ்ச்சியை நான் உணர்வதே இல்லை !
நீ கற்றுக்
கொடுக்கவில்லையடா
உன்னை பிரிந்து வாழ ...
என் கரங்களாக இருந்தாய் -நீ
இல்லாத பொழுதிலே என் கண்கள்
உன் பிரிவிலே கண்ணீர் சிந்துதடா !
என் கண்கள் கலங்கினால்
உன் உதிரம் கொதிக்குமடா
இன்று உன்னை பிரிந்து வாழ்கிறேன்
கண்ணீரோடு அதை துடைக்க
வருவாயா நண்பனே ...!!!
R.ரெஜின், மேக்காமண்டபம்.
எல்.எம்.எஸ்.மேல்நிலை பள்ளி.,
கடமலைக்குன்று..
கவிதைகள் உலகம் ..smdsafa..