தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..
அவமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதைவதும் ஆனந்தமே


அனைவரையும் வெறுத்த நீ
என்னை மட்டும் வைத்தாய் உன் இதயத்துக்குள்..

இன்று அத்தனை பேரின் முன்னிலும்
என்னை மட்டும் வெறுத்து புதைக்கிறாய்
                                                    அதே உன் இதயத்துக்குள்..

புதைவதும் ஆனந்தமே..
                   உன் இதயத்தினுள் தானே, பரவாயில்லை.. ‎#smdsafa


கவிதைகள் உலகம் ..smdsafa..

தனிமை



எல்லா அவமானங்களிலும்,
துணைக்கு வருகிறது தனிமை !
நாம்தான் எதுவாவது எவராவது,
துணைக்கு கிடைத்துவிட்டால்,
அதற்கு துரோகம்செய்து இடம் பெயர்கிறோம் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

மாற்றம்



வீரனாகத்தான் அறியப்பட்டேன் !
எனக்கு நானே !
நினைவுதெரிந்த நாள்தொட்டு !
விளைவு அறியாமல்,
உன் விழிகளுடன் போரிட்டு !
தோற்றுபோய் விவேகியானேன் !
வேகங்கள் வேகமாய் குறைந்து !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நிலவும் நட்சத்திரமும்

இரக்கமில்லாத
காதலிக்காக வேண்டி
காத்திருக்கும் ஆண்கள் எண்ணி
பார்த்து பொழுது போக்கத்தான்
நிலவும் நட்சத்திரமும் கடவுளால்
படைக்கப்பட்டன..?!

கவிதைகள் உலகம் ..smdsafa..

அவமானம்



வாழ்க்கை எனும் மலையிலே

வெற்றி எனும் சிகரந்தொட

சமுதாயம் எனும் சிற்பியால்

செதுக்கப்படும் படிகளே

                                         -அவமானம்


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;