உறவுகள் அவ்வளவு எளிதில் உடைந்துபோவதில்லை !
மீறி உடைபட்டால் !
எவ்வளவு செப்பனிட்டாலும்,
இயல்புநிலை திரும்புவதில்லை !
அன்யோன்யம் "மகாப்பொக்கிஷம்"
அதை அழித்துவிடும் சூழ்நிலைகள்,
நமக்கே நாம் விதிக்கும் சாபக்கேடுகள் !
இதை உணர்ந்தே நகர்ந்தாலும்,
தப்பமுடிவதில்லை என்றாவது,
இந்த தவறாத உறியடிகளிலிருந்து !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
ஊடல் கூடலெல்லாம்,
உணர்ச்சியுள்ள உறவுகளில் விளையாடும் !
ஊமைச்சாமி உனக்கு என்ன தெரியும்?
உள்ளம் ஏற்குமா உனை காதலித்ததை ?
எந்நேரமும் மௌனம் நிஷ்டை மாயஉறக்கம் !
கனவிலேயே கிடக்கும் உனக்கு நிஜத்தில் நானெதற்கு ?
உருப்படாதவனே !
ஏதாவது பேசு !
உன் மௌனக்கொடுமை தாங்காமல் முடித்துவிடுவேன் உன்னை !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
அன்று நண்பன்
என்று கைகொடுதாய்...
நான் உன் காதலன்
என்று உணர்ந்தேன்...
...
நலமுடன் வாழ்க
என்றாய்...
உன்னை நலமுடன்
வாழவைப்பேன் என்று
உணர்ந்தேன்...
தேடி செல்லாதே என்றாய்...
என் தேவதை நீ
என்று தேடி வந்தேன்...
நீ வந்த பாதையை ஓர் நாள்
திரும்பி பார் என்றாய்...
திரும்பி பார்த்தேன்
என் பாதை எங்கும்
நீதான் இருகிறாய்...
பாதையில் மட்டுமல்ல...
இன்றுவரை
என் இதயத்திலும்...
நீ என் மனைவி...
கவிதைகள் உலகம் ..smdsafa..
முடிவுக்குவந்துவிட்ட சமயம்,
மீண்டும் கவிழ்ந்துவிட்டது நினைவு,
தலைகுப்புற தண்ணீருக்குள் !
இது காதலின் வழக்கம் !
பிரிந்துவிட முடிவெடுக்கும்,
மானம்கெட்ட மனோதைரியம்,
மயான வைராக்கியம்போல !
ஆறு தொடரும் பயணத்தை,
ஆனால் விழுந்தபடியே இருக்கும் அதில்,
விநோத முரண்டுபிடிக்கற்கள் !
உனக்கான முனகல் சத்தங்களுடன் !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
காதல் ஏன் புனிதமானது
என்று கேட்டாள்
கன்னி ஒருத்தி
பக்தியும் காதலும்
கிட்டத்தட்ட ஒன்றே என்றேன்..
எப்படி ? எப்படி ? என்றே
நெருங்கி வந்தாள்
வியர்த்தல் மயிர் சிலிர்த்தல்
உடல் குலுங்குதல்
கண்ணீர் அரும்புதல்
வாய்விட்டு அழுதல்
சொல்ல இயலாமை
மிடறு விம்முதல்
நா தழுதழுத்தல்
இதழ் துடித்தல்
மெய் மறத்தல்
.............
இவை எல்லாம்
காதலிலும் உண்டு
பக்தியிலும் உண்டு
ஆகவே காதலும்
புனிதமானது ..அழகே
என்றேன்
பிரசாதமாக
கிடைத்தது
முத்தம் ஒன்று
--------------------------
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன் உன் பிறப்பால் !! பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!! உன் வயது தான் வளர அதனுட...
-
இருளில் இருந்த என்னை ஒளி காண செய்தவள் அவள் ; என்னை முதல் முதலில் காதல் செய்த வளும் அவளே ; இன்று வரை என்மேல் அக்கறை கொண்டு நடப்பவள...
-
அம்மா .... பிறந்தவுடன் சொன்னதும்.. உயிரை வலியோடு முடிக்கும் போது சொல்வதும், அம்மா.... . 'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்ம...
-
அவளில் சாய்வதற்காக சின்னதாய் ஒரு பொய் சொல்வேன் - "தலை வலி" உண்மையென நம்பி அவள் துடிக்கும் துடிப்பில் இருக்கும் உண்மை காதல்...
-
அன்பை அறிவை அளவின்றி அளித்து அகிலம் போற்ற வாழ் ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று வாழ்நலம் வரம் பேற்று. இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி ந...