ஊடல் கூடலெல்லாம்,
உணர்ச்சியுள்ள உறவுகளில் விளையாடும் !
ஊமைச்சாமி உனக்கு என்ன தெரியும்?
உள்ளம் ஏற்குமா உனை காதலித்ததை ?
எந்நேரமும் மௌனம் நிஷ்டை மாயஉறக்கம் !
கனவிலேயே கிடக்கும் உனக்கு நிஜத்தில் நானெதற்கு ?
உருப்படாதவனே !
ஏதாவது பேசு !
உன் மௌனக்கொடுமை தாங்காமல் முடித்துவிடுவேன் உன்னை !!
கவிதைகள் உலகம் ..smdsafa..