தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..
நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

என் நட்பு



சொல்ல முடியாத ஒர் உணர்வு !
ஊவமை சொல்ல முடியாத கவிதை !
நமக்காக துடிக்கும் ஒர் உயிர் !
கனவுகளை நனவாக்கும் ஒர் நவீனம் !
உறவுகள் இல்லாத உறவு !
ரத்தபந்தங்கள் இல்லாத சொந்தம் !
வானத்து நட்சத்திரம் !
பொறாமை இல்லாத உயிர் !
அனாதை என்ற வார்த்தையை அழிக்கும் உயிர் !
எனக்காக கடவுள் கொடுத்த இன்னொரு உயிர் !

என் நட்பு. . . .            - கவிதைகள் உலகம்..


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஷபா-மீதுள்ள காதல் கிறுக்கல்


======================
தாய் மடி கிடைக்காத
போது
உன் மடியில்
தலை சாய்ந்தேன்..
உன் மடியும்
கிடைக்காது
எனில்
மரணத்தின் மடியில்
தலை சாய்கிறேன்..
======================
===========================
உன் இதயத்தில் இடம்
இல்லையென்று தெரிந்
என் இதயம் உனக்காக
மட்டும் துடிக்கிறது
உன்
ஒரு வார்த்தைக்காக.. ஷபா..
===========================
========================================
என்னை மறந்திவிடு என்று
நீ கூறிய ஒரு வார்த்தையால்
நீ முத்தமிட்ட என் கண்கள்
நீங்காமல் கண்ணீர் சிந்துகின்றன
உன் நினைவை கழுவி விடலாமென்று ......
அவற்றுக்கு தெரியவில்லை
உன் நினைவை அழிக்க
கடல் நீரும் போதாதென்று
========================================

=================================================================
நினைவில் இல்லை என் ஜனனமே... !
உன்னைக் காணும் ஒவ்வொரு நொடியும் இறந்து பின் பிறக்கிறேன்,
அக்கணங்கள் ஒவ்வொன்றும் புதிய உலகில் இருப்பதாய் உணர்வதால்....!

காதலில் காத்திருப்பதும் சுகம் தான், ஆனாலும்
4 வருடமாக காத்திருப்பது தான் ஏனோ??

இது என்ன விதியா?? அல்ல இறைவனின் சதியா?? - smdsafa

=================================================================
கவிதைகள் உலகம் ..smdsafa..


ஈர்க்கிறாய்



நீ பார்க்காத நேரங்களில் உன்னோடு,
பவனி வந்துகொண்டுதானிருன்தேன்,
உன் நிழலாய் !
நீ நினைக்காத நிமிடங்களில்,
உன்னோடுதானிருந்தேன்,
உன் தொண்டைக்குழியிறங்கும் எச்சிலாய் !
நீ தீண்டாத மணித்துளிகளில்,
உன்னோடுதானேயிருந்தேன்,
நரகமென எரியும் விரகமாய் !
நீ தூங்காத சமயங்களில்,
உன்னுடனேயே இருந்தேன்,
உன் உறக்கம் பறித்த சாபமாய் !
எனக்கோ..........................!!
எல்லாமுமாய் நீயிருந்தாய் எந்தநேரமும் !
ஐம்பூதங்களின் அர்த்தமாய் !
அதில் ஊசலாடிடும் அற்பமாய் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

முயற்சி



எட்டிப் போனாலும் தொடலாம்

பட்டுப் போனாலும் நடலாம்

தட்டிப் போனாலும் எழலாம்

முயற்சி இருந்தால் !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் கற்பனை



மலர்களில் பூத்த
உன்மடி மஞ்சமடி
உன் புன்னகைக்கு
நான் என்றும்
தஞ்சமடி..

நின் எழில்முகம்
எல்லோராவையும்
மிஞ்சுமடி..
உனை அடைய நான்
கடவுளுக்களிப்பேன்
லஞ்சமடி!..


கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் ரசித்தது


உலகில் ரசிக்க ஆயிரம் இருந்தும்

அனைத்தையும் மறந்து நான் ரசித்தது

உன்னோடு பேசிய
இனிமையான நாட்களை மட்டும் தான் ♥ ♥ ♥

கவிதைகள் உலகம் ..smdsafa

..

உனக்கென ஒரு வழி



இறந்துபோன மீன்கள்
தண்ணீரின் திசையிலே செல்லும்..

உயிருள்ள மீன்கள் தான்
தண்ணீரை எதிர்த்து செல்லும்..

உனக்கென ஒரு வழியை உருவாக்கு.


கவிதைகள் உலகம் ..smdsafa..

நிமிடங்கள்



நீ காக்கவைத்த நிமிடங்களை கணக்கிட்டால்,
வாழ்கையின் ஒரு பகுதி,
படபடப்பும் பதட்டமுமாய் முடிந்துபோயிருக்கும் !
இருந்தாலும் அவைகள்,
வீணான நிமிடங்களல்ல !
உனக்காக எனை செதுக்கி நான் நானான நிமிடங்கள் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நம்பிக்கை




நம்பிக்கை
முயற்சி மட்டுமே
என் மூலதனம்
இழப்பதற்கு ஏதுமில்லை
வெற்றியும் தோல்வியும்
வெறும் நிகழ்வுகளே



கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;