தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..
நண்பனுக்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நண்பனுக்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புரியாத நட்பு

கவிதைகள் உலகம் ..smdsafa..

நட்பின் நிழல்


காரணங்கள் சொல்ல எத்தனித்திருந்தால்,
நான் முயற்சிகளே எடுத்திருக்கமாட்டேன் !
உனது முடியாத காரியத்திற்கு !
முடியாது என்று ஒதுங்கவில்லை விலகி,
தோல்வி உன் தோள்களில் அமரும்வரை !
இயலாமை உனை சூழ்ந்த தருவாயில்,
எள்ளி நகையாடினாய் என் பங்களிப்பை !
எண்ணிப்பார்த்தேன் எனது போராட்டத்தை !
துணை நின்றேனே உன்னுடன் தளராமல் !
அதற்குத்தரும் பரிசா?
இந்த அவமானம் நண்பா?
வருத்தமில்லா வா எனைத்தேடி !
இனி எப்பொழுது விதி உன்னை விரட்டினாலும் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் நட்பு



சொல்ல முடியாத ஒர் உணர்வு !
ஊவமை சொல்ல முடியாத கவிதை !
நமக்காக துடிக்கும் ஒர் உயிர் !
கனவுகளை நனவாக்கும் ஒர் நவீனம் !
உறவுகள் இல்லாத உறவு !
ரத்தபந்தங்கள் இல்லாத சொந்தம் !
வானத்து நட்சத்திரம் !
பொறாமை இல்லாத உயிர் !
அனாதை என்ற வார்த்தையை அழிக்கும் உயிர் !
எனக்காக கடவுள் கொடுத்த இன்னொரு உயிர் !

என் நட்பு. . . .            - கவிதைகள் உலகம்..


கவிதைகள் உலகம் ..smdsafa..

நண்பனின் பிரிவு



தேவை இல்லாத
எண்கள் என்று;
அலை பேசியில்
இருந்து
அழிக்கும்
போது தான்,,,
தெரிகிறது,,,
உலகை விட்டுப் போன
என் உயிர் நண்பன்
பிரிவின் வலி... with ரெஜின்..


கவிதைகள் உலகம் ..smdsafa..

கவனம் தேவை



வாகனத்தில் பயணம் கைபேசியில் கவனம்
தலை போகிற பேச்சானாலும் தவிர்க்கணும்
இல்லை தலையே போய்விடும் இலக்கணம் !!!



கவிதைகள் உலகம் ..smdsafa..

முயற்சி



எட்டிப் போனாலும் தொடலாம்

பட்டுப் போனாலும் நடலாம்

தட்டிப் போனாலும் எழலாம்

முயற்சி இருந்தால் !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நண்பனின் பிரிவு ரெஜின் REGIN




வாழ தெரிந்த மனிதன்
கற்றுக் கொள்ளும் பாடம்
நட்பு...!!

உயிர்த் தோழனின் நட்பு
உருக வைக்கும் ஆனந்தம்
சுக துக்கங்களை பரிமாறும்
ஓர் ஆனந்த திருவிழா...!!

உண்மையான நட்பு
ஒருவனை மனிதனாக்கும்
வாழ்வை தொலைத்தவன் கூட
நட்பை தொலைக்க மாட்டான்

ஆனால்...
என் நண்பனை தொலைத்தேன்...
நட்பை தொலைக்கவில்லை...

கவிதைகள் உலகம்..  ..smdsafa..

நண்பனின் பிரிவு கவிதை ரெஜின் REGIN



நண்பனின் பிரிவு !
கண்ணீரை சந்திக்கிறேன்
என் நண்பன் இல்லாதபோது
தனிமையில்தான் வாழ்கிறேன் -நீ
இல்லாத ஊரில் ...

மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள
நண்பனே நீ இல்லை அதனால்
மகிழ்ச்சியை நான் உணர்வதே இல்லை !

நீ கற்றுக்
கொடுக்கவில்லையடா
உன்னை பிரிந்து வாழ ...

காதலில் வீழ்ந்தது

தோழியே..! உன்னைச் சந்தித்தது விதி…
உன்னுடன் நட்பு கொண்டது ஒரு வாய்ப்பு. ஆனால்
உன்னிடம் காதலில் வீழ்ந்தது,
என்னையும் அறியாமல் நடந்தது,
என்னால்கட்டுப்படுத்த முடியாமல் போனது.

                                                                       அதுதான் காதல்….!

கவிதைகள் உலகம் ..smd safa..

திருமண {கல்யாண} வாழ்த்து கவிதைகள் 12


அன்பின் நண்பர்களே,

இதயத்தால் இணைந்திட்ட

இவர்களின்

இல்லறப் பாதையெங்கும்

உங்களின் வாழ்த்துக்களால்

தோரணம் கட்டிட

விரும்பி அழைக்கிறோம்!



கவிதைகள் உலகம் ..smd safa..

நண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்

எப்போது ஒன்று சேர்வோம்?
எப்படி ஒன்று சேர்வோம்?
இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள்
இனிமேல் உமக்கு இல்லை!

உணர்வுகளால் நேற்றுவரை
உரையாடிய காதல்ஜோடி
இன்றிலிருந்து என்றென்றும்
உடலாலும் இணைகிறது!

உள்ளத்தில் நீர் சுமந்த
உண்மையான அன்பிற்காய்
திருவிழா செய்கின்றோம்!
திருமணமாம் உமக்கின்று!

புரிந்த நட்பில் பிரிந்த தோழி


நட்பின் சாரலில்
நனையவைத்தாய்
எனக்குள் குளிர
உனக்குள் கொடுகினாய்...!

கோபத்தின் சுவாலையில்
கொதிக்கும்போதெல்லாம்
அன்பால் ஊதி
அணைய வைத்தாய் ...!

நட்பும் காதலும்


நட்பும் காதலும் என் இரு கண்கள்;
காதல் என்ற முள் என் காதல்
கண்ணில் குத்தியது
நட்ப்பு கண் எனக்கு கண்ணீரை
தந்து ஆறுதல் கொடுத்தது
காதல் ஓர் ஜடம்
நட்பு ஓர் உயீர்


கவிதைகள் உலகம் ..smd safa..

நல்ல நண்பன் போது


ஒரு நல்ல நண்பன் போதும்
நம் வாழ்க்கை
முழுவதற்கும்!!!

ஆனால்...

ஒரு வாழ்க்கை போதாது
நம் நண்பர்களுடன்
வாழ்வதற்கு..!!!


கவிதைகள் உலகம் ..smd safa..

பிறந்தநாள் பரிசு வாழ்த்து கவிதை


பிறந்தநாள் பரிசு ..
பெண்ணாய் பிறந்தாய்
பெண்மை அடைந்தாய்
இவ் பதினைந்து வயதில்
பல புதுமை கண்டாய் ..
உன் கல்விக்குதான்
பாலம் இடும் வயது
காதலுக்கோ கெட்ட
காலம் இது ..
பதினாறு வயது இனி பருவங்கள்
மாறலாம்

உயிர் நட்பு


பழகிய நாட்கள் கொஞ்சம் உன் மேல்
கொண்ட பாசத்தினால் நெகில்கிறதே என் நெஞ்சம் !!!!
ரத்த பந்த உறவல்ல உயிர்ரோடு கலந்ததால்
இதற்க்கு இல்லை இனி பிரிவு ஒருவருக்கொருவர்
துணையாக இருப்போம்!!!!!!!

உறவு (நண்பர்கள்)

இதயம் துடிக்கும் ஓசையை கூட கேட்க முடியும்,

ஆனால் மனது அழும் ஓசையை யாராலும் கேட்க முடியாது,

உண்மையான உறவுகளை (நண்பர்களை) தவிர.....

கவிதைகள் உலகம் ..smd safa..

தாய் தந்தை

தோள் கொடுக்க தோழனும்,
தோள் சாய தோழியும்        கிடைத்தால்
                அவர்கள் கூட  தாய் தந்தை தான் ...!

கவிதைகள் உலகம் ..smd safa..

நண்பன்

உன் நினைவில் நான் வந்தால்,
                                    - நான் உன் நண்பன்...

உன் கனவில் நான் வந்தால்,
                                    - நான் உன் உயிர் நண்பன் ...

கவிதைகள் உலகம் ..smd safa..

நட்பு


நண்பர்களை ஒன்றாக இணைப்போம் ..
                                 நட்புடன் வாழ்ந்திடுவோம் :)

கற்பபை தாண்டி ஒரு சக உதிரமாய்
       சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுவோம் :)

        நட்பு பேச்சு இல்ல .. உயிர் மூச்சு :)


கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;