நட்பின் சாரலில்
நனையவைத்தாய்
எனக்குள் குளிர
உனக்குள் கொடுகினாய்...!
கோபத்தின் சுவாலையில்
கொதிக்கும்போதெல்லாம்
அன்பால் ஊதி
அணைய வைத்தாய் ...!
சாவின் விளிம்பில்
தடுமாறுகையில்
சத்தியம் வாங்கி
புதிய விடியலை
பூக்களாய் புலர்வித்தாய் .......!
தூரம் எம்மை
அண்மையாக்கிய அந்த
அழகிய காலம்
இப்போது அழுகிறது ...!
மறுமொழி சொல்லவும்
வாய்ப்பிழந்த
வஞ்சகன் ஆக்கியேன்
வாராமல் சென்று விட்டாய்...!
உன்னை தேடுவதும்
உயிரை காப்பதுமாய்
ஒவ்வொரு பொழுதையும்
உனக்காய் கழிக்கின்றேன் ...!
உள்ளன்பில் உருகும்
உன்நினைவு பொக்கிசங்கள்
விழிகளுக்குள் வந்து
வீதியை மேய்கிறது....!
ஒருதடவை வந்து செல்
மன்னிப்பு கேட்டுவிட்டு
மரணமாகிலும்
மனமுவந்து ஏற்கின்றேன் ...!
சாயும் போது கேட்கின்றேன்
முட்டுக்கொடுத்து
முதுகெலும்பை நிமிர்த்த வேண்டாம்
எட்டி நின்றாவது எனை பார்த்து செல் ..!
வேர்களோடு புதைகிறேன்
சத்தியம் மடிந்தாலும்
சந்ததி ஆவது
உன்னை வாழ்த்தட்டும்....!

தாதி தூது சொல்லி
தலைவன் வர
இதுவொன்றும் காதலல்ல
நாம் காதலர்களும் அல்ல...!
இது காலத்தை உருக்கி
காத்திருப்பால் செதுக்கிய
நட்பெனும் பசுந்தேர்
இழுக்க வடம் வேண்டாம்
இதயமே போதுமானது ...!
ஆதலால் வந்துவிடு
ஒருதடவை இழுத்து

ஒதுங்கிக் கொள்கின்றேன்
ஒவ்வாமை உணர்விலிருந்து.....!
முடிந்தால்
பக்குவப்படுத்தாதே
பாவப்பட்ட நண்பனின்
கண்ணீர் கையொப்பம்
காற்றிலாவது கரைந்து விடட்டும்....!
கவிதைகள் உலகம் ..smd safa..