தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..
சோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தனிமை


நீ இல்லாத ஒவ்வொரு
நொடிகளும் எனக்கு வேதனையாக
தான் இருக்கின்றது அன்பே ....
என் அருகில் நீ இல்லை
என்பதால்அல்ல
உன் அருகில் நன் இல்லை
என்பதால்...
I_Miss_Uuuuu...

கவிதைகள் உலகம் ..smdsafa..

நேசித்தலின் வலி

கவிதைகள் உலகம் ..smdsafa..

நேசிப்பின் வித்தியாசம்


இவ் உலகில் யாரையும்
எல்லை மீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த
அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ
சந்தித்திருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்
வேறு எதையும் எதிர்
பார்த்து விடாதே,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே....!

கவிதைகள் உலகம் ..smdsafa..

கண்ணீரின் வலி



ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீரை விட

அவர்களை இழக்க கூடாது...
என்று நினைக்கும் போது
வரும் கண்ணீருக்கு தான்
வலி அதிகம்..


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ தந்தவை


மறக்காது மரிக்காது,


மனதைவிட்டு அகலாது !

மாறவும்செய்யாது,

மரணம் வரும்வரையில் !

தொடர்ந்தேதான் தீருமாம்,

தோள்களில் அமர்ந்தபடி !

அன்பே நீ தந்த அழகான வேதனைகள் !!



கவிதைகள் உலகம் ..smdsafa..

தாங்கமுடியாதது


நி உன் இதயத்தில் இருந்து என்னை தள்ளியதும்!
மிக உயரத்திலிருந்து படுக்குழி நோக்கி விழுவதாய் உணர்கிறேன்!
அநேகமாக அது கல்லறை என்று தான் நினைக்கிறேன்!
எனெனில்

உன்னால் ஏற்பட்ட பிரிவோ!
ஏமாற்றமோ! துரோகமோ!
என்னால்
ஏற்றுக்கொள்ளமுடியாதது!! தாங்கமுடியாதது!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

கோபக்காரி


உனக்கென்னடி,
காரணத்தை பிடித்து,
வேகத்தை வளர்த்து,
கோபமாகி விலகிப்போய்விடுகிறாய் !
என்னையும் என் உறவையும் !
எப்பொழுது தணிவாய்?
எந்த நிமிடம் இணைவாய் என்று புலராமல் !
எரிமலைக்குளம்புகள்,
எனது விழியில் புரண்டோட !
பார்வை மறையும் நீர்த்தேக்கத்தில் !
நீ வா என்று அழுகிறேன் !
பதிலுக்கு நீ சா என்கிறாயே !
காதல் போனால் கருணையுமா போய்விடும்?
கடவுளின் பிரதியாகவல்லவா பிரார்த்தித்தேன் உனை !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல் தோல்வியா


காதல் தோல்வியா?
அழு...
வாய்விட்டு அழு...
கதறிக்கதறி அழு...
உன்
கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும்வரை
அழு...
பின்பு
உலகத்தைப் பார்...
காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்..

கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் விழியோரம் நானிருப்பேன்


காலம் கடந்து,
என் கவிகளை
நீ வாசிக்கையில்,
உன்னிலிருந்து வெளியேற
வழியின்றி, வலியோடு...
உன் விழியோரம்
நானிருப்பேன்..!?
கண்ணீராக...

கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ இல்லாமல்


என் வாலிப வானம்
அமாவாசையானது
நிலவு நீ இல்லாமல்
என் இதயப் படகு
தவிக்கிறது
துடுப்பு நீ இல்லாமல்
என் இளமைச் சோலை
மணம் வீசவில்லை
மலர் நீ இல்லாமல்
என் வாழ்க்கைச் சாலை
வெறிச்சோடிக் கிடக்கிறது
வாகனம் நீ இல்லாமல்
ஆம்! தொடர்கின்றது
என் தனிமைப் பயணம்
ஒரு கணம் ஒரு யுகமாய்
ஒவ்வொரு பொழுதும் சோகமாய்..!

கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் நினைவுகளால்




உன்னை நினைக்க எனக்கு கிடைத்த வரம் 
உன்னை மறக்க எனக்கு கிடைத்த சாபம் 
உன் நினைவில் வாழ்கிறேன் 
உன் நினைவால் சாகிறேன் 
வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் 
வாழ்ந்து கொண்டே சாகிறேன் 
செத்த பிறகும் வாழ்கிறேன் 
உன் நினைவுகளால்..



கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ தந்த வலி



உன்னை 
என் மனதிற்குள் 
சிறைப்பிடித்து 
பூட்டி வைக்க 
தான் 
நினைத்தேன்.,


அனால் நீயோ.. 
என்னை 
புதைத்துவிட்டு 
புறம்
சென்றுவிட்டாயே..


கவிதைகள் உலகம் ..smdsafa..

கல்விச்சாலை




கண்ணிற்கு எட்டியும்
கனவாகவே..

வாழ்க்கை
பாடசாலையில்
தினந்தோறும்
மூன்றுவேளையும் தேர்வு
பசி..

ஒருவேளையாவது தேர்ச்சிபெற
உழைத்தபடி...


கவிதைகள் உலகம் ..smdsafa..

என்னை அழ வைத்தாய் நீ



பெற்றவளை அழ வைத்தேன்
பிரசவத்தில் பாசதந்தையை அழ
வைத்தேன் பிடிவாதத்தில்
அழகு தோழியை அழ வைத்தேன்
பிரிவில்
இத்தனை பாவங்களை செய்த
என்னை அழ வைத்தாய் நீ யாருக்கும்
தெரியாமல் மனதிற்குள் .....


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் விழியால்



உன் வலிகளை,
நீ தனிமையில் விவரித்தபோது,
என் விழிகள் பழுதுபட்டது !
அங்கே !
மொழிகள் பெரிதாய் உதவவில்லை !
என் ஆறுதலையும் அரவணைப்பையும்,
அன்பாய் வெளிப்படுத்த !
மாறாய் மதகுடைத்த வெள்ளமாய்,
நான் மனதுக்குள் அழத்தொடங்கியிருந்தேன் !


கவிதைகள் உலகம் ..smdsafa..

அழகில் இல்லை காதல் என்றவள்



[நா(ன்) என்ன அழகாவா இருக்கேன்

என்ன போய் காதலிக்கறே

என்று கேட்ட காதலனுக்கு

காதலி சொன்னது…]

அழியும் அழகில்
இல்லை காதல்...

அழியாத அன்பில்
இருக்கிறது காதல் என்று...

இன்று உன்னிடம் பேச துடிக்கும் என்னை
வெறுப்பாய் பார்ப்பது ஏனடி?? -ஷபா!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

பிரியாதவை



பிரிந்திருக்கிற நேரத்தை,
உணர்ந்தறிவது கடினம் !
வலுவாய் வளர்ந்துவிட்டது,
ஒருவர்மேல் ஒருவருக்கான காதல் !
மேலும் !
இவர்களை பிரிப்பது பாவத்தைக்கூட,
கொணர்ந்து சேர்க்கும் !
பேசாமல் சிதைக்காமல் விட்டுவிடலாமே !
இந்த சிட்டுக்குருவிக்கூட்டை !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் சீண்டலின்றி தவிக்கும்



நீ மீட்டுவாய் என்பதற்காகவே
கவிதை எழுதுவது போல் நடித்துக் கொண்டிருக்கின்றன
என் விரல்கள்

உன் சீண்டலின்றி தவிக்கும்
என் கவிதைகளுக்காகவேனும்
சீண்டிச் செல்லடா
என் பேனா முனையை..


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் சீண்டலின்றி தவிக்கும்



நீ மீட்டுவாய் என்பதற்காகவே
கவிதை எழுதுவது போல் நடித்துக் கொண்டிருக்கின்றன
என் விரல்கள்

உன் சீண்டலின்றி தவிக்கும்
என் கவிதைகளுக்காகவேனும்
சீண்டிச் செல்லடா
என் பேனா முனையை..


கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் உன்னை தொலைக்கவில்லை



நீ பிரிந்ததால்

நான் உன்னை தொலைக்கவில்லை

நீ என்னுள்

தொடர்கிறாய் கவிதையாக !!!!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;