உனக்கென்னடி,
காரணத்தை பிடித்து,
வேகத்தை வளர்த்து,
கோபமாகி விலகிப்போய்விடுகிறாய் !
என்னையும் என் உறவையும் !
எப்பொழுது தணிவாய்?
எந்த நிமிடம் இணைவாய் என்று புலராமல் !
எரிமலைக்குளம்புகள்,
எனது விழியில் புரண்டோட !
பார்வை மறையும் நீர்த்தேக்கத்தில் !
நீ வா என்று அழுகிறேன் !
பதிலுக்கு நீ சா என்கிறாயே !
காதல் போனால் கருணையுமா போய்விடும்?
கடவுளின் பிரதியாகவல்லவா பிரார்த்தித்தேன் உனை !!
கவிதைகள் உலகம் ..smdsafa..