காரணங்கள் சொல்ல எத்தனித்திருந்தால்,
நான் முயற்சிகளே எடுத்திருக்கமாட்டேன் !
உனது முடியாத காரியத்திற்கு !
முடியாது என்று ஒதுங்கவில்லை விலகி,
தோல்வி உன் தோள்களில் அமரும்வரை !
இயலாமை உனை சூழ்ந்த தருவாயில்,
எள்ளி நகையாடினாய் என் பங்களிப்பை !
எண்ணிப்பார்த்தேன் எனது போராட்டத்தை !
துணை நின்றேனே உன்னுடன் தளராமல் !
அதற்குத்தரும் பரிசா?
இந்த அவமானம் நண்பா?
வருத்தமில்லா வா எனைத்தேடி !
இனி எப்பொழுது விதி உன்னை விரட்டினாலும் !!
கவிதைகள் உலகம் ..smdsafa..