இருளில் இருந்த என்னை ஒளி
காண செய்தவள் அவள் ;
என்னை முதல் முதலில் காதல்
செய்த வளும் அவளே ;
இன்று வரை என்மேல் அக்கறை
கொண்டு நடப்பவள் அவள் ;
பல நாட்கள் என்னை தன்னுள்
முழ்க செய்தவள் அவள் ;
அவளுடன் இருந்த நான் தனிஉடல்
என்று ஆன பின்பு ,
என்னையிறுக்கி அணைத்து என் உடலினை
தன்னிதழால் நனைத்தவள் அவள் ;
இன்றும் என்னுள் ஒலிக்கும் அச்சத்தம்
என்தாய் எனக்கு தந்த முதல்முத்தம் . . .
கவிதைகள் உலகம் ..smdsafa..