ஐப்பசி வைகறைல்-
பெய்த சிறுமழையில்-
வீதியில் படுத்துறங்கும் -
அனாதை சிறுவனவன் -
குளிர்ந்த மழைநீரில் -
உடல் குளித்து .
வீதி வழியெல்லாம் -
தேகம் நடுநடுங்க -
நடந்து செல்கையிலே -
அங்கொரு வீட்டருகில் -
முள்ளு கம்பியிலே -
ஓரு சட்டைகண்டு-
குளிருக்கு இதமாக -
கிழிந்த சட்டையதை -
புத்தாடையாய் உடுத்தி .
அவன் வயிற்றின்-
வறுமை போக்க -
ஏதாவது கிடைக்குமென -
சாலை யோரத்தில் -
தேடித் திரிகையிலே -
குழந்தை யொன்று -
குப்பை மேட்டருகில் -
அரியாமல் வீ சியெரிந்த -
பலகார முண்டு .
தெருவில் நடக்கயிலே -
வீதிச் சிறுவர்கள் -
கொளுத்தி வீசியெறிந்த -
சிவந்த மத்தாப்பை -
எடுத்து சுழற்றையிலே-
இனிதாய் முடிந்ததிந்த -
அனாதை சிறுவனின் -
அறியாத தீபாவளி . . .
கவிதைகள் உலகம் ..smdsafa..