காரு வண்டி நிக்கும்
கார வீட்டுக்குள்ள
யாருமில்ல ?
ஏறு உழுத
ஏழைக்கெல்லாம் குடிக்க
கூழுமில்ல...
வெரலால ஓட்டு போட்டோமையா...
வெவரமில்லா கூட்டமையா...
வெலவாசி கூடிடுச்சான்னு ஒங்கள
என்னைக்கு கேட்டுருக்கோம்?
வெங்காயம் வாங்கத்தான் பேங்குல
லோனு போட்டுருக்கோம்.
ஊழல்வாதிக்கெல்லா
ஊருக்கு ஊர் பங்களா இருக்கு...
ஒழச்சு ஒழச்சு
ஓடா போனவன் ஒதுங்கத்தான்
ஓட்டு வீடு ஒண்ணுருக்கா?
ஒட்டுத்துணி தானிருக்கா?
இந்தியா நாளைக்கு
வல்லரசுன்னு சொல்றீக..
இன்னும் நாங்க
நடைபாதையில தானய்யா
படுத்திருக்கோம்.
கவிதைகள் உலகம் ..smdsafa..